தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : அக் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்ரமைக்கண்டு பயந்த மம்மூட்டி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள, ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை உலகமெங்கிலும், ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். குறிப்பாக, தமிழகம் போலவே, கேரளாவிலும் நிறைய தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். அதனால், 'கட் அவுட்' மற்றும் தோரணங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்ரம் ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி தினத்தில் கேரளாவில் வெ ளியாக இருந்த மம்மூட்டியின், வர்ஷம் படம், ஐ படத்துடன் போட்டி போட்டு தோற்றுவிட்டால், தனக்குதான் தான் அவமரியாதை என்று, தன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்குமாறு கூறி விட்டார் மம்மூட்டி.

— சினிமா பொன்னையா

அண்ணாச்சியாகவே மாறிய கமல்!

எந்த ஒரு கதாபாத்திரத்தை தொட்டாலும், அதுவாகவே மாறி விடுகிறார் கமல். தற்போது, பாபநாசம் படத்தில் திருநெல்வேலிக்காரராக நடித்து வரும் கமல், வேஷ்டியை மடித்து கட்டி, மஞ்சப்பையை கையில் வைத்து, பக்கா அண்ணாச்சியாகவே மாறி விட்டார். அதோடு, ஏற்கனவே நெல்லை தமிழை ஓரளவு பேசி பயிற்சி எடுத்த பின்னரே, நடிக்கத் துவங்கிய கமல், இப்போது நெல்லையில் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் கூடும் மக்களிடம் பேசி, அந்த வட்டார மொழியில் பக்காவாக பேசி வருகிறார். இதனால், கமலைப் பார்த்து, 'நம்ம ஊர் அண்ணாச்சியாட்டமே மாறிட்டாரே...' என்று வியக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

— சி.பொ.,

முன்னணி நடிகைகளின் சம்பள பட்டியல்!

நடிகைகளின் சம்பளமானது படத்துக்கு படம் உயர்ந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில், அனுஷ்கா கடந்த ஆண்டு வரை இரண்டு கோடி சம்பளம் வாங்கியவர், தற்போது, ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி சரித்திர படங்களில் நடித்த பின், தடாலடியாக மூன்று கோடிக்கு சம்பளத்தை உயர்த்தி விட்டார். அடுத்து நயன்தாரா, இது நம்ம ஆளு மற்றும் நண்பேன்டா படங்களில் நடிக்க ஒன்றரை கோடி வாங்கியிருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கோடியாக்கி விடுவார். சமந்தாவை பொறுத்த வரை தெலுங்கு படங்களில் நடிக்க, இரண்டு கோடி ரவுண்டாக வாங்கி வருபவர், தமிழில், கத்தி படத்திற்கு ஒன்றரை கோடி வாங்கியிருக்கிறார். காஜல் அகர்வால் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொள்கிறார். ஆனால், ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் கெட்டியாக இருந்த போதும், ஒரு கோடி தான் வாங்குகிறார். ஹன்சிகா இதுவரை, 60 முதல், 75 லட்சம் வரை வாங்கி வந்தவர், இப்போது, அரண்மணை படத்துக்கு பின், ஒரு கோடியை தொட்டிருக்கிறார். மேலும், தமன்னா ஒரு கோடியும், அஞ்சலி, 75 லட்சமும் வாங்குகின்றனர். இருக்கிற போது பெருங்கும்பம், இல்லாத போது காலி கும்பம்!

— எலீசா

மறுவாழ்வு மையத்தில், ஸ்வேதா பாசு!

ஐதராபாத்தில் நடந்த போலீஸ் ரெய்டில், விபசார வழக்கில் சிக்கியவர் நடிகை ஸ்வேதாபாசு. இவரை தற்போது மறுவாழ்வு மையத்தில் வைத்துள்ளனர். ஆனால், இதை எதிர்த்து ஸ்வேதா பாசுவின் தாயார், 'மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்திருப்பது என் மகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல்...' என்று கூறி, அவரை வீட்டிற்கு அனுப்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐதராபாத் கோர்ட் நீதிபதிகள், 'ஆறு மாதங்களுக்கு ஸ்வேதாபாசுவுக்கு ஆலோசனையும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது...' என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். அதனால், இந்த மனுவை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் ஸ்வேதா பாசுவின் தாயார் மேல் முறையீடு செய்யப் போகிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தாரா நடிகை நடிக்கும் படமொன்றில், செகண்ட் ஹீரோயினாக இழுக்கப்பட்ட, 'ஐ' நடிகையை இப்போது முதன்மை நாயகியாக்கி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தாரா, வேண்டுமென்றே ஸ்பாட்டுக்கு லேட்டாக சென்று, தன் எதிர்ப்பை காண்பித்து வருகிறார். அதோடு, கேமரா முன் நடிப்பில், 'சின்சியாரிட்டி' இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டு, இயக்குனருக்கு டென்ஷனை ஏற்படுத்தி வருகிறார்.

'வாரிசு' நடிகையுடன் நடித்து வரும் திமிரு நடிகரை, அப்படத்தின் இயக்குனர், தன்னுடைய அடுத்த படத்திற்கும், திமிரு நடிகரையும், வாரிசு நடிகையும் ஜோடி சேர்ப்பது குறித்து கூறியபோது, 'அந்த நடிகையின் நடிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால், எனக்கு, 'லக்'காக அமைந்த அந்த மேனன் நடிகைக்கே, அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கலாம்...' என்று சிபாரிசு செய்துள்ளார்.

துளிகள்!

* இந்தியில் கவுதம் மேனன் இயக்கிய, ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், மீண்டும் இந்திப்படங்களில் நடிக்க கல்லெறிந்து வருகிறார்.

* விஷால் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும், பூஜை படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கோவையில் நடந்து வந்த நிலையில், ஒரு பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து செல்கின்றனர்.

* தான் நடித்த படங்கள் வெற்றி பெற்ற போதும், தமன்னாவின் மார்க்கெட் சரிந்தே கிடக்கிறது. இதனால், 'என் மார்க்கெட்டை வீழ்த்த சதி நடக்கிறது...' என்று சில நடிகைகள் மீது புகார் கூறி வருகிறார் தமன்னா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us