தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழைய, 'கெத்து'க்கு மாறிய, கமல்!

அரசியல்வாதியான பிறகு, சமூக அவலங்களை களையெடுக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ள, கமல், இந்தியன் -- 2 படத்தில், ஊழலுக்கு எதிரானவராக, நடிக்கிறார். தற்போது நடிக்கும், விக்ரம் படத்தில், சமூகவிரோதிகளை வேட்டையாடுகிறார். அதற்காக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு, மறுபடியும் காக்கி சட்டையுடன் கம்பீரமான தோற்றத்துக்கு மாறியிருப்பவர், 'போலீசுன்னா இப்படித்தான் இருக்கணும்ன்னு இந்த படத்தில் நான் நடித்துக்காட்டப் போறதில்ல; வாழ்ந்து காட்டப் போறேன்...' என்று, 'கெத்'தாக ஒரு, 'சல்யூட்' அடித்தபடி களமிறங்கி இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கோலிவுட்டை சூடேற்றிய, பூஜா ஹெக்டே!

விஜயின், 65வது படத்தில், அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார், பூஜா ஹெக்டே; பல படங்களில் நடித்திருந்தபோதும், தெலுங்கில், அல்லு அர்ஜுனுடன், அல வைகுந்த புரமுலோ -என்ற படத்தில் இடம்பெற்ற, 'புட்டபொம்மா புட்ட பொம்மா...' -என்ற பாடல் தான், தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் அவரை பிரபலப்படுத்தியது. அதனால், 'இந்த படத்தில், என் அழகை வர்ணித்து, விஜய் பாடுவது போன்று, புட்டபொம்மா- கட்டபொம்மா என, ஏதாவது ஒரு பாடல் வையுங்கள்...' என்று, கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, 'அந்த பாடலில், 'டூ பீஸ், பிகினி'யில் கலக்கவும் தயாராக இருக்கிறேன்...' என, முன்மொழிந்து, வந்த வேகத்திலேயே கோலிவுட்டை சூடேற்றியிருக்கிறார், பூஜா. புத்தியாய் வந்த சேவகன், நெருப்பாய் கட்டி வீசுவான்!

எலீசா

கிண்டல் செய்த இளசுகளுக்கு, சவால் விட்ட சுனைனா!

'வயது, 31 ஆகிவிட்டது, இனிமேல், கேரக்டர் நடிகையாகி விடலாம்...' என்று நினைத்தார், சுனைனா. எதிர்பாராத விதமாக தன் முதல் படநாயகனான நகுலுடன் ஒரு படத்தில், 'டூயட்' பாடும் வாய்ப்பு கிடைக்க, மீண்டும் புதிய படங்களில் கதாநாயகியாக நடிக்க, கல்லெறிந்து வருகிறார். ஆனால், இந்த சேதியை கேள்விப்பட்ட சில இளவட்ட, 'ஹீரோ'கள், 'கண்ணை சுத்தி கருவளையம், முகத்தில் சுருக்கம், தலையில நரை முடி தெரியுது. இந்த வயசுல, 'டூயட்' ஆசையா...' என்று, சுனைனாவை கிண்டல் செய்து, 'மெசேஜ்' அனுப்பியுள்ளனர்.

இதனால், செம கடுப்பானவர், துளியும், 'மேக் - அப்' போடாத தன் புகைப்படங்களை டஜன் கணக்கில் எடுத்து அனுப்பி, 'என் இளமையில், எங்காவது ஒரு சின்ன கீறல் விழுந்திருக்கான்னு பார்த்து சொல்லுங்க, பார்க்கலாம். அப்படி சொல்லிட்டா, உங்களுக்கே அம்மாவா நடிக்க நான் தயார்...' -என்று, அந்த இளவட்ட 'ஹீரோ'களுக்கு சவால்விட்டு, அதிர விட்டுள்ளார்.புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழைய வாய்க்கால் துார்க்கவும் வேண்டாம்!

எலீசா

ரஜினி பாணியில், ராகவா லாரன்ஸ்!

சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன் என்று சொல்லும், ராகவா லாரன்ஸ், 'ரஜினி, 'பாசிட்டீவ்' வேடத்தில், 'ஹீரோ'வாக நடித்ததை விட, 'நெகடீவ்' வேடத்தில் நடித்த படங்களை ரொம்பவே ரசிப்பேன். காரணம், அந்த மாதிரி வேடங்களில் அவர், எதிர்பார்க்காத அளவுக்கு மாறுபட்ட, 'பர்பாமென்சை' கொடுப்பார். அதனால் தான், சந்திரமுகி படத்தில், ரஜினி நடித்த, வேட்டையன் வேடத்திலேயே, சந்திரமுகி -- 2 படத்தில், நான் நடிக்கிறேன். ரஜினி எப்படி, 'நெகடீவ்' வேடத்தில், ரசித்து ரசித்து நடிப்பாரோ, அதேபோல், நானும், இந்த வேடங்களில் நடித்து, என் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

மேனன் இயக்குனர் இயக்கிய சில படங்கள், நிதி பிரச்னையில் சிக்கி, கிடப்பில் உள்ளதால், அடுத்தபடியாக அவரை நம்பி பணத்தை இறக்க எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. அதனால், சினிமாவில் தன்னை, 'அப்டேட்'டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தான் வளர்த்து விட்ட, 'ஹீரோ'களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார், மேற்படி இயக்குனர். இவரிடம் வாய்ப்பு கேட்டு நடிகர்கள் படையெடுத்த நிலை மாறி, இப்போது இவர், கம்பெனிகளுக்கு படையெடுப்பதை பார்க்கும் நடிகர்கள், வருத்தப்படுகின்றனர். ஆனால் தயாரிப்பாளர்களோ, 'எங்களின் பணத்தை, தண்ணீர் மாதிரி மானாவாரியாக அள்ளி இறைத்த மனிதர்களுக்கு, இப்படித்தான் பரிதாப நிலை ஏற்படும்...' என்று, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கிண்டல் செய்கின்றனர்.

'புதுசா வியாபாரம் செய்யலாம்ன்னு நண்பர் கவுதம், நம்மள கூட்டு சேர்த்துக்கிட்டு, நம் பணத்தை ஆட்டையை போட்டுட்டான். சரியாக திட்டமிடாமல், தொழில் செய்ததில், நஷ்டப்பட்டதுதான் மிச்சம். இனி, அவனை எதிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாதுடா...'

'நீ சொல்றது சரிதான். அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா? அவனோடு யாரும் கூட்டு சேரலைன்னதும், சொந்தமா தொழில் செய்ய முடிவெடுத்து, அலைஞ்சுட்டு இருக்கானாம். 'அடுத்த வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே'ன்னு நினைக்கிறவங்களுக்கு இதுதான் முடிவு...' என, நண்பர் இருவர் பேசிக் கொண்டனர்.

சினி துளிகள்!

* பல மொழிப்படங்களிலும் நடிக்கும் விஜய் சேதுபதி, 'வெப்சீரியல்'களிலும் நடிக்கிறார். ஆனால் சினிமாவை விட, 'வெப்சீரியல்'களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குகிறார்.

*கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில், போலீசாக நடித்த இயக்குனர் கவுதம்மேனன், அடுத்து, சிம்பு நடிக்கும், பத்து தல படத்தில், வில்லனாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us