
ஜி.வி.பிரகாஷின் சர்வதேச, 'ஆல்பம்!'
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில், 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில், சர்வதேச, 'ஆல்பத்தை' வெளியிட்டார். அந்த பாடல் உலக அளவில், 'ஹிட்' ஆனது. அதனால், சூட்டோடு சூடாக, 'கிரையிங் நைட்' -என்ற பெயரில், அடுத்த, 'ஆல்பத்தை' தயார் செய்து வருகிறார். அதோடு இந்த, 'ஆல்பத்தை' ஜூலியா கர்தா என்ற பாடகியுடன் இணைந்து, தானும் பின்னணி பாடுகிறார், ஜி.வி.பிரகாஷ்.
— சினிமா பொன்னையா
நித்யாமேனனை புலம்ப விட்ட, 'ஹீரோ'கள்!
நித்யாமேனனை, சில இயக்குனர்கள், எடை குறைத்து, 'ஸ்லிம்'மாக சொன்னபோது, 'நான், சாப்பாட்டு பிரியை. அதனால், வாயைக் கட்டி, வயித்தைக் கட்டியெல்லாம் என்னால் உடம்பை மெலிய வைக்க முடியாது...' என்று, திட்டவட்டமாக கூறி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல் கட்டு உருண்டு, திரண்டு பெருத்துக் கொண்டிருந்ததால், அவருடன் நடிக்கும் சில, 'ஹீரோ'களே, 'செம கட்ட, நாட்டுக் கட்ட...' என்று, கிண்டல் செய்யத் துவங்கினர். இதனால், அதிர்ந்து போன நித்யா, 'இதை, கண்டுகொள்ளாமல் விட்டால், 'ஹீரோயினி இமேஜு'க்கு, பங்கம் ஏற்படுத்தி விடுவர்...' என்று பயந்து, கடினமாக, 'டயட்ஸ்' கடைப்பிடித்து, 'ஸ்லிம்'மாகி விட்டார். ஆனபோதும், 'சினிமாவில் நடித்து, லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும், ஆசைப்பட்டதை சாப்பிட முடியவில்லையே. என்ன வாழ்க்கை இது...' -என்று, புலம்பிக் கொண்டிருக்கிறார். அதுக்கும் இருப்பாள், இதுக்கும் இருப்பாள்; ஆக்கின சோத்துக்கு பங்கும் இருப்பாள்!
— எலீசா
சூடு காட்ட வரும், நிவேதா பெத்துராஜ்!
'இப்போதைய ரசிகர்களை, 'இம்ப்ரஸ்' பண்ண, 'ரிஸ்க்' எடுத்து, நடிக்க வேண்டியதில்லை... இடுப்பை வளைப்பது, நெஞ்சை நிமிர்த்துவது, உதட்டை கடிப்பது என்று, ரசிகர்களுக்கு சூடு காட்டி, 'கிக்' ஏற்றினாலே போதும். இந்த சூட்சுமத்தை தெரிந்து, நடித்த பிறகு தான், தெலுங்கில், என், 'மார்க்கெட் கிடுகிடு'வென எகிறியது... மேலும், இதே வழியில், அடுத்தபடியாக, தமிழிலும், 'என்ட்ரி' கொடுத்து, தமிழக ரசிகர்களுக்கும், 'சூடு' காட்டப் போகிறேன்...' என்கிறார், நிவேதா பெத்துராஜ். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
- எலீசா
கோலிவுட்டை சிதற விட்ட, கேத்ரின் தெரசா!
தமிழில், அதீத, 'கிளாமர்' காண்பித்து நடித்து, இளசுகளின் சூட்டை கிளப்பியபோதும், கேத்ரின் தெரசாவை கோலிவுட் ஆதரிக்கவில்லை. அதனால், தற்போது, டோலிவுட்டில் கொடி ஏற்றி வரும் அம்மணி, 'மொக்க' காட்சி என்றாலும், மொத்த கவர்ச்சியையும் காண்பித்து, ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சிலர், மீண்டும் கோடம்பாக்கத்துக்கு, கேத்ரினை அழைத்தபோது, 'தற்போது தான் லட்சங்களை கடந்து, கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறேன்...' என்று சொல்லி, சில விரல்களை காட்டி சொடக் போட்டுள்ளார். அதைப் பார்த்து, 'அம்மாடியோ... இத்தனை விரலை காட்டினா, நம் பட்ஜெட் தாங்காது அம்மணி...' என்று, அந்த படாதிபதிகள், மிரண்டு, ஓட்டம் பிடித்து விட்டனர். இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!
— எலீசா
விஜயசாந்தியின், 'பொலிட்டிக்கல் இமேஜ்!'
முன்னாள், 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையான, விஜயசாந்தி, சமீபகாலமாக, அரசியல்வாதியாகி விட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்குப்பிறகு, தெலுங்கில், மகேஷ்பாபு நடித்த, சாரிலேரு நீக்கேவரு -என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதையடுத்து, அல்லுஅர்ஜுன் நடிக்கும் படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, 'நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வரும் என்னை, இந்த படத்தில், தவறான அரசியல்வாதியாக சித்தரிப்பது போல் நடிக்க சொன்னதால், மறுத்து விட்டேன். என் அரசியல், 'இமேஜி'ற்கு, களங்கம் கற்பிக்கும் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று, தென்னிந்திய சினிமாவிற்கு, உரக்க சொல்லி விட்டேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
திருமணத்திற்கு பிறகு, 'ரீ - -என்ட்ரி' கொடுத்துள்ள, முத்தழகு நடிகை, அடக்கி வாசிப்பார் என்று பார்த்தால், தாறுமாறாக இறங்கியடிக்க தயாராகி விட்டார். அதோடு, தன் முன்னாள், 'ஹீரோ'களுடன் மீண்டும் உறவு பாலம் எழுப்பி, தங்குதடையின்றி பழகி வருகிறார். இதனால், முத்தழகுவின் ஆட்டம், மறுபடியும் அத்துமீறிக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கின்றனர். 'அந்த அளவுக்கு, ஆத்துக்காரர் கொடுக்கும் சுதந்திரத்தை, தவறாக பயன்படுத்தி வருகிறார், முத்தழகு...' என்கின்றனர்.
'அம்மா, என் நாத்தனார் பொண்ணு ப்ரியாவை தெரியும்தானே உனக்கு. 'கிளாசிக்கல்' மற்றும் 'வெஸ்டர்ன்' நடனத்தில் துாள் கிளப்புவாளே... சமீபத்தில், திருமணமாகி அமெரிக்கா போனாள் இல்லையா, அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்கலைன்னு, இந்தியா வந்து விட்டாள். அவளது கணவரும், 'லீவு கிடைக்கும்போது, நானே அங்கு வருகிறேன்...' என்று சொல்லி விட்டார். அவ, இங்கு வந்ததிலிருந்து ஆளே மாறிட்டா... 'மாடலிங்' செய்யப் போறேன்னு ஒரே அமர்க்களம் தான். இப்ப, சினிமாவில் வேறு நடிக்க முயற்சி செய்துட்டு இருக்கா...' என்று அம்மாவும், மகளும் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* திருமணத்திற்கு பிறகு, தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார், பிரியாமணி.
அவ்ளோதான்!