தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியல் பேசும், காலா ரஜினி!

காலா படத்தில், ஸ்லம் ஏரியா அரசியல் கதையில் நடித்துள்ள ரஜினி, சாமானிய மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன், படத்தில் அரசியல் நெடி குறைவாக இருப்பதாக கூறி, 'டப்பிங்' பேசியபோது, சில காட்சிகளில், கூடுதலான அரசியல் டயலாக்குகளை பேசியுள்ளார்.

— சினிமா பொன்னையா

சிம்ரன் - த்ரிஷாவை பின்பற்றும் அம்ரிதா!

விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்த, படைவீரன் படத்தில் அறிமுகமான அம்ரிதா, தற்போது விஜய் ஆன்டனியுடன், காளி என்ற படத்தில் நடித்துள்ளார். சிம்ரன் மற்றும் த்ரிஷா தான் தன் ரோல் மாடல் என்று கூறும் இவர், அவர்களைப் போன்றே உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கப் போவதாக கூறுகிறார். காற்றுக்குத் தகுந்தாற்போல் பாயை மாற்றிக்கட்டு!

எலீசா

நயன்தாராவுக்காக விட்டுக்கொடுத்த அஜித்!

அஜித் படங்களில், கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்றபோதும், தற்போது தான் நடிக்கும், விஸ்வாசம் படத்தில், நயன்தாராவுக்கு அழுத்தமான வேடம் கொடுத்திருக்கிறார் அஜித். சமீபகாலமாக, நயன்தாரா, கதையின் நாயகியாகி விட்டதால், தன் படத்தினால் அவரது கதையின் நாயகி, 'இமேஜ்' பாதிக்கக் கூடாது என்று அவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

சி.பொ.,

பாலியல் தொழிலாளியான சதா!

ஜெயம் மற்றும் அந்நியன் என, பல படங்களில் நடித்த சதா, தற்போது, நயன்தாரா பாணியில், டார்ச்லைட் என்ற படத்தில், கதையின் நாயகியாகி விட்டார். இப்படத்தில், நெடுஞ்சாலைகளில் நின்று, லாரி டிரைவர்களை பாலியல் உறவுக்கு அழைக்கும் பெண்ணாக நடித்துள்ளார். 'வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்ணின் கதையில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...' என்று கூறுபவர், 'டார்ச்லைட், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமையும்...' என்கிறார். வகை அறிந்து செய்தால், வாதம் பலிக்கும்!

எலீசா

மீண்டும் இணையும் விஜயகாந்த் - எஸ்.ஏ.சி.,

நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படம், சட்டம் ஒரு இருட்டறை; இப்படத்தில் நாயகனாக நடித்தார், விஜயகாந்த். அப்படம் வெற்றி பெற்றதால் அதன்பின், பல படங்களில் அவர்களின் கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின், 40ம் ஆண்டு கலைச்சேவைக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட, எஸ்.ஏ.சி., மீண்டும் விஜயகாந்தை வைத்து ஒரு அதிரடி அரசியல் படம் இயக்கப் போவதாகவும், அந்த படத்தை எஸ்.தாணு தயாரிப்பார் என்றும் அறிவித்துள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

பீட்சா நடிகருக்கு மார்க்கெட் இருந்தபோதும், குறைவான சம்பளத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவரும் மற்றவர்களைப் போன்று கோடிகளை சொல்லியடித்து வருகிறார். அத்துடன், ஸ்டார் ஓட்டல் மற்றும் கேரவன் வசதி என அனைத்தும் நவீனமாக இருக்க வேண்டும் என்று, மெகா கண்டிஷன்களை போடுவதால், அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மூன்றெழுத்து பூ நடிகை, அரசியலில் ஈடுபட்டு வந்தபோதும், சினிமா மூலம் மக்களை சந்தித்து வந்தால் தான் நம்மை ஞாபகம் வைத்திருப்பர் என எண்ணி, கேரக்டர் நடிகையாக வலம்வர தயாராகி விட்டார். அதனால், தல - தளபதி போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க அவர்களின் சிபாரிசை நாடியுள்ளார்.

சினி துளிகள்!

* ஜூங்கா படத்தை தானே தயாரித்து, சாயிஷா சாய்கலுடன் நடித்து வருகிறார், விஜயசேதுபதி.

* பிரபல நடிகர்கள் நடித்த படங்களைப் பார்த்து, அவர்கள் நடிப்பு குறித்து தன், டுவிட்டரில் கமென்ட் கொடுத்து வருகிறார், குஷ்பு.

* மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீசங்க்யா, குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும் என்ற மலையாள படத்தில், கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us