sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 26, 2014

Google News

PUBLISHED ON : ஜன 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தயாரிப்பாளரான விஜயசேதுபதி!

சங்கு தேவன் என்ற படத்தை, முதல் காப்பி அடிப்படையில், ஒருவரிடம் பணம் பெற்று தயாரித்து வந்தார் நடிகர் விஜயசேதுபதி. ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தற்போது ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை, தானே தயாரித்து, நடிக்கவிருக்கும் விஜயசேதுபதி, மற்றவர்களிடம் பணத்தை எதிர்பார்த்து, படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால், இம்முறை தன் சொந்த பணத்திலேயே இப்படத்தை தயாரிக்கிறார். ஆக, தனுஷ், விஷால், ஆர்யாவைத் தொடர்ந்து, விஜயசேதுபதியும் தயாரிப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

சினிமா பொன்னையா

ஹன்சிகாவை இழுக்கும் இளவட்டங்கள்!

நயன்தாராவைப் போலவே, ஹன்சிகாவுடனும் ஒரு படத்திலேனும் டூயட் பாட வேண்டும் என்று, சில வளர்ந்து வரும் ஹீரோக்கள் ஆவலில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மான் கராத்தே படத்தில், சிவகார்ததிகேயனுடன் எந்த தயக்கமும் காட்டாமல், அதிக நெருக்கமாக நடித்திருப்பதுடன், பாடல் காட்சிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போல், படு கவர்ச்சியாக நடித்து, சிவகார்த்திகேயனை திக்குமுக்காட வைத்து விட்டார் என்பதுதான். இந்த செய்தியை அறிந்த இளவட்ட ஹீரோக்கள், தாங்கள் நடிக்கும் படங்களின் இயக்குனர்களும், படாதிபதிகளும் வேறு நடிகைகளை, 'புக்' செய்ய இருந்தாலும், அவர்கள், மனதை மாற்றி, ஹன்சிகாவை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

எலீசா.

குத்தாட்ட நடிகையாகும் ஆண்ட்ரியா!

விஸ்வரூபம் -2 மற்றும் என்றென்றும் புன்னகை படங்களில், இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்த ஆண்ட்ரியா, அதைத் தொடர்ந்து, தரமணி மற்றும் அரண்மனை படங்களில், மெயின் ஹீரோயினியாகி விட்டார். அதனால், இந்த இமேஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இதுவரை நடித்ததை விடவும், கவர்ச்சி அவதாரம் எடுக்கப் போகிறார் ஆண்ட்ரியா. இப்போதெல்லாம், கதாநாயகிகளே குத்தாட்டப் பாடலுக்கும் ஆடுவதால், சில கமர்ஷியல் இயக்குனர்களிடம், தானும், குத்தாட்ட நடனத்துக்கு தயாராக இருப்பதாக கூறி வருகிறார். கொடுக்கிறதைக் கொடுத்தால், குடம் கொண்டு தண்ணீருக்குப் போவாள்!

எலீசா.

சிவகார்த்திகேயன் கவனம்!

தனக்கு ஜோடியாக, மேல்தட்டு ஹீரோயினிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன், ஆர்டர் போடுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து அவர் கூறும்போது, 'எதிர்நீச்சல் படத்திற்கு பின், முன்னணி நடிகைகளே என்னுடன் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதனால், நான் நடிக்கும் பட நிறுவனங்களுக்கு போன் போட்டு, அவர்களே சான்ஸ் கேட்கின்ற னர்...' என்று சொல்லும் சிவகார்த்திகேயன், 'என் கவனம் ஹீரோயினிகள் மீது இல்லை. வெற்றியின் மீது மட்டுமே இருந்து வருகிறது...' என்கிறார்.

சி.பெ.,

மோகன்லால் வேடத்தில் நடிக்க விரும்பும் விக்ரம்!

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து, கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான படம், திரிஷ்யம். இப்படத்தைப் பார்த்த சிலர், தமிழில் ரீ-மேக் செய்தாலும் மெகா ஹிட்டாகும் என்று, அந்த உரிமையை வாங்கி விட்டனர். இந்நிலையில், மோகன்லால் நடித்த ரோலில் கமல் நடித்தால், பொருத்தமாக இருக்கும் என்று முயற்சி எடுத்தனர். ஆனால், விஸ்வரூபம் - 2, ரிலீசானதும் உத்தமவில்லன், படத்தில் கமல் நடிக்கயிருப்பதால், அவர் உடன்படவில்லை. இதை கேள்விப்பட்ட விக்ரம், அப்படத்தில் தான் நடிப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும், மோகன் லால் நடித்த வேடம் விக்ரமிற்கு பொருந்துமா என்று, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

— சினிமா பென்னையா

கறுப்பு பூனை!

* சில இளவட்ட ஹீரோக்களுடன், 'சீக்ரெட்' நட்பு வைத்திருந்த அந்த தில்லாலங்கடி நடிகையின் லீலைகள், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பேரன்ட்சுக்கு தெரியவர, நடிகையை கோடம்பாக்கத்தை விட்டே விரட்டியடித்தனர். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு பிறகு, மேற்படி நடிகை மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்திருப்பதால், தங்களது வாரிசுகளை நடிகை, 'அட்டாக்' செய்யாமல் இருக்க, அவர்களுக்கு கட்டுக்காவல் போட்டுள்ளனர்.

* தமிழக மச்சான்சை மறக்க முடியல...' என்று சொல்லிக் கொண்டு, கோலிவுட்டில் டேரா போட்டிருக்கும் அந்த நடிகை, தீவிர அரசியலில் குதிக்க, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், தான் ஜோடி சேர்ந்து நடித்த ஒரு நடிகரின் கட்சியில், தன்னை இணைத்துக் கொள்ள நடிகை ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், மேற்படி நடிகரோ, 'கவர்ச்சியை காட்டி ஓட்டு வாங்கும் நிலையில் நானில்லை...' என்று சொல்லி, நடிகையை விரட்டியடித்து விட்டார்.

துணுக்கு மூட்டை!

* நடிகர் விமல் - பிரியதர்ஷினி தம்பதிக்கு, ஏற்கனவே ஆரிக் என்றொரு மகன் உள்ள நிலையில், ஜன.,9ம் தேதி இரண்டாவது ஆண் குழந்தை

பிறந்துள்ளது.

* அருண் விஜய், கார்த்திகா நடித்து வந்த டீல் படம், ஆங்கில வார்த்தை கொண்ட இப்பட டைட்டீலுக்கு கேளிக்கை வரிச்சலுகை கிடைக்காது என்பதால், வா என, மாற்றப் பட்டுள்ளது.

*மங்காத்தாவில் இருந்து, நெகடிவ் ரோல்களில் அஜீத் நடித்து வருவதையடுத்து, அப்பட நாயகியான த்ரிஷாவும், வில்லி வேடங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து

உள்ளார்.

* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தையடுத்து, விஜய் நடிக்கும் படத்தில், பிரியங்கா சோப்ரா அவருக்கு ஜோடியாகிறார். இவர்கள் ஏற்கனவே தமிழன் என்ற படத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, 'டூயட்' பாடியவர்கள்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us