தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோகிபாபுக்கு அடித்த, 'ஜாக்பாட்!'

காமெடியனாக வலம் வந்த, யோகிபாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அந்த வகையில், ஒரு படத்தில், நயன்தாராவை ஒருதலையாக காதலித்தவர், தற்போது இன்னொரு படத்தில், அஞ்சலியை காதலித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, நடிகை லட்சுமிமேனனும், யோகி பாபுவுடன், 'டூயட்' பாடுவதற்கு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும், மற்ற காமெடியன்களுடன் நிபந்தனை போட்டு நடிக்கும் நடிகையர், யோகிபாபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், எந்த தடை உத்தரவும் போடாமல் ஏக போக தாராளம் காட்டி நடிப்பதற்கு, 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளனர்.

இதற்கு முன், தன்னுடன் யாரும், 'டூயட்' பாட மாட்டார்கள் என்று, நடிக்க தயங்கி வந்த யோகிபாபு, தற்போது, மேல்தட்டு நடிகையரே தன்னுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதால், அவர்களுடன் நடனமாட வரிந்து கட்டி நிற்கிறார்.

சினிமா பொன்னையா

சமந்தாவின், 'மேஜிக்!'

பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்கப் போவதால், தென்னிந்திய நடிகையரெல்லாம் மிரண்டு போகும் அளவுக்கு, சமீபத்தில், மும்பை சென்று, 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளார், சமந்தா. அதில், புடவை, 'கெட் - அப்'பிலேயே, கண்ணாடி போல் இருக்கும் பிளவுசை அணிந்து, செம, 'ஹாட்'டாக 'போஸ்' கொடுத்துள்ளார். பாலிவுட்டின் மெகா கவர்ச்சி புயல்களுக்கெல்லாம், சமந்தா 'டப்' கொடுப்பதற்கு, முன்னோட்டமாகி விட்டதாக கருத்து பரவி உள்ளது. அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்!

 எலீசா

'டீல்' பேசும், பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயனுடன், டாக்டர் படத்தில் நடித்த, பிரியங்கா மோகன், தற்போது, டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரை, மூன்றாம் தட்டு நடிகர்களை வைத்து படமெடுக்கும் சில, 'லோ பட்ஜெட்' தயாரிப்பாளர்கள் அணுகினர்.

ஆனால், அவரோ, 'அடுத்தபடியாக, 'டாப் ரேஞ்ச் ஹீரோ'களுடன், 'டூயட்' பாட வேண்டும் என்பதுதான் என், 'டார்கெட்' ஆக உள்ளது...' என்று வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி, மேல்தட்டு 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு தொடர்ந்து துாது விட்டு வருகிறார்.

அதிலும், தானே நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு பட வேட்டை நடத்துகிறார். 'பிரியங்காவின் இந்த, 'அப்ரோச்' கூடிய சீக்கிரமே, உச்ச நடிகை என்ற உசரத்துக்கு அவரை கொண்டு சென்று விடும்...' என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். அதைத்தான் சொல்வானேன்; வாய்தான் நோவானேன்!

எலீசா

ரஜினியின், அரட்டை நண்பர்கள்!

அண்ணாத்த படத்திற்கு பிறகு, புதிய படத்தில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார், ரஜினி. இளையராஜாவின், 'ரெக்கார்ட்டிங்' தியேட்டருக்கு சென்று அவரை அடிக்கடி சந்திப்பதை போன்று, சில முன்னாள் இயக்குனர்கள், நடிகர்களையும் சந்தித்து, நட்பை பகிர்ந்து வருகிறார்.

அதோடு, ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ள, ஜனகராஜ், செந்தில் போன்ற முன்னாள் காமெடியன்களும், இப்போதும், அவரை வீடு தேடிச் சென்று சந்தித்து, பழைய சினிமா கதைகளை மணிக்கணக்கில் பேசி, 'ஜாலி'யாக அரட்டையடிக்கின்றனர்.

சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* தன்னை இளமையாக காட்டுவதற்காக, ஜிமிக்கி கம்மல் மற்றும் 'ஸ்லீவ்லெஸ்' ஜாக்கெட் அணிந்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும், நயன்தாரா, சிவப்பு, மஞ்சள் நிற புடவைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

* மலையாளத்தில் வெளியான, லுாசிபர் படத்தின் தெலுங்கு, 'ரீ - மேக்'கான, காட்பாதர் என்ற படத்தில், சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க மறுத்தார், நயன்தாரா. இப்போது, 51 வயதில், தங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், ரம்யா கிருஷ்ணன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us