தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் படத்தில், ஷாருக்கான்!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வரும், ஹிந்தி நடிகர் ஷாருக்கான், தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி, 'ஹீரோ'கள், இயக்குனர்கள் மற்றும் 'ஹிட்' படங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அஜித், விஜய் போன்ற முன்னணி, 'ஹீரோ'கள் நடித்த படங்களையும் பார்த்து வருபவர், 'சூப்பர் ஹிட்' அடித்த ஒரு தமிழ் படத்தின் ஹிந்தி, 'ரீ - மேக்'கில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். அதோடு, அட்லி இயக்கத்தில் நயன்தாராவுடன், 'டூயட்' பாடும் ஷாரூக்கான், 'அடுத்தடுத்த என் படங்களுக்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

'மீடியா'க்களின் வாயடைத்த, ராஷ்மிகா!

தெலுங்கு சினிமாவில் முன்வரிசையில் இருக்கும், ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டிலும் கொடி நாட்டி விட்டார். இப்படி வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில், தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டாவை அவர் காதலித்து வருவதாக, இன்னொரு பரபரப்பு செய்தியும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து, 'மீடியா'க்கள், ராஷ்மிகாவிடம் கேட்டபோது, 'காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வது, இது எல்லாமே என் சொந்த விஷயம். இதை யாரிடத்திலும், 'ஷேர்' பண்ண விரும்பவில்லை. என் நடிப்பை பற்றி கேள்வி கேட்பதற்கு மட்டும்தான், 'மீடியா'க்களுக்கு, உரிமை உள்ளது. என் சொந்த விஷயம் பற்றி கேட்பதற்கும், பேசுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை...' என்று, அதிரடி பதில் கொடுத்து, வாயை அடைத்திருக்கிறார்.

— எலீசா

ஜெட் வேகத்தில் பறக்கும், நிவேதா பெத்துராஜ்!

தமிழ் நடிகர்களில், அஜித் குமார், ஜெய் போன்றோர் ரேஸ் கார் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், நிவேதா பெத்துராஜும் இதற்கான பயிற்சிகளை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரேஸ் கார் போட்டிகளிலும் கலந்து கொண்டு, அது குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். அதோடு, 'எதிர்காலத்தில், ரேஸ் கார் போட்டிகளில் கலந்து கொண்டு பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என் மிகப்பெரிய ஆசை...' என்கிறார்.

— எலீசா

மெகா நடிகருக்கு குறிவைக்கும், வடிவேலு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில், 'ஹீரோ'வாக நடித்து வரும் வடிவேலு, ரஜினி, விஜய் போன்ற முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில், காமெடியனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். 'ரஜினியின் புதிய படத்தில் கண்டிப்பாக நான் நடிப்பேன். காரணம், ரஜினியுடன் நான் நடித்த, சந்திரமுகி படத்திற்கு பிறகு, அவரது படங்களில் பெரிதாக காமெடி, 'ஒர்க் - அவுட்' ஆகவில்லை. ரசிகர்களுக்கும், ரஜினி படங்களில் முன்பு இருந்தது போல காமெடி காட்சிகள் இல்லை என்று, ஒரு குறை இருக்கிறது. 'மீண்டும், ரஜினியுடன் இணைந்து, நான் அதை தீர்த்து வைக்கப் போகிறேன்...' என்று, தன் காமெடி சகாக்களிடம் கூறி வருகிறார், வடிவேலு.

— சி.பொ.,

ராமராஜன் பாணியில், விஜய்சேதுபதி!

நடிகர் ராமராஜன், தன்னைத் தேடி எந்த பட வாய்ப்பு வந்தாலும், கதை பிடிக்கிறதோ இல்லையோ உடனே, 'அட்வான்ஸ்' வாங்கி, 'கல்லா' கட்டி விடுவார். இப்போது, விஜய்சேதுபதியும் அதையே பின்பற்றி வருகிறார். தன்னைத் தேடி எத்தனை பட வாய்ப்புகள் வந்தாலும், 'கால்ஷீட்' இல்லை என்று சொல்லி, யாரையும் திருப்பி அனுப்புவது இல்லை.

அந்த வகையில், விஜய்சேதுபதி நடிப்பில் பல படங்கள் தோல்வியடைந்தாலும், இடையிடையே ஒரு படம் வெற்றி பெற்று, அவரது மார்க்கெட்டை காப்பாற்றி விடுகிறது. அதனால், 'ராமராஜனின் பாணி, 'கல்லா' கட்டுவது மட்டுமின்றி, மார்க்கெட்டை மண்ணை கவ்வ விடாத ரொம்ப, 'சேப்டி'யான பாணி...' என்கிறார், விஜய்சேதுபதி.

சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித், 'ஹீரோ'வாக அட்லி இயக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

* விஜயின், பீஸ்ட் படத்தில், இயக்குனர் செல்வராகவன் ஒரு ஜாலியான அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளார்.

* சந்தானத்துடன், ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்திருக்கும், ரியா சுமன், அடுத்து, வெங்கட் பிரபு இயக்கும், மன்மதலீலை படத்தில், கதாநாயகியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us