தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெகா பட்ஜெட்டில் விஜய்ஆண்டனி படம்!

நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் படங்களைத் தொடர்ந்து, சைத்தான் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது, எமன் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை, தான் நடித்த படங்களை, தானே தயாரித்து நடித்த அவர், இப்படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க, முதல் காப்பி அடிப்படையில், படத்தை தயாரித்து கொடுக்கிறார். இதற்கு முன், இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்குள் நடித்து வந்த விஜய் ஆண்டனி, எமன் படத்தில், ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிக்கிறார். மேலும், மற்ற நிறுவனங்களின் படங்கள் என்றாலும், தானே முதல் காப்பி அடிப்படையில் தயாரிப்பதால், தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதால், இம்முறையை தொடர்ந்து பின்பற்றப் போவதாகவும் கூறுகிறார்.

— சினிமா பொன்னையா

தயாரிப்பாளராகும் சமந்தா!

சமீபகாலமாக, நடிகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக உருவாகி வரும் நிலையில், கன்னடத்தில், பவன்குமார் இயக்கிய, யு டர்ன் என்ற படத்தின் தமிழ் ரீ - மேக் உரிமையை, வாங்கியுள்ளார் சமந்தா. விரைவில், அப்படத்தை தயாரிக்கயிருப்பவர், அதில், தானும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஓடி ஓடி நூறு குழி உழுவதை விட, அமர்ந்து ஆறு குழி உழுவது மேல்!

— எலீசா

ஹன்சிகாவின் திடீர் மாற்றம்!

இதுவரை, 'முன்னணி கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று கூறி வந்த ஹன்சிகா, இப்போது, 'நயன்தாரா, அனுஷ்கா மற்றும் த்ரிஷா போன்று, வெயிட்டான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன்...' என்கிறார். அதன் காரணமாக, 'வளர்ந்து வரும் கதாநாயகர்கள் என்றாலும், நடிப்பதில் தயக்கமில்லை...' என்று வெளிப்படையாக அறிவித்திருப்பவர், 'நெகடிவ் கதாநாயகி வேடம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்றும் கூறியுள்ளார். தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா?

— எலீசா

சிவாஜி கெட்டப்பில் நடித்த கமல்!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் தயாரித்து வரும் படம், மீன்குழம்பும் மண்பானையும்! இப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பிரபு. மேலும், நட்புக்காக, படத்தின் கடைசி ஐந்து நிமிடம் வருவது போன்று, ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கமல். இந்த வேடம், ஆண்டவன் கட்டளை படத்தில், சிவாஜி கணேசன் நடித்தது போன்ற கெட்டப்பில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்த கமல், அந்த வேடம் பற்றி சொன்னதும், உடனே சம்மதித்ததோடு, அக்காட்சிகளை, இரண்டு மணி நேரத்தில் நடித்தும் கொடுத்து விட்டார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

அஞ்சான் நடிகைக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர் கூட்டம் அதிகரித்து விட்டதால், படத்துக்குப் படம் படக்கூலியை உயர்த்தி வருகிறார். இதனால், அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினாலும், முன்னணி கதாநாயகன்கள் பலர் நடிகையின், 'பாக்கெட்'டில் இருப்பதால், அவர்களின் சிபாரிசு காரணமாக அவர்களால், நடிகையை ஓரங்கட்ட முடியவில்லை.

தளபதி நடிகரை வைத்து, முருக இயக்குனர் இயக்கிய மூன்றெழுத்து படம் என்னுடைய குறும்படத்தின் கதை என்று போர்க்கொடி பிடித்து வரும் தஞ்சையை சேர்ந்த நபர், இப்போது அங்குள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி, மேற்படி இயக்குனருக்கு எதிரான போராட்டம் நடத்தியிருப்பதோடு, 'அவரை கைது செய்ய வேண்டும் என்று...' புகார் அளித்துள்ளார். இதனால், இயக்குனர் வட்டாரம் பதற்றத்தில் உள்ளது.

சினி துளிகள்!

* விஷாலுடன் நடித்துள்ள, மருது படம், தனக்கு பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ரீதிவ்யா.

* நடிப்பில் பிசியானதால் கிடப்பில், போட்டிருந்த, கிட்ணா படத்தை மீண்டும், துவங்கியிருக்கிறார் தன்ஷிகா.

* மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அடுத்து, அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.

* வசந்த் இயக்கி வரும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில், நித்யாமேனன், 'லீடு' ரோலில் நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us