தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : டிச 13, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிகம் சம்பளம் கேட்ட நயன்தாரா!

கமல் மற்றும் விக்ரம் தவிர, தமிழ் சினிமாவிலுள்ள எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார் நயன்தாரா. கமலுடன் நடிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், விக்ரமுடன், மர்மமனிதன் படத்தில் நடிக்க அழைத்த போது, 'அவருடன் நடிக்க வேண்டுமென்றால், கூடுதலாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்...' என்றார். காரணம் கேட்ட போது, 'அவர் நடித்த பல படங்கள் ஓடவில்லை; நான் நடித்தால் அந்த படம் ஓடும் என்பதற்காகத் தானே, என்னிடம் கால்ஷீட் கேட்கிறீர்கள்...' என்றார். அதையடுத்து, அவர் கேட்ட தொகையை கொடுத்து, ஓகே., செய்துள்ளனர்.

சினிமா பொன்னையா

எமிஜாக்சன் கொடுக்கும், 'ஷாக்!'

லண்டன் நடிகையான எமி ஜாக்சன், தமிழ் படங்களில் நடிக்கும் போது தான், உடம்பு முழுக்க போர்த்தி, நடிக்கிறார். ஆனால், படப்பிடிப்பு தலங்களுக்கு வரும் போது, துண்டு துக்கடா அணிந்து வந்து, படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். அத்துடன், உடன் நடிக்கும் நடிகர்களுக்கு, தன் லண்டன் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளில் ஆபாச ஆட்டம் போட்ட வீடியோக்களை தன் மொபைல் போனில் காண்பித்து, அவர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

எலீசா

ரஜினி டைட்டிலில் விஜயசேதுபதி!

ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த படங்களின் தலைப்பில், முன்னணி நடிகர்கள் பலரும் நடித்த வரும் நிலையில், தற்போது விஜயசேதுபதியும், ரஜினி நடித்த, தர்மதுரை படத்தின் தலைப்பில், ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை, விஜய சேதுபதியை முதன் முதலாக, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக்கிய சீனுராமசாமி இயக்குகிறார்.

சி.பொ.,

ராஜமவுலியை கவர்ந்த அரவிந்த்சாமி!

நீண்ட இடைவெளிக்கு பின், தனி ஒருவன் படத்தில், வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இப்படத்தில், இவரின் நடிப்பை பலரும் புகழ்ந்து வந்த நிலையில், பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியும், அரவிந்த்சாமியின் நடிப்பை பாராட்டியுள்ளார். அத்துடன், அவருடன் இணைந்து பணிபுரிய, ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சி.பொ.,

கலாய்த்த கவுண்டமணி!

விவசாயி வேடத்தில், 49ஓ படத்தில் நடித்த கவுண்டமணி, தற்போது, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில், படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகை விடுபவராக நடித்துள்ளார். இப்படத்தில், தற்போதைய இளவட்ட கதாநாயகன்களின் நடிப்பை, தன் பாணியில் கிண்டலடித்து, டயலாக் பேசியுள்ளார். இதனால், மேற்படி படம், திரைக்கு வரும் போது, இளவட்ட நடிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

அஞ்சான் நாயகி, 'டூ - பீஸ்' நடிகையாக உருவெடுத்த பின், சாதாரண விழாக்களுக்கு கூட, கவர்ச்சி உடையிலேயே வருகிறார். அதனால், அவர், அரங்கிற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் வி.ஐ.பி.,களின் ஒட்டு மொத்த பார்வையும் அவர் மீதே திரும்புகிறது. அதில் சிலர், நடிகையின் அருகே அமர்ந்து, அவர் மீது உரசியபடி கிளுகிளுப்பாக பேசுகின்றனர்; அம்மணியும், அவர்களுக்கு கம்பெனி கொடுக்கிறார்.

மெரினா நடிகர், காமெடியாக பேசுகிறேன் பேர்வழி என்று, சில நடிகையரைப் பற்றி, தவறான செய்திகளை, பேட்டிகளில் கூறியதை அடுத்து, அவருக்கு, எதிர்ப்புகள் பெரிய அளவில் எழுந்தது. அதில், ஒரு நடிகரின் தந்தைகுலத்தின் ரசிகர்கள், அவரை விமான நிலையத்தில் தாக்கினர். இதனால், இப்போது யாரைப் பற்றியும், 'கமென்ட் அடிப்பதில்லை; அத்துடன், 'அடக்கி வாசிப்பது தான், வளர்ச்சிக்கு நல்லது...' என்று, வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.

சினி துளிகள்!

* ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து, தான் நடிக்கும் புதிய படத்தில், பெண் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

* பத்து எண்றதுக்குள்ள படத்தின் தோல்வி கொடுத்த அதிர்ச்சி காரணமாக, தெலுங்கு சினிமாவில், விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சமந்தா.

* குட்டிப்புலி மற்றும் கொம்பன் படங்களை தொடர்ந்து, முத்தையா இயக்கும், மருது படத்திலும், நாயகியாக நடிக்கிறார், லட்சுமிமேனன்.

* வில்லன் வேடத்தை தவிர்த்து, வித்தியாசமான கதாபத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார், பிரகாஷ்ராஜ்.

* ஒரு இந்தி படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், நடிகை ஹேமமாலினி.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us