sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 28, 2020

Google News

PUBLISHED ON : ஜூன் 28, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயக்குனர்களை தெறிக்க விடும், விஜய்சேதுபதி!

அடுத்த, 'லெவல்' நடிகராக ஆசைப்படும், விஜய்சேதுபதி, தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம், 'என்னை, 'மாஸ் ஹீரோ'வாக சித்தரிக்கும் காட்சிகளை அதிகமாக வையுங்கள்...' என, கேட்கிறார். அத்துடன், 'ஓப்பனிங் சாங், ஆக் ஷன், பஞ்ச் டயலாக்' என்றெல்லாம் பரபரப்பை கூட்டும் காட்சிகளை அதிகமாக வைக்கும்படியும் கூறுகிறார், மேலும், சில, 'மாஸ் ஹீரோ'க்களின் படங்களில் வரும், 'பில்ட் - அப்' காட்சிகளையும் மேற்கோள் காட்டி, 'அதுபோன்று, எனக்கும் காட்சி வைக்க வேண்டும்...' என்று சொல்லி, இயக்குனர்களை தெறிக்க விடுகிறார்.

—சினிமா பொன்னையா

வாரி வழங்கும், ரெஜினா!

சென்னை பெண்ணான, ரெஜினா, தமிழ் படங்களில், சைவ நடிகையாகவும், தெலுங்கில், அசைவ நடிகையாகி, படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், 'தெலுங்கில் தாராளமாக நடிக்கும் நீங்கள், தமிழ் படங்களில் அப்படி நடிப்பதில்லையே, ஏன்...' என்று கேட்டனர். 'தெலுங்கு ரசிகர்கள், என் அழகை மானாவாரியாக ரசிக்கின்றனர். எனக்காகவே தியேட்டர்களுக்கு படையெடுக்கின்றனர். அதனால், மெகா படங்களும், பெரிய சம்பளமும் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழில் என்னை யாரும் கண்டு கொள்வதில்லையே... அதனால் தான், எனக்கு வரவேற்பு கொடுக்கும், தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த, 'பிகினி, லிப்லாக், பெட்ரூம் சீன்' என, வாரி வழங்குகிறேன்...' என்று, அடுக்கிக்கொண்டே போகிறார். ஆளுக்கு ஒத்த ஆசாரமும், ஊருக்கு ஒத்த உபசாரமும்!

எலீசா

ரசிகர்களை குளிர வைத்த, காஜல்!

கோடை வெயில், வறுத்தெடுத்து வரும் இந்த நேரத்திலும், நடிகையர் பலரும், தங்களது, 'ஹாட்' புகைப்படங்களை வெளியிட்டு, மேலும் சூடேற்றி வருகின்றனர். ஆனால், காஜல் அகர்வாலோ, ஒரு தொட்டி முழுக்க ஐஸ் கட்டிகளை போட்டு, அதற்குள் தான் சாய்ந்து படுத்தபடி, 'கோடை சூட்டை தணிக்கும் இந்த முயற்சி, எனக்கு மட்டுமல்ல, பார்க்கும் உங்களுக்கும் தான்; இந்த, 'ஜில்' அனுபவம்...' என்று, ஒரு, 'ஜில் போஸ்' கொடுத்து, சிலிர்க்க வைத்துள்ளார். கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு, குட்டிச்சுவர் என்ன பிரமாதம்!

எலீசா

ரோஜாவின், வில்லி அவதாரம்!

ஆந்திர அரசியலை கலக்கிக்கொண்டிருக்கும், ரோஜா, 'மீடியா' வெளிச்சம், எப்போதும் தன் மீது பாய்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இப்போது, ஐந்து மொழி படத்தில், வில்லியாக, 'ரீ - என்ட்ரி' கொடுக்கப் போகிறார். அதோடு, 'என் அரசியல், 'இமேஜு'க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலான காட்சிகளே இருக்க வேண்டும்...' என்று, நிபந்தனை போட்டு நடிக்கும், ரோஜா, 'ஹீரோ ரேஞ்சுக்கு, எனக்கும், 'மாஸ் ஓப்பனிங் சீன்' மற்றும் 'மாஸான பில்ட் - அப் சீன்'களும் ஆங்காங்கே இடம்பெற வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டுள்ளார். சித்திராங்கி பொம்மா; சின்ன வேங்கடம்மா!

எலீசா

கறுப்புப்பூனை!

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், தன்னை ஒரு இயக்குனருடன் இணைத்து, 'கிசுகிசு' வெளியானபோது, அழுது புலம்பினார், பிரியமான நடிகை. ஆனால், சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையருக்கு, 'கிசுகிசு' எத்தனை பெரிய வரப்பிரசாதம் என்பதை, சீனியர்கள் கூறினர். இதையடுத்து நடிகை, எந்த பத்திரிகையாளர்களை சந்தித்தாலும், சில மெகா நடிகர்களுடன் தன்னை இணைத்து, 'கிசுகிசு' எழுதுமாறு அவரே, 'க்ளூ' கொடுக்கிறார். அதோடு, 'கிசுகிசு விஷயத்தில், என்னை எப்படி வேண்டுமானாலும் வச்சி செய்யுங்கள். நான் கண்டுகொள்ளவே மாட்டேன்...' என்றும், அவர்களுக்கு, 'புல் எனர்ஜி' கொடுத்து அனுப்புகிறார், அம்மணி.

'நம்ம தெருக்கோடியில் இருக்கும் வீட்டிற்கு, புதிதாக வந்திருக்கும் குடும்பம் பற்றி எதுவுமே தெரியலைன்னு, கீரை விற்கும் அம்மாவிடம் கேட்டேன்.

'அவங்க, வெளியூரிலிருந்து வந்திருக்காங்களாம். ஒரே பொண்ணு, பவானி பிரியாவாம், அது பேரு. 'ஏன், யாரோடையும் பேசி, பழக மாட்டீங்களா'ன்னு கேட்டதற்கு, 'புது இடம், ஒன்றும் சரியா பிடிபடல... நீ வேணா எங்களை பற்றி, தெருவில் இருக்கிறவங்ககிட்ட சொல்லிடேன்'னு, அந்த பொண்ணு சொல்லிடுச்சாம்...

'எப்படி இருக்கு பாரு கதைன்னு புலம்பிட்டு போறாங்க, கீரைக்காரம்மா...' என்று, பெண்கள் இருவர் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

'கமலுடன், இந்தியன்- - 2 படத்தில் ஒப்பந்தமான பிறகு, சினிமா வட்டாரங்களில் எனக்கான மரியாதையே எகிறி விட்டது...' என்கிறார், பிரியா பவானி சங்கர்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us