sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 27, 2015

Google News

PUBLISHED ON : டிச 27, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரியில் மீண்டும் நடிக்கிறார்!

வேதாளம் படத்தின் வசூல், 100 கோடியை தாண்டியுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம், அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராகிறது. அப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாரிப்பதால், தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி, பிரபல தெலுங்கு நடிகர் - நடிகையரும் நடிக்கயிருக்கின்றனர். தற்போது, காலில் அறுவை சிகிச்சை செய்ததால், ஓய்வில் இருக்கும் அஜித், ஜனவரியில் இருந்து புதிய படத்தில் நடிப்பார் என்று, அவரது நட்பு வட்டாரம் கூறுகிறது.

சினிமா பொன்னையா

பேய்களுடன் நடித்த ஜெயம் ரவி!

மிருதன் படத்தில், பேயாக நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்துக்காக, தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நூற்றுக்கணக்கான பேய்களுடன், தானும் ஒரு பேயாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஹாலிவுட் பட கதாநாயகர்களுக்கு இணையாக, இப்படத்திற்காக தன், 'கெட்டப்'பை மாற்றி நடிக்கிறார்.

சி.பொ.,

நித்யா மேனன் காட்டமான பதில்!

ஓ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா - ௨ படங்களில் நடித்த நித்யா மேனன், குள்ளமாக, குண்டாக இருப்பதாக குறை கூறும் சில சினிமாக்காரர்கள், 'இதனாலேயே, நித்யா மேனன் பார்ட்டிகளுக்கு வருவதில்லை...' என்றும் அவரை கேலி செய்கின்றனர். இதனால், செம கோபத்தில் இருக்கும் நித்யாமேனன், 'என் உருவம் இயற்கை கொடுத்தது; அதனால், என் திறமையை மட்டுமே பாருங்கள். அதோடு, பார்ட்டிகளில் கலந்து, நடிகர்களுடன் ஒட்டி உறவாடி, சினிமா வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை...' என்று, அவர்களுக்கு காட்டமாக பதில் கொடுத்துள்ளார். ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்!

எலீசா

கமலின், அப்பா - அம்மா விளையாட்டு!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், கமலை வைத்து, சாணக்யா என்ற படத்தை இயக்கிய, டி.கே.ராஜீவ் குமார், தற்போது, கமலை வைத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில், சத்யா படத்தில் நடித்த அமலா நாகார்ஜுனா மற்றும் இந்தி நடிகை ஜரீனா வஹாப், கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். தமிழில், இப்படத்திற்கு, அப்பா - அம்மா விளையாட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சி.பொ.,

கிளுகிளுப்பு காட்சியில் த்ரிஷா!

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன், மணிரத்னம் இயக்கிய, ஆயுத எழுத்து படத்தில், த்ரிஷாவுடன் இணைந்து நடித்த சித்தார்த், தற்போது, அரண்மனை - ௨ படத்திற்காக, அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில், அவர்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளது. இதற்கு முன் வரை, கவர்ச்சிக்கு எக்கச்சக்க கண்டிஷன் போட்டு வந்த த்ரிஷா, தற்போது, தடைகளை அகற்றி விட்டதால், இந்த, 'ஹரர்' படத்திலும், அவர்களுக் கிடையிலான, கிளுகிளுப்பு காட்சிகளை அதிகப்படுத்தி யுள்ளார், இயக்குனர் சுந்தர்.சி., வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

எலீசா

விஷாலின், 'பிளான்!'

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த, பாயும் புலி படம் தோல்வியடைந்ததால், பல ஏரியாக்களில், வினியோகஸ்தர்களின் கையை, பலமாக கடித்து விட்டது. அதனால், 'அவர் நடிக்கும் அடுத்த படத்தை, தங்களுக்கு, குறைந்த விலையில் தந்து, நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்...' என்கின்றனர் வினியோகஸ்தர்கள். எனவே, தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில், தான் தயாரித்து நடிக்கும், கதகளி படத்தை, தன் பேனரில் வெளியிட்டால் பிரச்னை என்று பாண்டிராஜின், 'பசங்க புரொடக் ஷன்ஸ்' சார்பில் வெளியிடுகிறார் விஷால். இதனால், கதகளி வெளியாகும் நேரத்தில் வினியோகஸ்தர்கள் கொடி பிடிப்பர் என்று கூறப்படுகிறது.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

ஏற்கனவே, விரல் வித்தை நடிகர் நடித்து வந்த இரு படங்கள் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது, மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வந்து படமும், இழுபறியில் கிடக்கிறது. விரல்வித்தை படம் என்றதும், பைனான்ஸ் கொடுப்பவர்கள் தயங்கி நிற்கின்றனர். இதனால், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திணறிக் கொண்டு நிற்கிறார் மேனன்.

அகர்வால் நடிகைக்கு தன், இரண்டெழுத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சுள்ளான் நடிகர், அந்த படத்தின் தோல்வி காரணமாக, அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க, வேறு நடிகையை தேடி வந்தார். இச்செய்தி அகர்வாலின் காதுக்கு சென்றதை அடுத்து, ஜதராபாத்தில் இருந்து ஓடிவந்து, நடிகருடன் ரகசிய மீட்டிங் போட்டு கவிழ்த்து, அப்படத்தில் நடிப்பதற்கான, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன் பணமும் வாங்கி விட்டார்.

சினி துளிகள்!

* இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து, தர்மதுரை படத்திலும், யுவன்ஷங்கர் ராஜா இசையில், அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், வைரமுத்து.

* விக்ரமின், மர்ம மனிதன் படத்தில், காஜல் அகர்வால் நடிக்கயிருந்த நிலையில், இப்போது, நயன்தாராவை அப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.

* மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா, திருமணத்தின் போது அலங்காரம் செய்திருந்தது போன்று, தன் திருமணத்திலும் அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை தமன்னாவிற்கு உள்ளது.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us