sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 23, 2018

Google News

PUBLISHED ON : டிச 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல் கதைகளை தவிர்க்கும், விஜயசேதுபதி!

ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளாக, தேர்வு செய்து நடித்து வரும் விஜயசேதுபதி, சமீப காலமாக வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதிலும், ஆரஞ்சு மிட்டாய் படத்தைத் தொடர்ந்து தற்போது, சீதக்காதி படத்தில், 70 வயது முதியவராக நடித்துள்ள அவர், தன்னிடம் யாராவது இயக்குனர்கள் காதல் கதைகளை சொன்னால், 'நான் இப்ப காதலிக்கிற வயசை கடந்துட்டேன். ரசிகர்களும், அந்த மாதிரியான படங்களை எதிர்பார்ப்பதில்லை. படத்துக்குப் படம் வித்தியாசமாக என்னை பார்க்க விரும்புகின்றனர். அதனால், வித்தியாசமான கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க...' என்கிறார்.

சினிமா பொன்னையா

பிரபுதேவா அடுத்த அவதாரம்!

இதுவரை நடிகர், நடன மாஸ்டர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வந்தவர், பிரபுதேவா. தற்போது, சார்லி சாப்ளின் - 2 படத்தின் மூலம், பாடலாசிரியராகவும் உருவெடுத்துள்ளார். இந்த படத்தில், 'இவளா இவளா ரொம்ப பிடிச்சிருக்கு...' என்ற பாடலை, முதன் முதலாக எழுதி, நடிக்கிறார், பிரபுதேவா.

சி.பொ.,

தமன்னாவுக்கு திடீர் ஆசை!

நடிக்கத் துவங்கிய நாள் முதல், கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர், தமன்னா. ஆனால், அவருக்கும், விருது வாங்க வேண்டும் என்ற ஆசை துரத்தி வருகிறது. அதனால், 'கமர்ஷியல் கதைகளுக்கு நடுவே, அவ்வப்போது விருதுக்கான கதைகளையும், தேடிப்பிடித்து நடிக்கப் போகிறேன்...' என்று கூறும் தமன்னா, 'சினிமா வரலாற்றில், என் பெயரையும் அழுத்தமாக பதிக்காமல் கரையேற மாட்டேன்...' என்று, அடித்து சொல்கிறார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்.

எலீசா

சான்றிதழ் வெளியிட்ட நடிகை!

பாலிவுட் கவர்ச்சி நடிகையான, ராக்கி சாவந்த், டிசம்பர் 30ல், தீபக் என்பவரை திருணம் செய்து கொள்ளப்போகிறார். இந்நிலையில், தான் கன்னித்தன்மையுடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், கன்னித்தன்மை சான்றிதழை, இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த அவரது வருங்கால கணவர், 'நீ பரிசுத்தமானவள் என்பதை நிரூபித்து விட்டாய்...' என்று வாழ்த்தியிருக்கிறார். ஆனால், நெட்டிசன்களோ, 'இது போலியான சான்றிதழ். இந்த ஆதாரத்தையெல்லாம் நம்ப முடியாது...' என்று ராக்கி சாவந்தை, கிண்டல் செய்துள்ளனர்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

* இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர், தொடர்ந்து சொந்த படங்களை தயாரித்ததில், சில படங்கள், அவரது கையை சுட்டு விட்டன. அதனால், இனிமேல் சொந்த படமெடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ள நடிகர், தன்னை வைத்து படமெடுக்க, மற்ற தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்பதற்காக, சம்பளத்தை தடாலடியாக குறைத்துள்ளார்.

'மகனே... சொல்றத கேளுடா... இப்ப ஆரம்பிச்சிருக்கிற, 'பிசினசில்' கவனத்தை திருப்பு... அத விட்டுட்டு, விஜய் ஆண்டனி மாதிரி, பல தொழில்ல கால் வைக்க ஆசைப்படாதே... அது, சரியா வராதுடா...' என்றார், அப்பா.

* பரதேசி நடிகருடன் அறிமுகமான அந்த ராசியான நடிகை, ஒரே நேரத்தில் இரண்டு மெகா படங்களை, 'கேட்ச்' பண்ணி விட்டார். இதே வேகத்தில் உச்ச நடிகர்களையும், 'அட்டாக்' பண்ணி விட வேண்டும் என்று அம்மணி, 'ஜெட்' வேக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேற்படி, நடிகையின் இந்த அதிரடி வேகம், உச்சத்தில் இருக்கும் மற்ற கோலிவுட் நடிகையருக்கு, 'டென்ஷனை' ஏற்படுத்தியுள்ளது.

'டேய் மச்சி... ராசி கண்ணா... ராசி கண்ணான்னு ஒரு நடிகை புயல், கோலிவுட்டில் மையம் கொண்டிருக்கு... செம துாள்டா... அவங்களுக்கு, ஒரு கோவிலே கட்டலாம்டா...' என்றான், நண்பன் முரளி.

சினி துளிகள்!

* டில்லி அழகியான ராசி கண்ணா, தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதற்காக, தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.

* திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து, கொலைகாரன் மற்றும் அக்னிச்சிறகுகள் படங்களில் நடித்து வருகிறார், விஜய் ஆண்டனி.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us