தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனுஷ் எடுத்த, திடீர் முடிவு!

தான் நடித்து, 'சூப்பர் ஹிட்'டான படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில், இதுவரை கவனம் செலுத்தாமல் இருந்தார், தனுஷ். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருவதால், அவருக்கும், தன் 'சூப்பர் ஹிட்' படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஆர்வம் மேலோங்கி உள்ளது.

அதன் காரணமாக, தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்து, 'சூப்பர் ஹிட்'டான, புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அதோடு, முதல் பாகத்தை விட இந்த பாகத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்குவதோடு, இதுவரை தன்னை ரசிகர்கள் பார்க்காத வித்தியாசமான, 'கெட் - அப்'பில் வெளிப்படுத்துமாறும் அண்ணனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார், தனுஷ்.

அதனால், இதுவரை எந்த, 'ஹீரோ'களும் போடாத மாறுபட்ட, 'கெட் - அப்'பை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார், செல்வராகவன்.

சினிமா பொன்னையா

கிண்டலுக்கு ஆளான, நித்யாமேனன்!

மற்ற நடிகையரை விட, சற்று பூசினார் போன்று கொழுகொழுவென்று இருக்கும், நித்யாமேனன், தற்போது தொப்பை தெரியும் அளவுக்கு எடை

போட்டு இருக்கிறார். அதைப் பார்த்து, 'குண்டு கத்திரிக்காய், பப்ளிமாஸ்' என்று, அவரை உருவக்கேலி செய்யத் துவங்கி விட்டனர், ரசிகர்கள்.

ஆனபோதும், அதைப் பற்றி கவலைப்படாத நித்யாமேனன், 'உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக, என்னால் வாயைக் கட்டி,

வயிற்றைக் கட்டி எல்லாம் வாழ முடியாது. கஷ்டப்பட்டு நடித்து சம்பாதிப்பது, நன்றாக

சாப்பிடத் தான். அதனால், உங்கள் கிண்டலுக்கு பயந்து, பட்டினி கிடந்து, என்னால் உடம்பை வருத்திக் கொள்ள முடியாது...' என்று, 'ஹீரோயின் இமேஜ்' பற்றி கவலைப்படாமல் பதில் கொடுத்துள்ளார்.

எலீசா

லோகேஷ் கனகராஜின், அடுத்த திட்டம்!

கடந்த, 36 ஆண்டுகளுக்கு முன், கமல் நடித்து வெளியான, விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை, தற்போது இயக்கி, வெளியிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ். இதையடுத்து, '1991ல் மணிரத்னம் இயக்கத்தில், ரஜினி நடித்த, தளபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். அதோடு, அந்த படத்தில், ரஜினி நடித்த சூர்யா கேரக்டர், கதைப்படி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.

'அதனால், அந்த கதாபாத்திரத்தை மீண்டும் புதுப்பித்து, தளபதி 2 படத்தை இயக்க முடியும். இது குறித்து, விரைவில் ரஜினியை சந்தித்து, அதற்கான கதை சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார், லோகேஷ் கனகராஜ்.

ரஜினி, தளபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்வாரா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

—சி.பொ.,

மனம் மாறிய, பிரியங்கா மோகன்!

தனுஷ் நடிக்கும், கேப்டன் மில்லர் என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க, பிரியங்கா மோகனை ஒப்பந்தம் செய்தனர். அப்படத்திற்கு, 'கால்ஷீட்' கொடுத்திருந்தவர், திடீரென்று, அதே தேதியில் ஏற்கனவே ஒரு படத்தில் தான் ஒப்பந்தமாகி விட்டதாக சொல்லி, 'எஸ்' ஆனார்.

உண்மை என்னவென்றால், தனுஷ் படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு, தெலுங்கில், மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. 'மகேஷ்பாபுவா, தனுஷா?' என்று ஒப்பிட்டு பார்த்தவர், மகேஷ் பாபு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்பதால், தனுஷ் படத்துக்கு கொடுத்திருந்த, 'கால்ஷீட்'டை, 'வாபஸ்' பெற்று, மகேஷ்பாபு படத்துக்கு கொடுத்து, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்து விட்டார்.

இந்த செய்தியை, பின்னர் அறிந்த, தனுஷ், பிரியங்கா மோகன் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார்.

எலீசா

வடிவேலுவை, 'டென்ஷன்' ஆக்கும், காமெடிகள்!

சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்திருக்கும், வடிவேலு, தான் ஏற்கனவே நடித்து, பிரபலமான, நாய் சேகர் என்ற கேரக்டர் பெயரில், ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அதே டைட்டிலில் காமெடியன் சதீஷ் நடித்த படம் உருவாகி வந்ததால், படத்தின் தலைப்பை, நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று வைத்தனர்.

இந்நிலையில், பிரண்ட்ஸ் படத்தில், தான் நடித்த கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டரும் பிரபலம் என்பதால், அதை ஒரு படத்துக்கு டைட்டில் ஆக வைத்து, நடிக்க திட்டமிட்டு இருந்தார், வடிவேலு. ஆனால், யோகிபாபு நடிக்கும் ஒரு படத்திற்கு அந்த டைட்டிலை வைத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த வடிவேலு, 'நான் நடித்து பிரபலமான கேரக்டர்களின் பெயரை, இனி, எந்த காமெடியன்களும் தங்கள் படத்திற்கு தலைப்பாக வைக்கக் கூடாது...' என்று ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளார். விளைவு, தன் படத்துக்கு வைத்துள்ள கான்ட்ராக்டர் நேசமணி என்ற தலைப்பை, உடனடியாக மாற்ற சொல்லி விட்டார், யோகிபாபு.

சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* ஹிந்தியில், ஷாருக்கான், நயன்தாராவை வைத்து, அட்லி இயக்கி வரும், ஜவான் படத்தில் விஜய் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும், கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

* தன் அபிமான, 'ஹீரோ'கள் நடித்த படங்கள், திரைக்கு வந்தால், அதை தன் தோழியர் பட்டாளத்துடன், தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார், த்ரிஷா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us