தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினியின், பாலிவுட், 'சென்டிமென்ட்!'

சமீப காலமாக, தன் படங்களில், பாலிவுட் நடிகர்களையே வில்லனாக்கி வருகிறார், ரஜினி. அந்த வகையில், 2.0 படத்தில், பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார், வில்லனாக நடித்த நிலையில், காலா படத்தில், இன்னொரு பாலிவுட் நடிகரான, நானா படேகர், வில்லனாக நடித்தார். அதையடுத்து, தர்பார் படத்தில், சுனில் ஷெட்டி நடித்த நிலையில், தற்போது, ரஜினி நடித்து வரும், அண்ணாத்த படத்தில், பாலிவுட் நடிகர், ஜாக்கி ஷெராப், வில்லனாக நடிக்கிறார். ஹிந்தியில் வெளியான, உத்தர் தக்ஷன் என்ற படத்தில், முதன்முறையாக, ரஜினியும், ஜாக்கி ஷெராப்பும் இணைந்து நடித்தனர். அதையடுத்து, 33 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது, மீண்டும் இணையப்போகின்றனர்.

— சினிமா பொன்னையா

படுக்கையறை காட்சியில், த்ரிஷா!

சினிமா, 'டல்'லடிப்பதால், அடுத்த வாய்ப்பாக, 'வெப் சீரிஸ்' பக்கம் திரும்பியிருக்கிறார், த்ரிஷா. 'வெப்சீரிஸில்' படுக்கையறை காட்சியில், பலான பட நடிகையர் ரேஞ்சுக்கு நடித்துக் கொடுப்பதாக சொல்லி, இதுவரை மூடி வைத்திருந்த இருட்டறை கதவுகளை திறந்து விட்டுள்ளார். 'ஒரு சீனியர் நடிகையே, இப்படி துகிலுரிந்து நடித்து, ரசிகர்களை துவம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னவாகுமோ...' என்று, இளவட்ட நடிகையர், கதிகலங்கி நிற்கின்றனர். வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர கழுதைப் போல ஆனாள்!

— எலீசா

மேகா மீதான, மோகம் குறைந்தது!

மேகா ஆகாஷ், சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தபோது, அவரது அழகை, 'ஆஹா... ஓஹோ...' என்று வர்ணித்த, 'ஹீரோ' மற்றும் இயக்குனர்களெல்லாம், அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஊத்திக்கொண்டதால், ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி வருகின்றனர். இதனால், 'மேல்தட்டு, 'ஹீரோ'கள் தான் என் இலக்கு...' என்று, கெத்தாக பேசி வந்த, மேகா ஆகாஷ், இப்போது, அவர்கள் தன்னை கண்டாலே தலையை திருப்பிக் கொள்வதால், கடுப்பாகி, 'புது வரவு நடிகர்களுடன், 'ஹிட்' படங்களில் நடித்து, மீண்டும் உங்களை, என், 'கால்ஷீட்'டுக்காக நீண்டவரிசையில் நிற்க வைத்து காட்டுகிறேன்...' என்று, கோபத்தில் கொப்பளித்துள்ளார்.

வாயால் பந்தல் இடுகிறது போல்!

எலீசா

பாணியை மாற்றும் சிம்பு!

தன் இன்னொரு பெயர், வம்பு என்றாகி விட்டதை மாற்றுவதில், தற்போது தீவிரம் காட்டுகிறார், சிம்பு. அதோடு, 'இனிமேல், 'ரொமான்டிக்' நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, விக்ரம் பாணியில், கதையின் நாயகனாகப் போகிறேன்...' என்கிறார். அதாவது, கதாபாத்திரங்களுக்காக, தன், 'கெட் - அப்'பையே மாற்றி, 'ரிஸ்க்' எடுக்க தயாராகி விட்டார். தற்போது, தன் முன்னாள் காதலி, ஹன்சிகாவுடன் நடித்து வரும், மஹா படத்திற்காக, 20 கிலோ எடை குறைத்து, நடித்து வருகிறார். அதையடுத்து, 'இனிமேல், என்னை ஒரே மாதிரி சிம்புவாக பார்க்க முடியாது. படத்துக்குப் படம், வேற மாதிரி பார்க்கப் போறீங்க...' என்றும், சினிமா நண்பர்களிடம், 'சொடக்' போட்டு வருகிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

'ஜூனியர் தாரா' என்று, ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும், சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த அந்த நடிகை, ரியல் தாரா நடிகைக்கு, பெரிய தலைவலியை கொடுத்து வருகிறார். அதாவது, ரியல் தாராவுக்கான கதையை தயார் செய்து, அவரது சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியுடன் நிற்கும் தயாரிப்பாளர்களை அணுகி, 'பொன்னை வைக்கிற இடத்தில் ஒரு பூவை வைத்தாலும் போதும்; தாரா கொடுக்கும் அதே, 'பர்பாமென்சை' நான் கொடுக்கிறேன்...' என்று, தாராவின் பட வாய்ப்பை கைப்பற்றி வருகிறார், ஜூனியர். இதனால், தன்னிடம் பேசி சென்றவர்கள், ஆலோசித்து மறுபடியும் வருவர் என்று எதிர்பார்க்கும் தாரா, அவர்களை, இந்த ஜூனியர் தாரா இடைமறிந்து விடும் சேதியறிந்து, அதிர்ச்சியடைந்துள்ளார்.

'இந்த வாணிக்கு, ரொம்ப தான் திமிர். நானும் தையல் கடை நடத்தி வருகிறேன். அவளும் தையல் தெரிந்தவள்; வீட்டிலிருந்தபடியே தைத்துக் கொடுத்து வருகிறாள். என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வழிமறித்து, கடையில் தைத்துக் கொடுப்பதை விட, குறைவான செலவில், புதுப்புது மாடலில் ஜாக்கெட், சுரிதார்கள் தைத்துக் கொடுப்பதாக கூறி, தன் பக்கம் வளைத்துக் கொள்கிறாள். இது நியாயமே இல்லை...' என்று, தன் தோழியிடம் புலம்பினாள், தாரா.

சினி துளிகள்!

* ஓ மை கடவுளே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த, வாணி போஜன், அதையடுத்து, ஒரே நேரத்தில், மூன்று படங்களில், நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us