தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதவன் போடும், புதிய கணக்கு!

தற்போது, மாதவனுக்கு எந்த மொழிகளிலுமே பெரிதாக பட வாய்ப்பு இல்லை. சில, 'வெப் சீரியல்'களில் நடித்தபோது, ஒரு படம் முழுக்க நடித்து சம்பாதிக்கும் பணத்தை, சில நாட்களிலேயே கொடுத்துள்ளனர். அதன் காரணமாகவே, ஒரு படத்தில் நடிக்கும் நேரத்தில் நான்கு சீரியல்களில் நடித்து, நான்கு மடங்கு சம்பாதிக்கலாமே என்று, புதிய கணக்கு போட துவங்கி விட்டார். ஏற்கனவே, இரண்டு ஹிந்தி, 'வெப் சீரியலில்' நடித்தவர், தற்போது புதிய தொடர்களில் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்டு வருவதுடன், மும்பையில் இருந்தபடியே கோலிவுட்டில், 'வெப் சீரியல்' இயக்கும் இயக்குனர்களுக்கும், துாது விட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

எல்லை தாண்ட மறுக்கும், நஸ்ரியா!

திருமணத்திற்கு முன், தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த, நஸ்ரியா, மலையாள நடிகர், பகத் பாசிலை திருமணம் செய்த பின், நடிப்பிலிருந்து விலகி இருந்தார். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தற்போது மீண்டும் தெலுங்கில், நானி நடிக்கும் ஒரு படத்தில், கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்தவர்கள், 'முதல் சுற்றில் தான் ரசிகர்களை முழுசாக ஏமாற்றி விட்டீர்கள். இரண்டாவது சுற்றிலாவது கவர்ச்சி தரிசனம் கொடுங்கள்...' என்று கேட்டுள்ளனர்.

'கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பெற்றோர் மற்றும் கணவரிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். உயிரே போனாலும் அதை மீற மாட்டேன்...' என்று சொல்லி, அதிர்ச்சி கொடுத்திருக்கிறார், நஸ்ரியா.

— எலீசா

மீண்டும் குத்துப்பாட்டில், சமந்தா!

அல்லு அர்ஜுனுடன், புஷ்பா படத்துக்காக, 'உ சொல்றியா...' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார், சமந்தா. அந்த பாடல், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, 'யூ டியூப்'பில் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக, தெலுங்கில், விஜய் தேவரகொண்டா நடித்து வரும், லிகர் படத்துக்காகவும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்.

முக்கியமாக, புஷ்பா படத்தின் வெற்றிக்கு, சமந்தாவின் பாடல் பெரிய பலமாக அமைந்ததால், தற்போது, தெலுங்கு சினிமாவின் பிரபல, 'ஹீரோ'கள் எல்லாம் தங்களது படங்களில், அவரை நடனமாட வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், குத்து பாட்டு மூலம் பெரிய அளவில், 'கல்லா' கட்ட துவங்கி இருக்கிறார், சமந்தா.

— எலீசா

மீண்டும் காமெடிக்கு திரும்பும், சந்தானம்!

காமெடியனாக இருந்த, சந்தானம் பல படங்களில் நாயகனாக நடித்துவிட்ட போதும், ரசிகர்கள், அவரை இன்னும், 'ஹீரோ'வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், தன், 'ரூட்'டை மாற்ற துவங்கியுள்ளார். அதாவது, இனி தான், 'ஹீரோ'வாக நடிக்கும் படங்களில், காமெடி கதாநாயகனாகவே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதுவரை, 'ரொமான்ஸ், ஆக் ஷன்' கதை சொல்லுமாறு, இயக்குனர்களிடத்தில் கூறி வந்தவர், இப்போது காமெடி கலந்த, 'ஹீரோ'வாக தன்னை வெளிப்படுத்தும் கதைகளை கேட்டு வருகிறார்.

— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* சமீபத்தில், ப்ரோ டாடி என்ற மலையாள படத்தை பார்த்து அசந்து போன, ரஜினி, அப்பட நாயகனான மோகன்லாலை பாராட்டி இருக்கிறார்.

* இதுவரை குளியல் காட்சிகளில் தான் நடித்த புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார், ஆண்ட்ரியா. தற்போது தன் வீட்டு, 'பாத்ரூம் டப்'பில் தான் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பரபரப்பை எற்படுத்தியுள்ளார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us