
அஜீத், 'சீரியஸ் அட்வைஸ்!'
அபிமான, 'ஹீரோ'களின் பெயரை, பல ரசிகர்கள், தங்களது உடம்பில் பச்சைக் குத்திக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அஜீத்தோ, ரசிகர்கள் யாராவது தன் பெயரை அவர்களது உடம்பில் பச்சைக் குத்தியிருந்தால், கடும் கோபமாகி விடுகிறார். 'ரசிகன் என்றால், தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் போதும். அதை தாண்டி, வலிக்க வலிக்க உடம்பில் பச்சைக்குத்தி, என் ரசிகன் என்று வெளியில் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற ரசிகர்களை, எனக்கு சுத்தமாக பிடிக்காது...' என்று, 'சீரியஸ்' ஆக, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார்.
- சினிமா பொன்னையா
'டென்ஷன்' செய்த, மாளவிகா மோகனன்!
விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், அதற்கு முன், ரஜினியின், பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர், இந்நிலையில், தற்போது, சில இரண்டாம் தட்டு, 'ஹீரோ'களுடன் நடிக்க, அவரை அழைத்தபோது, 'இப்போது நான், 'டாப் கியரில்' போய் கொண்டிருக்கிறேன். அதனால், 'டாப் ஹீரோ'களுக்கு மட்டுமே 'கால்ஷீட்' கொடுப்பேன்...' என்று சொல்லி, தேடிச் சென்ற படங்களை உதாசீனப்படுத்தி அனுப்பி, 'செகண்ட் கிரேடு ஹீரோ'களை, 'டென்ஷன்' செய்து விட்டார். எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்!
- எலிசா
ஸ்ரேயா ஆவேசம்!
நீச்சல் குளத்தில், ஸ்ரேயா, நீராடும், வீடியோக்கள் அதிகமாக, 'சோஷியல் மீடியா'வில் உலவிக் கொண்டிருப்பது பற்றி, அவரைக் கேட்டால், 'அந்த வீடியோக்கள் எதுவும், நானாக வெளியிட்டதில்லை. போரடித்தால், நான் பெரும்பாலும் பொழுதை கழிப்பதே, நீச்சல் குளத்தில் தான். அப்படி நான், 'ஹாயாக' நீந்துவதை, எனக்குத் தெரியாமல், மொபைலில் வீடியோ எடுத்து, அதை வெளியிட்டு விடுகின்றனர்...' என்று சொல்லும், ஸ்ரேயா, 'நாகரிகமில்லாமல் அடுத்தவரின் பாத்ரூமை எட்டிப் பார்ப்பதுதானே, 21-ம் நுாற்றாண்டின் நவநாகரிகமாகி இருக்கிறது...' என்றும், வெறுப்பை வெளிப்படுத்துகிறார். ஆன காரியத்துக்கு மேளம் என்ன; தாளம் என்ன!
— எலீசா
சூரியனுக்கே சூடு காட்டிய, இலியானா!
கேடி மற்றும் நண்பன் படங்களுக்கு பிறகு, ஹிந்திக்கு சென்று விட்ட, இலியானா, காதலே கதியென்று கிடந்ததால், பாலிவுட் சினிமா மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால், மீண்டும் தென் மாநில சினிமாவுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள, இலியானா, கமர்ஷியல் இயக்குனர்களுக்கு, பாசக்கரம் நீட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதோடு, தன், 'ஹாட்' புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'என் சூட்டுக்கு முன்னால் சூரியனின் சூடு ஒண்ணுமே இல்லை...' -என்றும், படவிளக்கம் கொடுத்து, செம சூடு காட்டியுள்ளார்.ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!
- எலீசா
ரசிகர்கள் கொடுத்த, 'ஷாக்!'
அரசியல் கதைகளில் நடித்து, தற்போதைய அரசியலை, 'அட்டாக்' செய்தால் தான் பரபரப்பை ஏற்படுத்தி, படத்தை ஓட வைக்க முடியும் என்று சில நடிகர்கள் நினைக்கின்றனர். ஆனால், விஜய்சேதுபதியோ, 'நமக்கெல்லாம் அரசியல் சரிப்பட்டு வராது. ஏன்னா, நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்...' என்று சொல்லி, தற்போது, விவசாயம் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்துள்ள படத்தின், 'டிரெய்லரை' பார்த்த ரசிகர்களோ, 'சலித்துப்போன இந்த, 'கான்செப்டை' இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஓட்டுவீங்க; 'ரீல்' அந்து போச்சுடா சாமி...' என்று, 'கமென்ட்' கொடுத்து, விஜய்சேதுபதிக்கு, பலத்த, 'ஷாக்' கொடுத்து விட்டனர்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* காக்கா முட்டை நடிகை, பார்ப்பதற்குத்தான் சாது. ஆனால், அம்மணியிடம் யாராவது வம்பு இழுத்தால், சொர்ணாக்காவாக மாறி விடுவார். அதோடு, வடசென்னை தமிழில், கெட்ட வார்த்தைகளை பச்சை பச்சையாய் கரைத்து ஊற்றி, பாத்தி கட்டி விடுவார். இதனால், படப்பிடிப்பு தளங்களில், அம்மணியிடம், யாரும் வாய் கொடுப்பதே இல்லை. அதோடு, சம்பள பாக்கி வைத்தால், அம்மணி, வரிந்து கட்டி வந்துவிடுவார் என்பதால், அதற்கு பயந்தே, முதல் ஆளாக அவருக்கு, 'செட்டில்' பண்ணி விடுகின்றனர், தயாரிப்பாளர்கள். அந்த அளவுக்கு கோடம்பாக்கத்தை கதற வைத்திருக்கிறார், நடிகை.
'மீன் மார்க்கெட்டுக்கு போறேன், வர்றியா கண்ணு...'
'சரிம்மா...'
'இதோ, அந்த கடையில் உட்கார்ந்திருக்கிறவங்க தான், ஐஸ்வர்யா. சரியான ரவுடி பொம்பள... யாராவது வம்பு செய்தாலோ, மீன் விலையை குறைச்சுக் கேட்டாலோ, அவ்வளவு தான்... அந்தம்மா சொல்ற விலையை கொடுத்துடணும்... இல்லாட்டி, நம்மள உண்டு - இல்லைன்னு பண்ணிடும். ஆனா, எந்த குறையும் இல்லாத, நல்ல மீனா தான் கொடுக்கும்...' என்று கூறினார், அம்மா.
சினி துளிகள்!
* தமிழில் இருந்து தெலுங்குக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ், சம்பளத்தை அப்படியே, 'டபுள்' ஆக்கி விட்டார்.
அவ்ளோதான்!

