
விழிப்புணர்வு குறும் படத்தில் நடித்த த்ரிஷா!
தெருநாய்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை த்ரிஷா, தற்போது, தட்டம்மை நோய் குறித்த விழிப்புணர்வு குறும் படமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தில், தட்டம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றி, மிக உருக்கமாக பேசி நடித்துள்ள த்ரிஷா, இதுபோன்று, பொது மக்களுக்கு நன்மை செய்யும் பிரசார படங்களில் தொடர்ந்து நடிக்க, ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார்.
- சினிமா பொன்னையா
தாத்தாவின் பெயரை காப்பாற்ற வந்த தான்யா!
மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்ஷவர்தன், பல படங்களில் நடித்தார்; ஆனால், அவரால் மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால், பலே வெள்ளையத்தேவா மற்றும் பிருந்தாவனம் படங்களில் நடித்த, நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, கருப்பன் படத்தில், கிராமத்து வேடத்தில் நடித்து, பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதையடுத்து, 'தாத்தா ரவிச்சந்திரனின் பெயரை காப்பாற்றும் வகையில் நடித்து, முன்னணி நடிகையாவேன்...' என்று கூறுகிறார்.
— எலீசா
இளவட்ட நாயகி வேடங்களை தவிர்க்கும் சாய் பல்லவி!
பிரேமம் பட நாயகி சாய் பல்லவி, தற்போது, ஏ.எல்.விஜய் நடிக்கும், கரு படத்தில், நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், 'சினிமாவில் இளவட்ட நாயகியாக நடிக்கத் தான் விரும்புகிறேன்; ஆனால், கிளாமர், முத்தக்காட்சிகளில் நடிக்கச் சொல்கின்றனர்; அப்படி நடிக்க விருப்பமில்லை. அதனால் தான், மெச்சூரிட்டியான வேடங்கள் பக்கம் திரும்பி விட்டேன்...' என்கிறார். எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும், சிங்கார கழுவில் இருக்க வேண்டும்.
— எலீசா
குணசித்திர வேடத்தில் கால் பதிக்கும் சூரி!
சந்தானத்திற்கு பின், முன்னணி காமெடியனான போதும், முன்னணி கதாநாயகர்களின் பட வாய்ப்புகள் சூரிக்கு கிடைக்கவில்லை. அதனால், அதிர்ந்து போயிருக்கும் அவர், தன் மார்க்கெட்டை தக்க வைக்கும் முயற்சியாக, சில படங்களில், காமெடி கலந்த குணசித்திர நடிகராக களமிறங்கியுள்ளார். அத்துடன், தற்போது தான், ஒப்பந்தமாகியிருக்கும் சில புதிய படங்களில், குணசித்திர காட்சிகளில் நடித்து வருகிறார்.
—சினிமாபொன்னையா
கறுப்பு பூனை!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர், தமிழில் அறிமுகமான படத்தில், வில்லனின் தம்பியாக நடித்த காதல் நடிகரை, அதன்பின், பல இயக்குனர்கள் வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்தனர். இதனால், ஆடிப்போன நடிகர், 'கொஞ்சம் விட்டால் தன்னை முழுநேர வில்லனாக்கி விடுவர் போலிருக்கே...' என்று நினைத்து, 'முன்னணி இயக்குனர் படம் என்பதால், மறுக்க முடியாமல் அப்படத்தில் நடித்தேன்; ஆனால், தொடர்ந்து வில்லனாக நடிக்கும் எண்ணம் இல்லை...' என்று, அனைத்து வாய்ப்புகளையும் தடாலடியாக நிராகரித்து விட்டார்.
கேரளத்து பால் நடிகை, சில படங்களை அதிரடியாக கைப்பற்றி, நடித்து வருகிறார். ஆனால், மேனன் இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த ஒரு மலையாள நடிகை, இவருக்கான இரண்டு மெகா படங்களை, சத்தமில்லாமல் கொத்திச் சென்று விட்டார். இதனால், மேற்படி நடிகை மீது, கொலைவெறியில் இருக்கும் பால் நடிகை, அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நடிகையிடம் பேச்சவார்த்தையில் இருக்கும் படங்களை, குறைந்த சம்பளம் பேசி, தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் வரிந்து கட்டி நிற்கிறார்.
சினி துளிகள்!
* ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள, அடங்காதே படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார், சரத்குமார்.
* முதன் முறையாக ஒரு படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார், பரத்.
* பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில், மலையாளத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில், அதன் தமிழ் ரீ-மோக் படத்தில் நடித்துஉள்ளார், அமலாபால்.
அவ்ளோதான்!

