sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டப்பிங் ஆர்ட்டிஸ்டா'கும் விஜய்சேதுபதி!

தான் நடிக்காத மற்ற நடிகர்களின் சில படங்களுக்கும், 'ஓப்பனிங்' பேசியிருக்கிறார், விஜய்சேதுபதி. இந்நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற, ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற, 'அயர்ன்மேன்' கதாபாத்திரத்திற்கு, 'டப்பிங்' கொடுத்தார். தற்போது தெனாலிராமனின் கதைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படத்தில், தெனாலிராமன் கதாபாத்திரத்திற்கு, 'டப்பிங்' கொடுத்துள்ளார்.

— சினிமா பொன்னையா

அடுத்த, 'ரவுண்ட்'க்கு அடித்தளம் போடும், தமன்னா!

முதல், 'ரவுண்டை' முடித்து விட்ட, தமன்னா, அடுத்த, 'ரவுண்ட்'க்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது அபிமானிகளோ, 'அவருக்கு, வயதாகி விட்டது; பழைய கவர்ச்சி இல்லை...' என்பது போன்ற, சில காரணங்களை சொல்லி, ஓரங்கட்ட நினைக்கின்றனர்.

ஆனபோதும் அசராமல், தன் இடையழகு, தொடையழகை வெளிப்படுத்தும் அசத்தலான புகைப்பட, 'ஆல்பத்'தை அவர்களுக்கு அனுப்பி, 'இதில் என்ன குறை கண்டீர்கள். முன்பை விட இப்போது தான் கூடுதல் மெருகேறி இருக்கிறேன்...' என்று, இனிக்க இனிக்க பேசி, அடுத்த, 'ரவுண்ட்'க்கு, அடித்தளம் போடும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்!

எலீசா

த்ரிஷாவின், அதிர்ச்சி பதில்!

தெலுங்கு நடிகர் ராணாவை, பல ஆண்டுகளாக காதலித்த, த்ரிஷா, பின்னர், அவரை பிரிந்தார். அதையடுத்து, தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள தயாரானார். திருமணம் நடக்கயிருந்த நேரத்தில், சினிமாவில் நடிப்பதற்கு தடை போட்டதால், அந்த திருமணத்தையும் நிறுத்தினார். இந்த நிலையில், 'திருமணம் எப்போது...' என்று அவரைக் கேட்டால், 'என் மனசுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை. அவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போது தான் திருமணம். ஒருவேளை, சந்திக்கவே இல்லையென்றால் கடைசி வரை, 'சிங்கிளாக'வே வாழ்ந்து விடுவேன்...' என்று, அதிர்ச்சி பதில் கொடுக்கிறார். ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று!

 எலீசா

தள்ளாட்டத்தில், 'சீயான்' விக்ரம்!

விஜய்சேதுபதி சில படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில், தன் மகன், துருவ் விக்ரம் நடிக்கும் படமொன்றில் வில்லன் அவதாரம் எடுக்கிறார், விக்ரம். இந்த தகவல் வெளியானதை அடுத்து, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. மேலும், சில தமிழ் பட இயக்குனர்களும் விக்ரமை வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆக, மகனுக்காக வில்லன் அவதாரம் எடுத்த விக்ரமை, நிரந்தர வில்லனாக்க பலரும் களமிறங்கி விட்டனர். இதனால், 'ஷாக்' ஆன, விக்ரம், வில்லன் வேடங்களை ஏற்பதா, மறுப்பதா என்பது புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பாலிவுட் சினிமா, தன்னை நிராகரித்து விட்டதால், கோலிவுட்டில் கோலோச்சுவதில் மும்முரம் காட்டுகிறார், ஆஸ்கர் நாயகன். ஆனபோதும் சமீபகாலமாக, கொலவெறி இசையமைப்பாளர், தொட்டதெல்லாம், 'ஹிட்'டாகிக் கொண்டிருப்பதால், அவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க வைப்பதில், தல - தளபதிகளே அதிக ஆர்வமாக இருக்கின்றனர். இதனால், மெகா நடிகர்களின் படங்களை, ஆஸ்கர் நாயகன் கைப்பற்ற விடாமல், அவருக்கு கடுமையான, 'டப்' கொடுக்கிறார், கொலவெறி. புறக்கணிக்கப்படுவதற்கு, தான் வாங்கும் மெகா சம்பளமும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொண்ட, ஆஸ்கர் நாயகன், அடுத்தபடியாக, தன் ரேஞ்சில் இருந்து சற்று இறங்கி, குறைந்த சன்மானத்தில் நிறைவான இசையை கொடுத்து, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார்.

'நம்மளோடு, 'பிசினஸ் மேனேஜ்மென்ட்' படிச்சாங்களே... ரஹ்மான் - அனிருத் ஞாபகம் இருக்கிறதா?'

'ஆமாம்... நினைவிருக்கு, அவங்களுக்கு என்ன?'

'அவங்க படிப்பை முடிச்சதும், ஒரே ஏரியாவில், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை போட்டாங்க. ஆரம்பத்தில், ரஹ்மான் கடையில் நல்லா வியாபாரம் ஆனது. லாபம் அதிகம் பார்க்கணும்ன்னு, பொருட்கள் விலையை கூட்டி வித்தான். வாடிக்கையாளர் குறைஞ்சுட்டாங்க. இப்ப, அனிருத் கடையில் செம பிசினஸ் ஆகிறது. அவனும், வாடிக்கையாளர் தேவை அறிந்து நிறைய பொருட்களை கடை முழுவதும் குவித்து வைத்து, நியாயமான விலையில் விற்கிறான்...' என்று, இருவர் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

* 'ஏ.ஆர்.ரஹ்மானின் எல்லா பாடல்களுமே எனக்கு பிடிக்கும். அவரே என் இன்ஸ்பிரேஷன்...' என்கிறார், அனிருத்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us