தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்தியில், 'ரீ - மேக்'காகும், தமிழ் படங்கள்!

தமிழில், வெளியாகி வெற்றி பெற்ற, மாநகரம், கைதி, மாஸ்டர், சூரரைப் போற்று, விக்ரம் வேதா மற்றும் ராட்சசன் ஆகிய ஆறு படங்களும் தற்போது ஹிந்தியில், 'ரீ - மேக்' ஆகி வருகின்றன. இதில், விஜய் நடித்த, மாஸ்டர் படத்தின் ஹிந்தி, 'ரீ - மேக்'கில், சல்மான்கான்; கைதி - அஜய் தேவ்கன்; மாநகரம் - விக்ராந்த் மாஸே மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். சூரரை போற்று, 'ரீ - மேக்'கில் அக் ஷய் குமாரும்; விக்ரம் வேதா படத்தில், சைப் அலிகான்,- ரித்திக் ரோஷனும்; ராட்சசன் படத்தில், அக் ஷய் குமாரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாக, தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு, பாலிவுட்டில் மிகப் பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.

— சினிமா பொன்னையா

அனிருத்துக்கு எழுந்த, எதிர்ப்பு!

இசையமைப்பாளர் அனிருத், தன் படங்களுக்கு பாடல் எழுதும் பாடலாசிரியர்களிடம், பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத வார்த்தைகளை இணைத்து எழுதுமாறு வலியுறுத்துகிறார்.

இதன் காரணமாகவே, மக்களின் பயன்பாட்டில் இல்லாத பழைய வார்த்தைகளை இணைத்து பாடல் எழுதுகின்றனர், பாடலாசிரியர்கள். ஆனால், அப்படி வெளியாகும் பாடல் வரிகள், கெட்ட வார்த்தைகளாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை அறிந்த சில தமிழ் ஆர்வலர்கள், 'புதுமையான வார்த்தைகள் என்ற பெயரில், இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை பாடல்களில் இணைக்காதீர்கள். இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் இளசுகள் இதை திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றனர். தொடர்ந்து இந்த தவறை செய்தால், தமிழ் அறிஞர்கள் பொங்கி எழுவர்...' என்று, அனிருத்துக்கு, மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சி.பொ.,

சாய் பல்லவி செய்த, அலப்பறை!

தெலுங்கு சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு, 'இமேஜை' உருவாக்கி வைத்திருக்கிறார், சாய்பல்லவி. இவரது நடிப்பு திறமையின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக, சந்திரமுகி - 2 படத்தில், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தை, இரண்டாம் பாகத்தில் தொடர, அணுகினர்.

படத்தின் கதையை கேட்ட, சாய் பல்லவி, கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார். அதோடு, ஜோதிகா போல் அல்லாமல், தன் பாணியில் சந்திரமுகி கேரக்டரை உருவாக்குமாறும் இயக்குனரை அறிவுறுத்தி இருக்கிறார்.

கதை கேட்கும்போதே ஏகப்பட்ட அலப்பறை செய்ததால், சாய்பல்லவியை ஏறக்கட்டி விட்டது, சந்திரமுகி- 2 பட குழு.

எலீசா

குத்தாட்டத்துக்கு அழைக்கும், 'ஹீரோ'கள்!

'ரியல் பாக்சர்' ஆன, ரித்திகா சிங், இறுதிச்சுற்று மற்றும் ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது, பிச்சைக்காரன்-2 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது உடல் பெருத்து, உருண்டு திரண்டு காணப்படுகிறார். இந்த உடல்கட்டை வைத்துக் கொண்டு, வளர்ந்து வரும் சில, 'ஹீரோ'களை சந்தித்து, பட வேட்டை நடத்தினார். அவர்களோ, 'இப்படி வீங்கி போய் இருந்தால், எங்களுடன், 'டூயட்' பாட முடியாது; குத்தாட்டம் தான் ஆட முடியும்...' என்று சொல்லி, ரித்திகா சிங்கிற்கு, 'ஷாக்' கொடுத்திருக்கின்றனர்.

அதன் காரணமாக, 'சில காலம் என் உடற்கட்டை சரியாக பராமரிக்காமல் விட்டேன். மீண்டும் பழையபடி ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறி வந்து, உங்களை சந்திக்கிறேன்...' என்று சொல்லி, தன் சொந்த ஊருக்கு, பறந்துள்ளார்.

எலீசா

காமெடி நடிகையான, அனுஷ்கா!

தமிழ், தெலுங்கு சினிமாவில், முன்னணி நடிகையாக வலம் வந்த, அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக, தன் உடல் எடையை அதிகப்படுத்தினார். அதுவே, அவருக்கு வினையாகி விட்டது. தற்போது, அவரால், 'ஸ்லிம்'மான உடல் கட்டுக்கு மாறவே முடியவில்லை.

இதன் காரணமாக, அனுஷ்காவின் ஆஸ்தான, 'ஹீரோ'களும், இயக்குனர்களும், அவரை கைவிட்டு விட்டனர். தற்போது, 40 வயதாகி விட்ட அனுஷ்கா, திருமணம் செய்து, நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரோ, 'இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை. மேலும், தெலுங்கில், ஒரு காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அடுத்தபடியாக, கேரக்டர் நடிகையாக, அடுத்த, 'ரவுண்டை ஸ்டார்ட்' பண்ணப் போகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* விஜய் நடித்து வரும், வாரிசு படத்தில், ஏற்கனவே அவர் நடித்த, யூத் படத்தில் இடம்பெற்ற, 'ஆல்தோட்ட பூபதி நானடா...' என்ற பாடலை, 'ரீமிக்ஸ்' செய்கின்றனர்.

* ஆனந்தம், ரன், சண்டைக்கோழி என, பல படங்களை இயக்கிய, லிங்குசாமி, தற்போது, தெலுங்கு நடிகர், ராம் பொத்தெனேனியை வைத்து, தி வாரியார் என்ற படத்தை இயக்கியுள்ளார். அடுத்தபடியாக, சிம்புவை வைத்து, ஒரு படம் இயக்கப் போகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us