தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாங்கல்யம் தந்ததும் நானே...

மாங்கல்யம் தந்ததும் நானே...

மாங்கல்யம் தந்ததும் நானே...


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி மற்றும் 51 வகை சீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான் என்று, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து, உடல் ஊனமுற்ற ஒவ்வொரு மணமக்களுக்கும், இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார், சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த, 'கீதா பவன் அறக்கட்டளை'யின் நிர்வாக அறங்காவலர், அசோக்குமார் கோயல்!

'உடல் ஊனமுற்றோருக்கு செய்யும் உதவி, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று காந்திஜி சொன்ன வாக்கை, என்னால் முடிந்தளவு செயல் படுத்துகிறேன்...' என்கிறார்.

கடந்த, ஏழு ஆண்டுகளில், இதுவரை, 437 திருமணங்களை நடத்தியுள்ள இவர், கடந்த, நவம்பர் 20, 2017ல், மேலும், 63 திருமணங்கள் நடத்தியுள்ளார். மணமக்களுக்கான ஒரே தகுதி, இருவரில் ஒருவர் உடல் ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.

மணமக்களை தேர்வு செய்து தரும் பொறுப்பை, 'தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமை'ப்பிடம் ஒப்படைத்துள்ளார். இந்த அமைப்பின் தலைவர் சிம்மசந்திரன், இதை, வேலையாக கொள்ளாமல், வேள்வியாக எடுத்து, உழைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள உடல் ஊனமுற்றோர் அமைப்போடு சேர்ந்து,

ஊர் ஊராக சென்று சுயம்வரம் நடத்துகிறார். அங்கு கலந்து கொள்ளும் ஜோடிகளை, சட்டம், மருத்துவம் மற்றும் மன ரீதியாக திருமணம் செய்து, குடும்பம் நடத்த தகுதியானவர்கள் தானா என்பதை நிபுணர்களை வைத்து பரிசோதிக்கிறார். அதன் பின் முடிவாகும் ஜோடிகளின் பட்டியலை அசோக்குமாரிடம் கொடுக்கிறார், சிம்மசந்திரன்.

தன் அறக்கட்டளை உறுப்பினர்களின் துணையோடு, தம் கீதா பவன் திருமண மண்டபத்தில், பெரிய அளவில் விருந்து கொடுத்து, அந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார், அசோக்குமார். அம்மண்டபத்திற்கே வந்து, சட்டப்படி திருமணங்களை பதிவு செயது கொடுக்கின்றனர், சார் - பதிவாளர்கள்!

வாசகர்களே... காது கேட்காத, வாய் பேச இயலாத, கண் பார்வை தெரியாத, கை, கால் ஊனமுற்ற திருமணமாகாத மாற்றுத் திறனாளிகளில் உங்கள் கண்ணில் பட்டால், அவர்களுக்கு இந்த விபரத்தை சொல்லி, திருமணத்திற்கு தயார் செய்யுங்கள்; கோடி புண்ணியம் உண்டு!

மேலும் விபரங்களுக்கு:

www.geetabhavantrust.com என்ற இணையதள முகவரிக்கு செல்லவும் அல்லது சிம்மசந்திரனை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94441 15936

எல்.எம்.ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us