தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை - (நடுத்தெரு நாராயணன்)

திண்ணை - (நடுத்தெரு நாராயணன்)

திண்ணை - (நடுத்தெரு நாராயணன்)


PUBLISHED ON : டிச 12, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நிறுவனத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றால், அதற் கான காரணங்களுள் இவற்றில் ஒன்று:

*அவன் மணி பார்த்து வேலை செய்கிறான்.

*அவன் எப்போதும் புலம்பல் கேசாக இருப்பான்.

*அவன் எப்போதும் முன்னோடியாக இருக்கவில்லை.

* அவன் ரத்தத்தில் உறுதியில்லை.

*அவன் தகுதிக்கு மேல் தன்னை நினைத்துக் கொள்வான்.

*அவன் தன் மீதே, நம்பிக்கையின்றி இருந்தான்.

*அவன் அடுத்த நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதில்லை.

*அவன் தன்னுடைய மனதை தொழிலில் வைக்கவில்லை.

*அவன் தன்னுடைய தவறுகளிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை.

*அவன் தன்னுடைய நண்பர்களைத் தன்னை விட தரம் குறைந்தவர்களிடையே தேர்ந் தெடுத்தான்.

*அவன் இரண்டாம் தர மனிதனாக இருப்பதில் திருப்தியடைந்தான்.

*அவன் தன்னுடைய திறமைகளை அரைகுறையாக, வேலை செய்வதின் மூலம் அழித்துக் கொண்டான்.

*அவன் தன்னுடைய சுய தீர்மானத்தில் செயல் பட்டதேயில்லை. அவன் எதையும், எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

*அவன் கடின உழைப்பை அரைகுறை வேலையில் ஈடுகட்டினான். அவன் எப்போதும், முன்னேறுவதை விட, பொழுது போக்குகளில் தான் ஆர்வம் காட்டுவான்.

* அரைகுறை வேலை செய்து பழகியதால், அவனுடைய உயர்ந்த கொள்கைகள் தளர்ந்தன.

*அவன் எப்போதும் தெரிந்து கொள்ள வில்லை. அவனுடைய சம்பளத்தின் மிகச் சிறந்த பகுதி, அவனுடைய சம்பள உறையில் இல்லை என்று!

— கண்ணதாசன் பதிப்பக வெளியீடான 'உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்!' நூலிலிருந்து....
***

இந்தியாவில் இஸ்லாமிய ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பிறகே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நாணயங்கள் ஏற்பட்டன. தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்களில், முகலாயர்களின் மத நம்பிக்கையைக் குறிக்கும், 'கலிமா' ஒருபுறமும், மறுபுறத்தில் அரசரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன், நாணயம் தயாரிக்கப்பட்ட இடத்தையும், வருடத்தையும் பொறித்திருப்பர்.

பொன் நாணயங்களை வட்ட வடித்திலும், சதுர வடிவத்திலும் தயாரித்தனர். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மொகலாய அரசர்களான அக்பர், ஜஹாங்கீர் காலத்திய நாணயங்கள், மிகவும் வேலைப்பாடுகள் உடை யவை.

வெள்ளி ரூபாய் நாணங்களையும், மொகலாய அரசர்களே வெளியிட்டனர். ஒரு, 'மொஹார்' பொன் நாணயம், பதினான்கு வெள்ளி ரூபாய் நாணயத்துக்குச் சமம். இந்தியா வுக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சு, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிகள், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இதையே பின்பற்றி நாண யங்களை வெளியிட்டு வந்தன. இத்துடன், ரூபாயின் பின்னங்களான அணா, அரையணா, காலணா நாணயங்களையும் உண்டாக்கினர்.

இஸ்லாமிய மதக் கோட்பாட்டின்படி, உருவத்தை செய்யக் கூடாது. அதனால், முகமது அரசர்களின் காலத்தில், நாணயங்களில் உருவங் கள் பொறிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, சரித்திர காலத்தைக் குறிக்க, அப்போது ஆண்ட அரசர்களின் பெயர், நாணயம் தயாரிக்கப்பட்ட இடம், காலம், குரானின் சில எழுத்துக்கள் ஆகியவையே நாணயங்களில் பொறிக்கப் பட்டிருந்தன.

— அனுராகம் பதிப்பக வெளியீடான, 'நாணயத்தின் கதை'  நூலிலிருந்து...

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us