தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜமவுலி படத்தில், உலக நாயகன்!

மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்க தீவிரமாக ஈடுபட்டு வரும் ராஜமவுலி, இந்த படத்தில், பாகுபலியில், சத்யராஜ் நடித்தது போன்று, கனமான கதாபாத்திரத்தில் கமலஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

'கமலை சந்தித்து, காட்சி வாரியாக கதையை சொல்லி, அவரை நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் போடப் போகிறேன். அதோடு, என் படத்தில் நடிக்க, இந்திய அளவில் உள்ள அனைத்து கதாநாயகர்களும் தயாராக இருக்கின்றனர்.

'இருப்பினும், என் புதிய படத்திற்காக உருவாக்கியுள்ள அழுத்தமான வேடத்திற்கு, கமலஹாசனை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதே, என் கருத்து. அதனால், அவர் எப்போது, 'கால்ஷீட்' கொடுத்தாலும், அப்போது படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

நடிகையரை அலற விடும், பிரியங்கா மோகன்!

டாக்டர் படத்தில் அறிமுகமானவர், தமிழ்நாட்டு நடிகை, பிரியங்கா மோகன். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று வருவதால், இப்போது அவர் மீது, முன்னணி, 'ஹீரோ'களின் கவனம் திரும்பி இருக்கிறது. முக்கியமாக, அண்டை மாநில நடிகையரை அழைத்து வந்த சில, 'ஹீரோ'கள், அவர்களை ஓரங்கட்டி, பிரியங்கா மோகன் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.

இதனால், இதுவரை, தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்து வந்த தெலுங்கு மற்றும் மலையாள நடிகையர், முதன் முறையாக தமிழ்நாட்டு நடிகையான, பிரியங்கா மோகனைப் பார்த்து, பயப்படத் துவங்கி இருக்கின்றனர். அந்த அளவுக்கு, மற்ற மொழி நடிகையருக்கு, 'டப்' கொடுக்கும் வகையில், 'ஹோம்லி- - கிளாமர்' என்று, கலந்து கட்டி அடித்து வருகிறார், பிரியங்கா மோகன்.

— எலீசா

த்ரிஷாவின், 20 ஆண்டு சாதனை!

த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் துவங்கி, 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இப்போது வரை, 'ஹீரோயினி' ஆகவே நடித்து வருபவர், இளமை மாறாமல் தன் உடற்கட்டை பராமரித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவின், 20 ஆண்டு திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு ஒரு விழா எடுக்க, சக நடிகர் - நடிகையர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை அல்லது கோவாவில் விழாவை நடத்த முடிவெடுத்து இருக்கின்றனர். த்ரிஷா நடிக்க துவங்கிய காலத்தில், அவருடன் நடித்த, நடிகர் - நடிகையர், இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகின்றனர்.

— எலீசா

தர்மசங்கடத்தில் சிக்கிய, தனுஷ்!

மனைவி ஐஸ்வர்யா ரஜினியை, விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த பின், தனுஷ் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்து விட்டன. மனைவியை பிரிந்த நேரம் தான், இப்படி அடுத்தடுத்து தடுக்கி விழுந்து கிடப்பதாக, பலரும் சொல்லத் துவங்கினர்.

அதனால், இந்த கருத்தை உடனடியாக மாற்றியாக வேண்டும் என்று, வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளார், தனுஷ். தற்போது தான் நடித்து இருக்கும் புதிய படங்களை எப்படியாவது வெற்றி பெற வைத்து, ஐஸ்வர்யா இல்லாமலும், தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்க, தீவிரம் காட்டி வருகிறார்.

எனவே, தன்னை வைத்து ஏற்கனவே, ஆடுகளம் மற்றும் அசுரன் போன்ற படங்களை இயக்கி, தனக்கு தேசிய விருது பெற்றுத் தந்த, வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும், அவரது, 66வது படத்தில், ராஷ்மிகா மந்தனா, மெஹரீன் பிர்சடா என்ற இரண்டு நாயகியர் நடிக்கின்றனர். இந்த மெஹ்ரின் பிர்சடா, தனுஷுடன், பட்டாஸ் என்ற படத்தில் நடித்தவர்.

* சாக்ரடீஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்ட நடிகை, கயல் ஆனந்தி, திருமணத்திற்கு பிறகு, தெலுங்கில், ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்தார்; தற்போது, தமிழில், ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us