தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியாபார வட்டத்தை விரிவுபடுத்தும், தனுஷ்!

ஹிந்தியில், ராஞ்ஜனா மற்றும் ஷமிதாப் போன்ற படங்களில் ஏற்கனவே நடித்துள்ள, தனுஷ், தற்போது, அட்ராங்கிரே என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இனி, தமிழைப் போலவே, ஹிந்தியிலும் தொடர்ந்து நடித்து, எனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பாலிவுட்டிலும் உருவாக்கப் போகிறேன்...' என்கிறார். அதுமட்டுமின்றி, தமிழில் தான் நடித்த, 'சூப்பர் ஹிட்' படங்களை, ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் ஒரேநேரத்தில் வெளியிட்டு, வியாபார வட்டத்தை விரிவுபடுத்தி, தன்னை, இந்திய அளவிலான ஒரு நடிகராக வளர்த்துக் கொள்ளவும் திட்டமிட்டு வருகிறார், தனுஷ்.

சினிமா பொன்னையா

மகிமா நம்பியார், காட்டுக்கூச்சல்!

லட்சுமிமேனன் உள்ளிட்ட பல குடும்ப குத்து விளக்குகள், கவர்ச்சி விளக்குகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகை மகிமா நம்பியாரோ, யாராவது இயக்குனர்கள், கவர்ச்சி என்று வாய் திறந்தாலே, காட்டுக்கூச்சல் போடுகிறார். 'சுத்த சைவ ஓட்டலுக்கு வந்து அசைவம் கேட்டா எப்படி...' என்று, எதிர் குரல் கொடுக்கும், மகிமா, 'நம்மகிட்ட, கவர்ச்சி, கண்ணுல மட்டும் தான் கிடைக்கும். உடம்புல கிடைக்கும்ன்னு எதிர்பாத்து, என் வீட்டுப் பக்கம் மறந்தும் கூட வந்துடாதீங்க...' என்று, கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய், இயக்குனர்களை தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடி கறக்கிற மாட்டை, பாடி கறக்க வேண்டும்.

எலீசா

அஜீத்துக்கு,'டப்' கொடுத்த, பாலிவுட் நடிகை!

தல அஜீத், பைக் ரேஸ் வீரர் என்பது தெரிந்ததே. தற்போது, வலிமை படத்தில் போலீசாக நடித்து வரும் அவர், பைக் ரேஸ் காட்சிகளிலும் நடிக்கிறார். அதோடு, இந்த படத்தில், நாயகியாக நடிக்கும் ஹிந்தி நடிகை, ஹூமா குரோஷி, பைக் காட்சியில், செம மாஸாக நடித்து, அஜீத்தையே அசர வைத்து விட்டார். இதையடுத்து, அந்த காட்சியில் நடித்து முடித்ததும், 'பைக் ரேஸ் வீரரான எனக்கே, 'டப்' கொடுத்து விட்டீர்கள்...' என்று, ஹூமா குரோஷிசியை பாராட்டியுள்ளார், அஜீத். அட அதிசயமே, சீமைச் சரக்கே!

எலீசா

சில்க் ஸ்மிதாவின், மர்ம முடிச்சு அவிழ்க்கப்படுமா?

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், முன்னாள் கனவுக் கன்னியான, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட்டில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமானது. அந்த படத்தில், சில்க் வேடத்தில் நடித்த, வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது தமிழிலும், அவள் அப்படித்தான் -என்ற பெயரில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகப் போகிறது. இதில், சில்க் வேடத்தில், யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

'மர்மமான முறையில் இறந்த, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் நடந்த, சில மர்ம முடிச்சு, இந்த பாகத்தில் அவிழ்க்கப்படும்...' என்றொரு செய்தியும், கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கப்படுகிறது.

- எலீசா

கறுப்புப்பூனை!

களவாணி நடிகரின் மார்க்கெட், குடை சாய்ந்து கிடப்பதால், பிரபல இயக்குனர்களுடன் நேசம் காட்டி வரும், தன் முன்னாள், 'ஹீரோயினி'களிடம் சிபாரிசு கோரி வருகிறார். அதோடு, இப்போதைய நடிகையர், ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்பதால், 'அப்படி, எனக்கு, 'ஹீரோ' வாய்ப்பு வாங்கிக் கொடுத்தால், கிடைக்கும் சம்பளத்தில், 50 சதவிகிதத்தை, 'கட்டிங்' கொடுத்து விடுகிறேன்...' என்று, 'அக்ரிமென்ட்' போட்டுள்ளார், களவாணி. பெரும்பாலும், 'ஹீரோயினி'கள் தான், சினிமா உலகில், தங்களுக்கு சிபாரிசு செய்ய, 'ஹீரோ'களுக்கு, 'பார்ட்டி' கொடுப்பர். இப்போது, களவாணி நடிகரோ, தான் அம்மணிகளிடம் சிபாரிசு கேட்பதால், அவர்களுக்கு மேல்நாட்டு சரக்கு விருந்தெல்லாம் கொடுத்து, 'தாஜா' செய்து வருகிறார்.

'விமல் தம்பி... நீ சொல்றது புரியல. இன்னொரு முறை தெளிவா சொல்றியா...'

'அக்கா, நீங்களும், நானும் பக்கத்து பக்கத்துல, 'ரெடிமேட் ஷாப்' வைத்துள்ளோம். நீ, பெண்களுக்கான ஐட்டங்களையும், நான், ஆண்களுக்கான உடைகளையும் வைத்து, வியாபாரம் செய்து வர்றோம். இடப்பற்றாக்குறை காரணமாக, எனக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வர மாட்டேங்கிறாங்க... நம்ம இரு கடைகளையும் இணைத்து, ஒரே கடையாக விசாலமாக்கிட்டா, நிறைய பேர் வருவாங்க, வியாபாரமும் சூடு பிடிக்கும்; இடத்துக்கான வாடகையில், 50 சதவீதத்தை நான் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. என்ன சொல்றீங்க...' என்று பக்கத்து கடை பெண் உரிமையாளரிடம் கேட்டான், விமல்.

சினி துளிகள்!

* சண்டைக்காரி படத்தில், தனக்கு ஜோடியாக, ஸ்ரேயா நடித்திருப்பதை அடுத்து, 'ரஜினி, விஜய் படங்களில் நடித்த, ஸ்ரேயா என்னுடனும் நடித்துள்ளார்...' என்று பெருமையடித்து வருகிறார், விமல்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us