sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 03, 2022

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லனாக விஜய் ஆண்டனி!

சமீபகாலமாக, விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற பிரபல கதாநாயகர்களே, அவ்வப்போது வில்லன் அவதாரம் எடுத்து வருவதை தொடர்ந்து, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன்-2 படம் மூலம், 'ஹீரோ - வில்லன்' என, இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மற்ற கதாநாயகர்கள் செய்யத் துணியாத அளவுக்கு கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

'ஒருவேளை, இந்த படத்தில் என், 'நெகடிவ் ரோல்' பேசப்பட்டால், அதன் பிறகு, விஜய் சேதுபதி பாணியில், மற்ற நடிகர்களின் படங்களிலும் வில்லன் அவதாரம் எடுக்க துவங்கி விடுவேன். அதற்காக, இப்போதே சில நட்பு வட்டார இயக்குனர்களிடம், 'டீல்' பேசி வருகிறேன்...' என்கிறார்.

—  சினிமா பொன்னையா

துாசு தட்டப்படும், சிம்பு படங்கள்!

மாநாடு படத்திற்கு பிறகு, சிம்புவின் மார்க்கெட் மீண்டும் எகிற துவங்கி இருப்பதால், அவர் நடித்து, கிடப்பில் போட்ட சில படங்களை, துாசி தட்டத் துவங்கி இருக்கின்றனர்.

அந்த வகையில், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது, விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படத்தை இயக்கியிருக்கும் நெல்சன், முதன்முதலாக, சிம்பு நடிப்பில், வேட்டை மன்னன் என்ற படத்தை தான்

இயக்கினார். அந்தப்படம் அப்போது கிடப்பில் போடப்பட்டது. தற்போது, சிம்புவின் மார்க்கெட் சூடுபிடித்து இருப்பதால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தை துாசி தட்டும் வேலை நடக்கிறது.

— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* கடந்த, 1980ல், பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற, தன் தந்தையின் வாழ்க்கை கதையை, படமாக எடுக்கப் போகிறார், பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனே.

* இளையராஜா இசையமைக்கும், 1,417வது படத்திற்கு, நினைவெல்லாம் நீயடா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, ஆதி ராஜன் இயக்குகிறார்.

* சரத்குமார் நடிக்கும், 150வது படத்திற்கு, தி ஸ்மைல் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், திரில்லர் கதையில் உருவாகிறது.

* கடந்த, 25 ஆண்டுகளாக, திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக தன், 'ஒய்எஸ்ஆர்' தயாரிப்பு நிறுவனம் மூலம், ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் உருவாகிறது.

* தனுஷ் நடித்த, வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில், வில்லனாக நடித்த அமிதாஸ், தற்போது, பரம்பொருள் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்து வருகிறார்.

* அண்ணாத்த படத்திற்கு பிறகு, முன்னணி, கதாநாயகர்களின் படங்கள் இல்லாமல் தடுமாறி வந்த, கீர்த்தி சுரேஷுக்கு, தற்போது, ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட பல படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இந்த படத்தை இயக்குகிறார்.

* பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் படங்களில் நடித்துள்ள, மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிக்கும், ராஜா டீலக்ஸ் என்ற படம் மூலம் தெலுங்கில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.

* நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும், மாமன்னன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், வடிவேலு. இந்த படத்தின், 'டைட்டில் ஹீரோ' உதயநிதியின் பெயருக்கு முன், வடிவேலுவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

* மாஸ்டர் படத்தை அடுத்து, விஜயின், 67வது படத்தையும் இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ். இந்த படம், ஏற்கனவே, கார்த்தியை வைத்து அவர் இயக்கிய, கைதி படத்தைப் போலவே கதாநாயகி மற்றும் பாடல்களே இல்லாத கதையில் உருவாகிறது.

* பிரியங்கா மோகன் தன்னுடன் இணைந்து நடித்த, டாக்டர் படம் வெற்றி பெற்றதால், அடுத்து, டான் படத்திலும், அவரையே நாயகியாக்கி விட்ட, சிவகார்த்திகேயன், 'இந்த கூட்டணி, அடுத்தடுத்த படங்களிலும் தொடரும்...' என்கிறார்.

* தற்போது, கூகுள் குட்டப்பா என்ற படத்தை தயாரித்துள்ள, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து, தன் குருநாதரான, இயக்குனர் விக்ரமனின் மகன், கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தை, தயாரிக்கப் போகிறார்.

* ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், அனுஷ்கா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us