தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : ஜூலை 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

சிவாஜி மற்றும் எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், 2.0; எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தின் படப்பிடிப்பு ஓர் ஆண்டு நடைபெற்றது. அதன் பின், கடந்த ஓர் ஆண்டாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, நவம்பர் 29ம் தேதி, 2.0 படம் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இயக்குனர் ஷங்கர். இதையடுத்து, காலா படம் ஜூன் மாதம் வெளியான நிலையில், அதற்கடுத்த ஐந்தாவது மாதத்திலேயே ரஜினியின் இரண்டாவது படமும் வெளியாவதால், உற்சாகமடைந்துள்ளனர், ரஜினி ரசிகர்கள்.

— சினிமா பொன்னையா

அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!

வனமகன் படம் மூலம் தமிழுக்கு வந்த இந்தி நடிகை சாயிஷா சாய்கல், தற்போது, கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா மற்றும் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கும் புது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தி நடிகையான இவருக்கு, அதிரடி கவர்ச்சிப் புயலாக உருவெடுக்க தான் ஆசை. ஆனால், தமிழ்ப்பட இயக்குனர்கள், அவரை சாப்ட்டான நடிகையாக பயன்படுத்தியுள்ளனர். அதனால், சில கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு, தன், 'பிகினி' கெட்டப் போட்டோக்களை அனுப்பி, இளவட்ட ரசிகர்களை கவர, கவர்ச்சிகரமான கதாநாயகி வேடம் தருமாறு விண்ணப்பித்துள்ளார்.அது அதற்கு ஒரு கவலை; அம்மாவுக்கு எட்டு கவலை!

— எலீசா

'ரிஸ்க்' எடுக்கும் வரலட்சுமி!

'டூயட்' பாடும் கதாநாயகியாக மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், வரலட்சுமி. அவ்வகையில், நாயகி மற்றும் வில்லி கேரக்டர் என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், தற்போது, ஒரு புது படத்தில், கண் பார்வையில்லாத பெண்ணாக நடிக்கிறார். 'இவ்வேடத்திற்காக பிரத்யேகமாக பயிற்சி எதுவும் எடுக்கப் போவதில்லை; கண்களை மூடி, பார்வையில்லாத பெண்ணாக என் வீட்டிற்குள்ளேயே பயிற்சி எடுத்து, நடிக்கப் போகிறேன்...' என்கிறார். தனக்குத் தனக்கு என்றால் களையும் வெட்டும்!

— எலீசா

'லேடி டான்' வேடத்தில் நமீதா!

ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் மற்றும் மைதிலி என்னை காதலி என, பல படங்களை இயக்கியவர், டி.ராஜேந்தர். பின், அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதைகளாக எடுத்தவர், கடந்த, 10 ஆண்டுகளாக படம் இயக்கவில்லை. இந்நிலையில் தற்போது, இன்றைய காதல்டா என்ற பெயரில் ஒரு காதல் கதையை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் படமாக்க இருக்கிறார். இன்றைய காதலைச் சொல்லும் இப்படத்தில், 'லேடி  டான்' வேடத்தில் நடிக்க இருக்கிறார், நமீதா.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சமீபத்தில் வெளியான, அப்பாவும் - மகனும் இணைந்து நடித்துள்ள படத்தில், 'பிகினி'யாக நடித்து கலக்கியிருக்கும் அந்த நடிகை, 'தேவைப்பட்டால் இன்னும் தாராளம் காட்ட தயாராக இருப்பதாக' கோலிவுட் கமர்ஷியல் படவாலாக்களுக்கு 'சீக்ரெட்' குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த இன்ப அதிர்ச்சியால், தற்போது, அவரை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் இயக்குனர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டிருப்பதோடு, அவரது படக்கூலியையும் கோடிகளை தொட வைத்து விட்டனர்.

இயக்குனர்கள் செய்த இந்த காரியத்தால் அவர்களை வைத்து படம் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள், 'என்னை கேட்காமல், எப்படி நடிகையின் சம்பளத்தை உயர்த்தலாம்...' என்று இயக்குனர்களுடன் மோதிக் கொண்டிருக்கின்றனர்.

பையா நடிகை, அவ்வப்போது மேல்தட்டு நடிகர்களை ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்து, 'வீக் எண்ட் பார்ட்டி' கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தற்போது அம்மணியின் மார்க்கெட் குடைசாய்ந்து கிடப்பதால், அவர் எத்தனை தரம் அழைத்தாலும், யாரும் பார்ட்டியில் கலந்து கொள்வதில்லை. இதனால், மனசொடிந்து போன நடிகை, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி பண்ணி, தன் முகாமை சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளார்.

சினி துளிகள்!

* கண்ணே கலைமானே படத்திற்கு பின், தமிழில் தமன்னாவுக்கு புதிய படங்கள் இல்லை.

* மிஸ்டர் சந்திரமவுலி படத்தை அடுத்து, பார்ட்டி படத்தில் நடித்து வருகிறார், ரெஜினா.

இவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us