PUBLISHED ON : ஜூன் 03, 2018

அஜித், 'பஞ்ச்' டயலாக்!
வீரம் படத்தில், வேட்டி - சட்டை அணிந்து, கிராமத்து, 'கெட்டப்'பில் நடித்தது போலவே, தற்போது, விஸ்வாசம் படத்திலும் நடிக்கிறார் அஜித். மேலும், இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பவர், தன் ரசிகர்களை கருத்தில் வைத்து, தேவையான இடங்களில், 'பஞ்ச்' டயலாக்கும் பேசுகிறார். இதற்காக நுாற்றுக்கணக்கான, 'பஞ்ச்' டயலாக்குகள் எழுதப்பட்டு, அஜித், 'ஓகே' பண்ணியவை மட்டுமே படத்தில் இடம்பெறுகிறது.
— சினிமா பொன்னையா
கதையின் நாயகியாகும் கீர்த்தி சுரேஷ்!
சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவான, நடிகையர் திலகம் படத்தில் நடித்த பின், கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையே மாறி விட்டது. அவரை கதையின் நாயகியாக நடிக்க வைக்க, சில இயக்குனர்கள் கதைகளுடன் படையெடுத்து வருகின்றனர். அதனால், இனிமேல், ஆண்டுக்கு ஒரு படத்தில், கதையின் நாயகியாக நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார், கீர்த்தி சுரேஷ். ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்!
- எலீசா
கிசுகிசு நடிகையரை ஓரங்கட்டும் விஜயசேதுபதி!
உடன் நடிக்கும் நடிகைகள், தன்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு, தன் புதிய படங்களில் சிபாரிசு செய்கிறார், விஜயசேதுபதி. அதேசமயம், தன்னுடன் அவர்கள் கிசுகிசுக்கப்பட்டால், அடுத்த படத்தில், இயக்குனர்கள் அந்த நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று மல்லுக்கட்டினாலும், மறுத்து விடுகிறார். இதனால், விஜயசேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க விரும்பும் நடிகைகள், அவருடன் இணைத்து, தங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளியாகாத வண்ணம் கவனமாக செயல்படுகின்றனர்.
— சினிமா பொன்னையா
ஸ்ரேயாவின் கலக்கல் ஸ்டேட்மென்ட்!
திருமணத்திற்கு பின் இடைவெளி விடாமல் நடித்தால் மார்க்கெட் சரியாது என்பதை, சமந்தா உணர்த்தி விட்டார். அதனால், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, இடைவெளி விடாமல் புது படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அத்துடன், 'சமந்தா, திருமணத்திற்கு பின் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்தது போல் இல்லாமல், தேவைப்பட்டால், பிகினி கலாசாரத்தையும் கையில் எடுப்பேன்...' என கலக்கல், 'ஸ்டேட்மென்ட்' கொடுத்துள்ளார்.ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இராது!
— எலீசா
கறுப்புப் பூனை!
சுள்ளான் நடிகருடனான கிசுகிசுவுக்கு பின், பால் நடிகைக்கு, முன்னணி நடிகர்களுடன் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனபோதும் அவர் விடுவதாக இல்லை. சில அபிமான நடிகர்களுக்கு, அவ்வப்போது சான்ஸ் கேட்டு, 'டார்ச்சர்' கொடுத்து வருவதோடு, பிரபலங்கள் கலந்து கொள்ளும், 'மிட்நைட்' பார்ட்டிகளுக்கு படுகவர்ச்சியாக உடையணிந்து, இளவட்ட நடிகர்களை திணற வைக்கிறார்.
படைவீரன் நடிகை, கோலிவுட்டை கலக்கி எடுக்க திட்டமிட்டுள்ளார். அதனால், சில மேல்தட்டு இயக்குனர்களை தொடர்பு கொண்டு, 'அதிரடி வேடங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்; தேவைப்பட்டால், பிகினி நடிகையாக கூட உருவெடுப்பேன்...' என்று சொல்லி, பட வேட்டை நடத்தி வருகிறார்.
சினி துளிகள்!
* ஒரே நேரத்தில் நான்கு இந்தி படங்களில் நடிப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க மறுக்கிறார், டாப்சி.
* தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார், அமலாபால்.
* காளி படத்தில், விஜய் ஆன்டனியுடன் அதிக நெருக்கமாக நடித்திருக்கிறார், அம்ரிதா அய்யர்.
அவ்ளோதான்!
