PUBLISHED ON : ஏப் 03, 2022

அ நிறம் | அளவு
படத்தில் உள்ள, கேரளா, கோழிக்கோடு, பெருவண்ணமொழியைச் சேர்ந்த ஜான்சன், பிறந்த ஆறே மாதத்தில் போலியோ தாக்கி, படுக்கையில் விழுந்தார்.
இன்று, 43 வயதிலும் அதே நிலை தான். ஆனால், அவர் முடங்கி போய் விடவில்லை.
படுத்தபடியே மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் பணிபுரிந்த உஷா என்ற பெண், இவரை மணந்து, இரண்டு மகன்களையும் பெற்று இருக்கிறார்.
எல்.ஈ.டி., பல்புகள் புழக்கத்துக்கு வரும் முன்பாகவே, எல்.ஈ.டி., பல்புகளை ஜான்சன் உருவாக்கினாலும், அதற்கான, 'பேடன்ட்' உரிமை பெற முயலவில்லை.
கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, 500 குடும்பங்களுக்கு இலவசமாக எல்.ஈ.டி., எமர்ஜென்சி விளக்குகளை அளித்துள்ளார், இவர்.
— ஜோல்னாபையன்
