
அரசியல் கதையில் ரஜினிகாந்த்!
கபாலி மற்றும் காலா படங்களில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும், பேட்ட படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம், தேசிய அளவிலான ஒரு அரசியல் பிரச்னையை மையமாக கொண்டது. முக்கியமாக, அரசியல் களத்தில் இறங்க தயாராகி வரும், ரஜினியின், எதிர்கால அரசியல் கொள்கைகளை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாகவும் உருவாகிறது.
— சினிமா பொன்னையா
அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!
கமலுடன், விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பூஜாகுமாருக்கு, அடுத்து, படங்கள் இல்லை. வயதானதை காரணம் காட்டி, இயக்குனர்கள் ஓரங்கட்டுவதை அறிந்த பூஜாகுமார், 'நான் தொடர்ந்து ஹீரோயினியாக மட்டுமே நடிக்க ஆசைப்படவில்லை. என் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதே சமயம், 'டம்மி'யாக இல்லாமல், கொஞ்சம் வெயிட்டான வேடமாக கொடுங்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, தன் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
தொழில் ரகசியத்தை அறிந்த, கீர்த்தி சுரேஷ்!
முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களை விட்டு விலகி, அமைதியே உருவாக இருப்பார், கீர்த்தி சுரேஷ். இப்போது, சக நடிகர்களிடம், 'ஜாலியாக கடலை' போடுகிறார்.
இதுகுறித்து கேட்டால், 'இப்படி நண்பர்களாக பழகுவது, நடிப்பில் இயல்பு தன்மையை அதிகப்படுத்துவதோடு, நெருக்கமான காட்சிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல் நடிக்க முடிகிறது. இந்த தொழில் ரகசியம் தெரிந்த பின் தான், என்னுடைய ஹீரோக்களுடன் கலகலப்பாக பேசி, பழகி வருகிறேன்...' என்கிறார். மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையை காட்டு!
— எலீசா
கத்தரி போடும், ஜெயம்ரவி!
தனி ஒருவன் படத்திற்கு பின், மாறுபட்ட கதைகளாக தேடிப் பிடித்து, நடித்து வருகிறார், ஜெயம்ரவி. இந்த நேரத்தில், 'உதட்டு முத்தக்காட்சி, குளியல் காட்சிகளில் நடிக்க வேண்டும்' என்று, இயக்குனர்கள் யாராவது சொன்னால், 'இப்போது தான், சாக்லேட் ஹீரோ என்ற இமேஜில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். மறுபடியும் அப்படி நடித்தால், அதிலிருந்து நான் மீளவே முடியாது...' என்று சொல்லி, அதுபோன்ற காட்சிகளுக்கு கதை கேட்கும்போதே கத்தரி போட்டு வருகிறார், ஜெயம் ரவி.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* மீண்டும் முன்வரிசை நடிகர்களுடன், 'டூயட்' பாடி விட முண்டியடித்தார், பையா நடிகை. ஆனால், அம்மணி எடுத்த ஒவ்வொரு முயற்சியும், ஜாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாகி விட்டது. காரணம், ஒரு காலத்தில் நடிகையை வர்ணித்த, மேல்தட்டு சினிமாக்காரர்கள், இப்போது அவரை, 'ரிஜக்டட் பீஸாக' கருதி, ஓரங்கட்டுகின்றனர்.
இதனால், கோபம் தலைக்கேறும்போதெல்லாம், ராவாக சரக்கை ஏற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் போட்டு, கொச்சை வார்த்தைகளால் ரவுண்டு கட்டுகிறார், நடிகை.
'அம்மா... இங்க வாயேன். தேவி படத்துல, தமன்னா, பேயா வருவாங்களே... அது போல, எதிர் வீட்டு அக்கா நிக்கறாங்கம்மா... பயமா இருக்குமா...' என்றாள், நித்யா.
* களவாணி நடிகை, எப்போதுமே, ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவார். சமீபத்தில், 'மீ டூ' விவகாரம் வெடித்தபோது, 'இப்படி, 'பப்ளிக்'காக ஊர் சுற்றி, நடிகையரின் பெயரை கெடுக்காதே...' என்று, அவரை கண்டித்துள்ளனர், சில நடிகையர். அதையடுத்து, ஆண் நண்பர்களுடன் பொது வௌியில் சுற்றித் திரிவதை நிறுத்தி, ஸ்டார் ஓட்டல்களில் சந்திப்புகளை, நடத்தி வருகிறார்.
'இந்த ஓவியா, என்னைப் பார்த்து காப்பியடிக்கிறா, மிஸ்...' என்றாள், சாந்தி.
சினி துளிகள்!
* 90 எம்.எல்., என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார், ஓவியா.
* தமிழ் படங்கள் குறைந்து விட்டதால், சென்னை முகாமை, ஐதராபாத்துக்கு மாற்றி விட்டார், தமன்னா.
அவ்ளோதான்