sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தளபதி - 2ம் பாகத்தில் விஜய், விக்ரம்!

ரஜினி - மம்மூட்டியை வைத்து, தான் இயக்கிய, தளபதி படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்கயிருக்கிறார், மணிரத்னம். அதற்கான கதை விவாதத்தை துவங்கியுள்ளவர், அப்படத்தில் நடிக்க, சில பிரபல நடிகர்களிடம், கால்ஷீட் கேட்டு வந்தவர், தற்போது, விஜய் மற்றும் விக்ரமிடம் பேசியுள்ளார்; அவர்களும், சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், ரஜினி கதாபாத்திரத்தில் விஜய்யும், மம்மூட்டி கதாபாத்திரத்தில், விக்ரமும் நடிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

— சினிமா பொன்னையா

மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு, தமிழில், தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், தெலுங்கில் அழுத்தமாக காலுான்றி வருகிறார். ஏற்கனவே, நானியுடன், நேனு லோக்கல் என்ற படத்தில் நடித்திருப்பவர், தற்போது, மகேஷ்பாபு மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், தமிழை விட, தெலுங்கில் அதிகப்படியான கவர்ச்சி சேவை புரிவதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எலீசா

'கிராபிக்ஸ்' புலியுடன் சண்டை போட்ட ஜெயம்ரவி!

ஜங்கிள் புக் பட ஸ்டைலில், வனமகன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இப்படத்தில், ஜெயம்ரவி, புலியுடன் சண்டை போடும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அது, நிஜமான புலி இல்லை; 'கிராபிக்ஸ்' புலி. காட்டுக்குள் செல்லும் உண்மைப் புலியை, அவ்வப்போது காண்பித்து, நிஜமான புலியுடன், அவர் சண்டை போடுவது போன்று படமாக்கியுள்ளனர்.

சி.பொ.,

இந்தியாவில் வெளியாகும் ஜாக்கிசானின், ஜப்பானிய படம்!

இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு தயாரிப்பில், ஜாக்கிசான் நடித்து வெளியான, குங்பூயோகா படம், இந்தியாவில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அடுத்தபடியாக, ஜாக்கிசான் நடித்த, ரெயில்ரோட் டைகர்ஸ் என்ற ஜப்பானிய திரைப்படம், இந்தியாவில் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாகும் இப்படத்தில், சுதந்திர போராட்டத்திற்காக, ரயிலில் போராட்டக்காரர்களை அழைத்து செல்லும் ராணுவ கேப்டனாக நடித்துள்ளார் ஜாக்கிசான்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தாரா மற்றும் அகர்வால் நடிகைகளுக்கு இடையே நீண்ட காலமாக தொழில்முறை போட்டி, நீடித்து வருகிறது. இந்நிலையில், தாராவை போலவே, தானும் கதையின் நாயகியாகி விட வேண்டும் என்று முயற்சித்து வந்த அகர்வாலுக்கு, தற்போது, தாரா கால்ஷீட் இல்லை என மறுத்த ஒரு படமே கிடைத்து விட்டது. இந்த சேதியறிந்த தாரா, 'இந்த நடிகைக்கு என் படம் போகும் என தெரிந்திருந்தால், அப்படத்தை விட்டு கொடுத்திருக்க மாட்டேன்...' என்று கடுகடுக்கிறார்.

பூர்ணமான நடிகையை, மூணுஷா நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து, நடிக்க வைத்தனர்; ஆனால், அவரது நடிப்பு சரியில்லை என்று, படத்திலிருந்து நீக்கி, இன்னொரு நடிகையை, அவ்வேடத்துக்கு ஒப்பந்தம் செய்து விட்டனர். இதனால், கடுப்பான நடிகை, 'மேற்படி பட இயக்குனருக்கு படம் எடுக்கவே தெரிய வில்லை; அதனால் தான், 50 படங்களில் நடித்த எனக்கு நடிப்பு தெரியவில்லை என்று சொல்கிறார்...' என்று, அவர் மீது அவதூறு பரப்பி வருகிறார்.

சினி துளிகள்!

* சந்தனத்தேவன் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக, நடிக்கிறார், புதுமுகம் கிருத்திகா.

* சவரக்கத்தி படத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு, அம்மாவாக நடித்துள்ளார், பூர்ணா.

* கொலையுதிர் காலம் படத்தில், 'க்ரைம்' கதையில் நடிக்கிறார் நயன்தாரா.

* மும்பையில் வீடு வாங்கியுள்ள லண்டன் நடிகை எமிஜாக்சன், தற்போது, சென்னையிலும் வீடு வாங்கி, குடியேறியுள்ளார்.

* இமைக்கா நொடிகள் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார், இந்தி பட இயக்குனர், அனுராக் காஷ்யப்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us