தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : அக் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டுவிட்டரில் செய்தி வெளியிடும் விஜய்!

மாதம் ஒருநாள், ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக, ரசிகர்களை சந்திப்பதில்லை. இந்நிலையில், தன் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காக, தற்போது, டுவிட்டர் மூலம், அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய். அதன்மூலம், தன் நடிப்பை பற்றி அவர்கள் சொல்லும் விமர்சனங்களை கேட்டறிந்து வருபவர், தன்னைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், அவ்வபோது வெளி யிட்டு வருகிறார். இதற்காக, தன் ரசிகர் மன்றங்களுக்கு, கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகளையும், செய்து கொடுத்து உள்ளார்.

— சினிமா பொன்னையா

* சினிமாவில் இளவட்ட ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணமெல்லாம் இல்லை. எந்த மாதிரி முதிர்ச்சியான கெட்டப்பிலும் இமேஜ் பற்றி கவலைப்படாமல் நடிப்பேன். இந்த விஷயத்தில், நான் அஜீத் பாணியை கடைப்பிடிக்கிறேன்... என்கிறார் விஜயசேதுபதி.

திருமணத்துக்கு தயாராகும் த்ரிஷா!

கடந்த ஆண்டே, தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள நினைத்தார் த்ரிஷா. ஆனால், அந்த நேரத்தில் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள, ராணாவின் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதனால், திருமணம் செய்து கொள்வதை தற்காலிகமாக தள்ளி வைத்தனர். ஆனால், இப்போது, ராணா தன் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி விட்டார். இந்த தகவலை, அவர் த்ரிஷாவுக்கு தெரிவித்தவுடன், அவர் முகத்தில், கல்யாண களைகட்டியுள்ளது. கைவசமுள்ள படங்களை வேகவேகமாக முடித்துக் கொடுத்துவிட்டு, ராணாவை திருமணம் செய்து கொள்ள, தன்னை தயார்படுத்த ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.ஆடி, ஓடி நிலைக்கு வந்தது!

— எலீசா

இந்தியில் ரீ-மேக்காகும் ராஜாராணி!

தமிழில், விஜயகாந்தை வைத்து, தான் இயக்கிய, ரமணா படத்தை, இந்தியில், ரீ - மேக் செய்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து, தான் தமிழில் தயாரித்துள்ள, ராஜாராணி படத்தையும், இந்தியில், ரீ - மேக் செய்கிறார். இப்படத்திலும் நடிப்பதற்கு, ஆர்யா - நயன்தாரா ஆசைப்பட்டனர். ஆனால்,'நீங்கள் இந்திக்கு செட்டாக மாட்டீர்கள்...' என்று தவிர்த்து விட்ட முருகதாஸ், ரன்பீர் - தீபிகா படுகோனேயிடம் பேசி வருகிறார். ரமணா ரீ- மேக் வேலைகள் முடிந்ததும், இதன் வேலைகளை துவங்குகிறார்.

—சினிமா பொன்னையா

சிம்ரன் இடத்துக்கு முயற்சிக்கும் ஹன்சிகா!

ஹன்சிகாவின் சமீ பத்திய நடிப்பை பார்த்த சிம்ரன், 'ஆரம்பத்தில் நான் நடித்தது போலவே உள்ளது...' என்று கருத்து கூறியுள்ளார். அதோடு, 'படத்துக்கு படம் கவர்ச்சி பொம்மையாக நடிக்காமல், பர்பாமென்சுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்தால், இன்னமும் காலியாக இருக்கும், என் இடத்தை, நீ கைப்பற்றி விடலாம்...' என்று, ஹன்சிகாவை உசுப்பேத்தி விட்டுள்ளார் சிம்ரன். அதனால், சிம்ரன் நடித்த சில முக்கிய படப் பட்டியலை எடுத்துக் கொண்டு, 'இந்த மாதிரி கேரக்டர் இருந்தால், என்னை தொடர்பு கொள்ளுங்கள். உடனே கால்ஷீட் தருகிறேன்...' என்று, சில இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார் ஹன்சிகா.உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது.

— எலீசா

டாப்ஸி திடீர் முடிவு!

நடிகை டாப்ஸி, ஆரம்பம் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருப்பதால், அடுத்து, அவரைத் தேடி வந்த படங்கள் எல்லாமே, டபுள் ஹீரோயினி சப்ஜெக்ட் தான். ஆனால், அதில் லாரன்சின், கங்கா படத்தை மட்டுமே ஓ.கே., செய்து நடித்து வரும் டாப்ஸி, பல படங்களை திருப்பி அனுப்பி விட்டார். மேலும், இனி, இரண்டு நாயகி கதை களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருப்பவர், சிங்கிள் ஹீரோயினி படம் என்றால், வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயங்க போவதில்லை என்றும், கூறுகிறார். இட்டாருக்கு இட்டப் பலன்!

— எலீசா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us