sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சம்பாதிப்பது தங்கவில்லையா?

/

சம்பாதிப்பது தங்கவில்லையா?

சம்பாதிப்பது தங்கவில்லையா?

சம்பாதிப்பது தங்கவில்லையா?


PUBLISHED ON : அக் 11, 2015

Google News

PUBLISHED ON : அக் 11, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்., 13 நவராத்திரி ஆரம்பம்

நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சம்பாதித்தும் தங்கவில்லையே என்றே வருந்துவர். சிலரது பொருள், உறவினர்களின் பொருட்டு, திருடும் போய் விடுகிறது. நோய், நொடியால் மருத்துவமனையில் பணத்தை இழப்பவர்களும் ஏராளம். ஆனால், இதெல்லாம் தங்கள் முன்வினை பயன் என்பதை, அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு, பணத்தை இழந்தவர்கள் இழந்ததைப் பெறவும், இனியாவது தங்களுடைய சம்பாத்தியம் கையில் தங்கவும் அனுஷ்டிக்க வேண்டியதே நவராத்திரி விரதம்!

சுகேதன் என்ற மன்னன், தன் மனைவி சுவேதினியுடன் நாடாண்டு வந்தான். அவன் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் வாழ்வது கண்டு, அவனது உறவினர்களே பொறாமைப்பட்டனர். அவனை வஞ்சகமாக அடித்து துரத்தி, நாட்டைக் கைப்பற்றினர். மனைவியுடன் காடு சென்ற சுகேதன் பல துன்பங்களுக்கு ஆளானான்.

பஞ்சு மெத்தையில் படுத்தவன், வெட்டவெளியில் தூங்கினான். காட்டிலுள்ள பூச்சிகள் அவன் உடம்பை கடித்தன; இதனால், உடல்நிலையும் பாதித்தது. கிட்டத்தட்ட மரண எல்லைக்கு சென்று விட்ட அவனை, தன் மடியில் அவனது தலையை வைத்து உறங்க வைக்க முயன்றாள் சுவேதினி.

அப்போது, அவ்வழியே வந்த ஆங்கீரசர் என்ற முனிவர் அக்காட்சியைக் கண்டு, தன் தவவலிமையால், அவர்களின் கதையைத் தெரிந்து, இரக்கம் கொண்டு, அவர்களை ஆசிர்வதித்ததுடன், தன் ஆஸ்ரமத்திற்கும் அழைத்துச் சென்றார்.

'மகளே... நீ புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதி முதல், நவமி திதி வரை ஒன்பது நாட்கள், அம்பாளை நினைத்து விரதம் இரு; அம்பாளை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் திரிசக்திகளாக கருதி வழிபாடு செய். அந்த பராசக்தி மனம் மகிழ்ந்து உன் துன்பத்தைப் போக்குவாள்...' என்று கூறினார்.

சுவேதினியும் பக்தியுடன், அவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்தாள். குழந்தையில்லாத அவள் கர்ப்பிணியானாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு, சூரியப் பிரதாபன் என பெயரிட்டனர். சிறுவனுக்கு, பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்தார் ஆங்கீரச மகரிஷி. அத்துடன், வீரப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

அவனுக்கு 18 வயதானதும், அவன் தன் நாடு சென்று, தந்தையின் உறவினர்களுடன் போரிட்டு, நாட்டை மீட்டான். இழந்த நாட்டை பெற்று மீண்டும் அரசன் ஆனான் சுகேதன்.

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, அது, நல்ல விஷயங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே முக்கியம். சம்பாதிக்கிற பணம் மருத்துவமனை, உபயோகமற்ற செலவுகள், ஆடம்பரம் என்று செல்வதை தடுக்க, தானத்தை அதிகப்படுத்த வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு தானம் செய்கிறோமோ, அந்தளவுக்கு தேவையற்ற செலவுகளும், அவதியும் குறையும்; இதுவே மகான்கள் நமக்கு கற்று தந்த பாடம்.

இந்த நவராத்திரியிலிருந்து, பயனுள்ள செலவுகளை மட்டும் செய்து, தானம் செய்வதை அதிகரிக்க உறுதியெடுப்போம்!

தி.செல்லப்பா






      Dinamalar
      Follow us