தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினிக்கு ஜோடியாகும் இந்தி நடிகை!

கபாலி படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில், மீண்டும் நடிக்கிறார் ரஜினி. பாட்ஷா படம் போன்று, மும்பையில் நடக்கும், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாகும் இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, இந்தி நடிகை, வித்யாபாலன் நடிக்கிறார். கபாலி படத்தில் நடிக்க, முதலில் இவரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினர்; அப்போது, கால்ஷீட் ஒத்து வராததால், அவர் நடிக்கவில்லை. அதனால், இப்படத்தில் கண்டிப்பாக, வித்யாபாலனை, ரஜினியுடன் ஜோடி சேர்த்து விட வேண்டும் என்று, முன்கூட்டியே, அவரிடம் கால்ஷீட் பேசி விட்டார், இயக்குனர் பா.ரஞ்சித். — சினிமா பொன்னையா

நிவேதா பெத்துராஜ் அறிவிப்பு!

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதால், பொதுவாக என் மனசு தங்கம் மற்றும் டிக் டிக் டிக் என, சில படங்கள் அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. டிக் டிக் டிக் படத்தில், ஜெயம் ரவியுடன் நடித்து வரும் நிவேதா, அடுத்தபடியாக, 'அஜித் மற்றும் விஜய்யுடன் டூயட் பாடுவதே என் நோக்கம்...' என்று, பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது!

— எலீசா

பாத்திமா பீவியான கவுதமி!

பல ஆண்டுகளுக்கு பின், மலையாளத்தில், விஸ்வாசபூர்வம் மன்சூர் என்ற படத்தில் நடிக்கிறார், கவுதமி. அப்பட நாயகன், ரோஷன் மேத்யூவுக்கு, அம்மாவாக, பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண் வேடத்தில் இன்றைய, மாடர்ன் அம்மாவாக நடிக்கிறார்; இவ்வேடத்துக்கு, சற்று பூசினாற் போன்று, எடை போட்டுள்ளார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இராது!

— எலீசா

லட்சுமிமேனனுக்கு சிபாரிசு செய்த நடிகர்!

கும்கி படத்தில் அறிமுகமான, லட்சுமிமேனனுக்கு, விஜயசேதுபதியுடன் நடித்த, றெக்க படத்திற்கு பின், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால், கேரளாவில் முகாமிட்டு, படிப்பை தொடர்ந்தவருக்கு, தற்போது, தான் நடிக்கும், கருப்பன் என்ற படத்தில் நடிக்க, சிபாரிசு செய்திருக்கிறார், விஜயசேதுபதி. றெக்க படத்தில், லட்சுமிமேனன் கொடுத்த அசத்தலான, 'பர்பாமென்ஸ்' அவரை கவர்ந்ததே இந்த சிபாரிசுக்கு காரணம்.

— சி.பொ.,

மகேஷ்பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு இரட்டை வேடத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படத்திற்கு, தெலுங்கில், சம்பவாமி என்று, தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் டைட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் முதலில், ராகுல் ப்ரீத்சிங் நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அவர் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதிலும், கால்ஷீட் சொதப்பலும் செய்து, முருகதாசை டென்ஷன் செய்து விட்டதால், தற்போது, அவருக்கு பதிலாக, ப்ரணிதி சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், முருகதாஸ். அதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சி யடைந்த, ராகுல் ப்ரீத்சிங், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, தற்போது, நல்ல பிள்ளையாக நடித்து வருகிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை

தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள பிரேமம் நடிகை, தற்போது, சீயான் நடிகருக்கு ஜோடியாகியுள்ளார். இப்படத்தில் நடிக்க ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்ட நடிகை, 50 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டார். இதனால், நடிகையை, 'புக்' செய்ய தயாரிப்பு தரப்பு தயங்கியுள்ளது. ஆனால், சீயான் நடிகர், மேற்படி நடிகைக்கு, பலத்த சிபாரிசு செய்து, நடிகையை படத்திற்குள் இழுந்து விட்டார்; இதனால், வேறு வழியில்லாமல், நடிகை கேட்ட சம்பளத்தை கொடுத்து, ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கணவரை கத்தரித்து, மறுபடியும் சினிமா களத்தில் வரிந்து கட்டியுள்ள பால் நடிகைக்கு, படங்கள் குவிந்து வருவதோடு, பாய் பிரண்டுகளும் அதிகரித்து வருகின்றனர். அம்மணி, எந்த ஸ்பாட்டுக்கு சென்றாலும், அவரை கூட்டம் மொய்த்துக் கொள்கிறது. அத்துடன், படப்பிடிப்பு முடிந்ததும், அவர்களுடன் காரில் ஏறி, பறந்து விடுகிறார் நடிகை. அம்மணியின் இந்த ஜாலி விளையாட்டை பார்த்து, கோடம்பாக்கமே, 'இந்த நடிகையா இப்படி!' என்று ஆச்சரியப்படுகிறது.

சினி துளிகள்!

* 'திருமணம் செய்து கொள்ளாமல், கடைசி வரை அப்பா அம்மாவுடனேயே வாழ்வேன்...' என்று கூறியுள்ளார், மலையாள, பிரேமம் பட நாயகி, சாய் பல்லவி.

* தற்போது நடித்து வரும், விவேகம் படத்தில், 'சிக்ஸ்பேக்' கெட்டப்பில் நடிக்கிறார், அஜித்.

* முண்டாசுப்பட்டி இரண்டாம் பாகத்தில், நந்திதா நடித்த வேடத்தில், அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார்.

* அஞ்சாதே படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கி வரும், துப்பறிவாளன் படத்திலும், வில்லனாக நடிக்கிறார், பிரசன்னா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us