sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 26, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயகாந்த் பாணியில், விஜய்சேதுபதி!

இதுவரை, கதையின் நாயகனாக நடிப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தி வந்தார், விஜய்சேதுபதி. இந்நிலையில், இனிமேல், நாட்டுக்கு நாமும் ஏதாச்சும் நாலு நல்ல சேதிகளை சொல்லியாக வேண்டும் என்று நினைக்க துவங்கி இருக்கிறார். அதனால், தன் படங்களில், சமூக பிரச்னைகளை கூடுதலாக கலக்குமாறு கூறி வருபவர், விஜயகாந்த் பாணியில், காக்கி சட்டை கதைகளுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்க தயாராகி வருகிறார்.

சினிமா பொன்னையா

'சிக்ஸ்பேக்' நடிகையாகும், சாக் ஷி அகர்வால்!

பெரும்பாலும் நடிகர்கள் தான், 'ஆக் ஷன்' கதைகளுக்காக, 'சிக்ஸ்பேக்' உடல்கட்டுக்கு மாறுவர். ஆனால், சாக் ஷி அகர்வாலோ, தான் நடிக்கப்போகும் புதிய படத்திற்காக, 'சிக்ஸ்பேக்' உடல்கட்டுக்கு மாறிக் கொண்டிருக்கிறார். இதற்காக, பயிற்சியாளர் மூலம், 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர், 'வழக்கமான, 'கிளுகிளு' நாயகியாக இல்லாமல், அதிரடி நாயகியாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த, 'சிக்ஸ்பேக்' முயற்சியில் இறங்கி இருக்கிறேன்...' என்கிறார். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்!

எலீசா

98 கிலோ நடிகை, 68 ஆன அதிசயம்!

தமிழ் சினிமாவின் இளவட்ட காமெடி நடிகையான, வித்யூலேகா, தற்போது, இரண்டே மாதங்களில், 30 கிலோ குறைத்து விட்டதாக சொல்லி, அந்த, 'ஸ்லிம்' புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக, 'டயட்ஸ்' மட்டுமின்றி, வாரத்தில் ஆறு நாட்கள், தான் கடின உடற்பயிற்சியும் செய்ததாக தெரிவித்துள்ளார். அதோடு, 'இனிமேல், காமெடிக்கு நீ, 'செட்' ஆக மாட்டே...' என்று யாராவது சொன்னால், 'என்னோட அடுத்த, 'டார்க்கெட் ஹீரோயினி' தான்...' -என்று சொல்லி, மொத்த கோலிவுட்டுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விட்டாற் போல்!

— எலீசா

கோடிகளில் புரளும், அஞ்சலி!

மார்க்கெட் சரிந்து போன, அஞ்சலியை, இப்போது நரைமுடி, 'ஹீரோ்கள் தான் ஆதரித்து வருகின்றனர். ஆனபோதும், கலங்காத நடிகை, சாதாரண காட்சிகளில் கூட, 'நைட் டிரஸ்' போன்ற கண்ணாடி உடைகளை அணிந்து, முதிர்ந்த நடிகர்களை முறுக்கேற்றுகிறார். இதில் கிறங்கிப்போன மேற்படி, 'ஹீரோ'கள், அஞ்சலிக்கு, தாராளமாக சம்பளத்தை வழங்குமாறு தயாரிப்பாளர்களுக்கு,'ஆர்டர்' போட்டனர். இதனால், லட்சத்தில் இறங்கிக் கொண்டிருந்த, அஞ்சலியின் சம்பளம், மீண்டும் கோடிகளில் புரளத் துவங்கி இருக்கிறது. எறிந்த கல் விழுகிற மட்டும்!

எலீசா

கண்கலங்க வைக்கும், ரஜினி!

மசாலா கதைகளாகவே அதிகமாக நடித்து வந்துள்ள ரஜினி, அண்ணாத்த படத்தில் மசாலாவை குறைத்து, 'சென்டிமென்ட்' அதிகமாக கலந்த கதையில் நடித்து வருகிறார். அதனால், இந்த படத்தில், ஆரம்ப கால ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று சொல்லும் அப்படக்குழுவினர், 'தியேட்டர்களில் எப்போதுமே, ரஜினியைப் பார்த்து, கை தட்டி ஆரவாரம் செய்யும் ரசிகர்கள், இந்த படத்தின், 'கிளைமாக்சை' பார்த்து, கண்கலங்கியபடி வெளியேறுவர்...' என்று, ஒரு புதிய தகவலை சொல்கின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

நம்பர் 1 நடிகை, கலெக்டராக நடித்த, மூன்றெழுத்து படத்தின் இரண்டாம் பாக வாய்ப்பு, மகாநதி நடிகைக்கு செல்ல இருந்தது. இதனால், தான் நடித்த படத்தின் இரண்டாம் பாக வாய்ப்பு இன்னொரு நடிகைக்கு சென்றால், அது, தனக்கு பெருத்த அவமானம். அதோடு, தன் மார்க்கெட் இறங்கி விட்டதாக அல்லவா அனைவரும் நினைப்பர் என்று கொதித்துப் போனார், நடிகை.

அதனால், அந்த படத்தின் இயக்குனரை விடாமல் துரத்தி வந்தவர், தற்போது, மகாநதி நடிகையின் மார்க்கெட், 'டவுன்' ஆகியிருக்கும் தருணத்தை பயன்படுத்தி, மேற்படி இயக்குனரை, லாவகமாக தன் பக்கம் இழுத்து விட்டார். இதனால், செம, 'டென்ஷன்' ஆன, மகாநதி நடிகை, நம்பர் 1 நடிகைக்கு போன் போட்டு எக்கச்சக்கமாக பேச, அவரும் அதற்கு தக்க பதிலடி கொடுக்க, அம்மணிகளுக்கிடையே, திரைமறைவு போர் துவங்கியுள்ளது.

'எட்டாம் வகுப்பு, 'பி' செக் ஷனில் படிக்கும் தாராவும், கீர்த்தியும், எப்ப பாரு, எலியும், பூனையுமாகவே இருக்கின்றனர். போன ஆண்டு, மாணவர் தலைவராக இருந்தார், தாரா. இந்த ஆண்டு, கீர்த்தியை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

'ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாமல், தலைமை ஆசிரியர் மூலமா, தானே மாணவ தலைவரா இருக்க, கோரிக்கை வைத்துள்ளார். இதனால், கீர்த்தி, கோபமாகி, தாராவை ஏகத்துக்கு கடிந்து பேச, தாராவும் பதிலுக்கு பேச... சண்டைக் கோழி மாதிரி சிலிர்த்துக் கொண்டுள்ளனர்.

'இவர்களை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை...' என்று, சக ஆசிரியரிடம் புலம்பினார், வகுப்பு ஆசிரியர்.

சினி துளிகள்!

* மூக்குத்தி அம்மன் படம் வெற்றி பெற்றால், அதன்பிறகு, அவ்வப்போது பக்தி படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார், நயன்தாரா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us