sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 10, 2019

Google News

PUBLISHED ON : பிப் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுத்த கட்டப்பாவாகும், சமுத்திரகனி!

தமிழில், ஹீரோ மற்றும் வில்லன் என, பல தரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர், இயக்குனர், சமுத்திரகனி. முதன்முறையாக, தெலுங்கில், ராஜமவுலி இயக்கும், ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்திருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் ராம் சரண் நடிக்கின்றனர், இந்த படத்தில். பாகுபலியில், சத்யராஜை, கட்டப்பா வேடத்தில் நடிக்க வைத்தார், ராஜமவுலி. அதே போல், புதிய வரலாற்றுப் படத்திலும், சமுத்திரகனியை, கட்டப்பாவிற்கு இணையான ஒரு அதிரடி வில்லன் வேடத்தில் நடிக்க வைக்கிறார். முதன்முறையாக சரித்திர கால, 'கெட்டப்'புக்கு மாறும் சமுத்திரகனி, இந்த படத்திற்கு, அதிக நாட்கள், 'கால்ஷீட்' கொடுத்து நடிக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழில் நடித்து வரும் புதிய படங்களை வேகமாக முடித்து வருகிறார்.

சினிமா பொன்னையா

இந்தியன் - 2 படத்தில், தென்கொரிய நடிகை!

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படத்தில், காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில், இன்னொரு நாயகியாக, தென்கொரிய நடிகையும், பாடகியுமான, சூசிபே என்பவர், ஆக் ஷன் வேடத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கிழக்கு ஆசிய நாடான தைவானில் நடக்கும்போது, சூசிபே சம்பந்தப்பட்ட ஆக் ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு!

எலீசா

ஹன்சிகாவை அதிர வைத்த, வரலட்சுமி!

கடந்த ஆண்டு, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்த, சண்டக்கோழி - 2 மற்றும் சர்கார் என்ற இரண்டு படங்களிலும் வில்லியாக நடித்தவர், வரலட்சுமி. இந்த படங்களில், கீர்த்தி சுரேஷை விட, வரலட்சுமியின் அதிரடி வில்லி நடிப்பே பேசப்பட்டது. அதைப் பார்த்து, இப்போது தெலுங்கில், தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., - பி.எல்., என்ற படத்தில், ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்க, வரலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதையடுத்து, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும், ஹன்சிகா, வரலட்சுமிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னையும், கீர்த்தி சுரேஷைப் போன்று ஓரங்கட்டி விடுவரோ என்று அதிர்ச்சியில் இருக்கிறார். எங்கேயோ இடித்தது வானம் என்றிருந்தேன்; தப்பாது என் தலையிலே இடித்தது!

எலீசா

மும்பையில், இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம்!

மும்பையில் உள்ள, 19ம் நுாற்றாண்டு அரண்மனையான, குல்ஷன் மஹாலில், இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதில், பல நுாற்றாண்டுகளை கடந்து வந்துள்ள, இந்திய சினிமா சம்பந்தப்பட்ட, 'வீடியோ' மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகம், 140.61 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

—சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* மீண்டும் நடிப்புக்கு வந்த, நடன சூறாவளி நடித்த படங்கள், பெரிதாக வெற்றி பெறவில்லை. அதோடு அவர் உடம்பை வளைத்து, நெளித்து ஆடிய நடனத்திற்கும், ஆரம்ப காலத்தைப் போன்று வரவேற்பு இல்லை. அதனால், தொடர்ந்து, கதாநாயகனாக, 'ரிஸ்க்' எடுக்க விரும்பாத அவர், மறுபடியும் பாலிவுட்டிற்கு படம் இயக்க சென்று விட்டார்.

'டேய் பிரபு... வண்டி ஓட்டற வேலையை மட்டும் பாருடா. அதைவிட்டுட்டு, கார் சக்கரத்தை மாத்தறேன், 'இன்ஜினை' மாத்தறேன்னு, உன் அரைகுறை, 'மெக்கானிக்' வேலையை காட்டாதே...' என்று கண்டித்தார், முதலாளி.

* வாரிசு நடிகைக்கான படவாய்ப்புகள் குறைந்து விட்டன, இதனால், இரண்டாவது ஹீரோயினாக நடித்தாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, மேல்தட்டு நடிகர்களின் சிபாரிசை வேண்டி வருகிறார். அதோடு, ஆரம்ப காலத்தில், தன்னிடம் அன்பை வாரி வாரி வழங்கி வந்த, இரண்டாம்தட்டு இளவட்ட நாயகர்களை, சில காலம் மறந்திருந்த நடிகை, தற்போது, அவர்களிடம் சரணடைந்துள்ளார்.

'கீர்த்தி மிஸ்... இந்த பள்ளியில், ஐந்து ஆண்டுகளாக நீங்க தான், ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சுட்டு வர்றீங்க... விழா ஏற்பாட்டில் மாற்றம் வேணும்ன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க... அதனால், இந்த ஆண்டு வேறொருவரை நியமிக்கலாம்ன்னு இருக்கோம்...' என்றார், தலைமை ஆசிரியர்.

சினி துளிகள்!

* மோகன்லால் நடிக்கும், மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற மலையாளப் படத்தில்,ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

* இந்தியில், சல்மான்கானை வைத்து, தபாங்-3 படத்தை இயக்குகிறார், பிரபுதேவா.

* எமதர்மராஜா வேடத்தில், தான் நடிக்கும், தர்மபிரபு படத்திற்கு, தானே வசனம் எழுதுகிறார், யோகிபாபு.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us