
சென்னை அணியை வாங்கிய சன்னிலியோன்!
பாலிவுட் சினிமாவில் கொடி நாட்டியுள்ள சன்னிலியோன், தமிழில் கால் பதிக்க, வடகறி படத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினார்; ஆனால், அது ஒர்க் -அவுட் ஆகவில்லை. அதனால், தமிழகத்தில் அழுத்தமாக முத்திரை பதிக்க, தருணம் பார்த்திருந்தார். சினிமாத்துறையினர் விளையாடும், நட்சத்திர கிரிக்கெட் போன்று, பி.சி.எல்., என்று பெயரிடப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி, விரைவில் சென்னையில் துவங்க இருப்பதை முன்னிட்டு, சென்னை சின்னத்திரை கிரிக்கெட் அணியை வாங்கி விட்டார் சன்னிலியோன். அதற்கான விளம்பர வேலைகளை தற்போது முடுக்கி விட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
அரசியல்வாதியான த்ரிஷா!
எதிர்காலத்தில், த்ரிஷா அரசியலுக்கு வருவார் என்று முன்பு செய்திகள் வெளியான போது, அதற்கு மறுப்பு தெரிவித்து, அப்பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது, தனுஷ், அண்ணன் மற்றும் தம்பி என, இரு வேடங்களில் நடித்து வரும், கொடி படத்தில், ருத்ரா என்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா. அத்துடன், மேடைகளில் அவர் அரசியல் சொற்பொழிவு ஆற்றுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அட்டமத்து சனியை வட்டிக்கு வாங்கினார் போல்!
— எலீசா
பட்டம் பெற்ற ஷாரூக் கான்!
பாலிவுட் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக் கான், 1988ல் டில்லியிலுள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில், பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அதையடுத்து, நடிப்பில், பிசியாகி விட்ட அவர், தான் படித்ததற்கான சான்றிதழை வாங்காமல் இருந்தார். அதனால், 28 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் அக்கல்லூரிக்கு சென்று, தற்போதைய பிரின்சிபலிடமிருந்து, தனக்கான, பி.ஏ., பட்ட சான்றிதழை பெற்றுள்ளார்.
— சி. பொ.,
ரஜினி படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
சிவாஜி மற்றும் எந்திரன் படங்களை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம், 2.0! 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், இந்தி நடிகர் அக் ஷய்குமாரும், இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். சென்னையை அடுத்து பூந்தமல்லியில், 20 கோடி செலவில் பிரமாண்ட, 'செட்' அமைத்து, தற்போது, சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ், நூற்றுக்கணக்கான ஸ்டன்ட் நடிகர்களுடன் சென்னையில் முகாமிட்டுள்ளார்.
— சி.பொ.,
இயக்குனருக்கு, 'ஷாக்' கொடுத்த சிவகார்த்திகேயன்!
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனானவர் சிவகார்த்திகேயன். அதைத் தொடர்ந்து, அவர் இயக்கத்தில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் நடித்தார். இதனால், மீண்டும் அவரிடம் கால்ஷீட் கேட்ட போது, அதிர்ச்சி கொடுக்கும் வகையில், சம்பளம் கேட்டுள்ளார். அதனால், அவருக்காக தயார் செய்த கதையில், சில திருத்தங்களை செய்து, ஜி.வி.பிரகாஷை அப்படத்தில் நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதி நடிகரின் படத்தில் நடிக்க அழைத்த போது, 'எனக்கும், அவர் அளவுக்கு சம்பளம் வேண்டும்...' என்று எக்குத்தப்பாக பேசிய புயல் காமெடியனை, இப்போது யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால், அவரோ, 'நான் காமெடி செய்ததால் தான், பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடின; இப்போது என் காமெடி இல்லாததால் தான், எந்த படங்களும் ஓடுவதில்லை. இவர்களெல்லாம் என் அருமை தெரியாதவர்கள்...' என்று கிண்டல் செய்கிறார்.
அட்டகத்தி நடிகையின் மார்க்கெட், ஆட்டம் கண்டிருப்பதால், திரைக்கு பின், படவேட்டையை தீவிரப்படுத்தியிருப்பவர், கவர்ச்சியாக உடையணிந்து, 'விசிட்' அடிக்கிறார். கவர்ச்சி உடையில், அவர் இனிக்க இனிக்க பேசுவதை, சில மெகா பட தயாரிப்பாளர்களே ரசிப்பதால், அம்மணிக்கு, சில புதிய படவாய்ப்புகள் வழுக்கி விழத் துவங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
சினி துளிகள்!
* வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் நடைபெற்று வருகிறது.
* ரஜினிமுருகனை தொடர்ந்து, தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த, ஷைலஜா என்ற படமும், சூப்பர் ஹிட்!
* தெலுங்கு சினிமாவில், ஒரு பெண் மானேஜர் மூலம் படவேட்டை நடத்தி வருகிறார் நந்திதா.
அவ்ளோதான்!

