தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரிஸ்க்' எடுக்கும், ரஜினி!

வாரிசு, வாத்தி மற்றும் பிரின்ஸ் படங்களில் நடித்ததன் மூலமாக, விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர், தெலுங்கு சினிமாவில், நேரிடையாக, 'என்ட்ரி' கொடுத்தனர். இவர்களில், விஜய், சிவகார்த்திகேயனுக்கு எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காத நிலையில், தனுஷ் மட்டும் வெற்றி பெற்றார்.

தற்போது, ரஜினிக்கும், தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, தெலுங்கில், சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான, வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய ரவீந்திரனின் படத்தில் நடிக்க, கதை கேட்டுள்ளார், ரஜினி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.

சினிமா பொன்னையா

'ஹாரர்' பட நாயகியான, ராசி கண்ணா!

ராசி கண்ணா நடித்த படங்கள் பெரிதாக, 'ஹிட்' அடிக்காததால், தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை, 'ஹீரோ'கள். அதன் காரணமாகவே, தற்போது, 'ஹாரர்' படங்களில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறார், ராசி கண்ணா.

சுந்தர்.சியின், அரண்மனை - 4 படத்தில், மிரட்டலான பேய் வேடத்தில் நடித்து வருபவர், இதன் பிறகு, தென் மாநில படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் சினிமா வரை, 'ஹாரர்' படங்களில், அழுத்தமாக கால் பதிக்க முடிவு செய்துள்ளார்.

எனவே, இந்த படத்தில், அதிபயங்கரமாக அச்சுறுத்தும் அமானுஷ்ய, 'கெட் - அப்'பில் நடித்து, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், ராசி கண்ணா.

— எலீசா

மீண்டும் தயாரிப்பாளராக, தனுஷ்!

தன், 'ஒண்டர்பார் பிலிம்ஸ்' சார்பில், பல படங்களை தயாரித்த, தனுஷுக்கு, அவை அடுத்தடுத்து கையை கடித்ததால், படங்கள் தயாரிப்பதையே நிறுத்திக் கொண்டார். இந்நிலையில், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, மீண்டும், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்தை, தானே தயாரிக்கப் போகிறார், தனுஷ்.

'கடந்த முறை, படம் தயாரிப்பில் விட்ட பணத்தை, இந்த முறை எப்படியாவது எடுத்து விட வேண்டும். எனவே, புதுமுக இயக்குனர்களை தவிர்த்து, வெற்றி பெற்ற மெகா இயக்குனர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என முடிவு எடுத்துள்ளேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* உலக நடிகர், கோலிவுட்டில், 'நம்பர் ஒன்' நடிகராக இருந்த போதும், அவரது படக்கூலி, உச்ச நடிகர் மற்றும் தல,- தளபதி நடிகர்களை விட, குறைவாகவே இருந்து வருகிறது. அதனால், தற்போது, தன் படங்களின் வெற்றியை முன் வைத்து, படக்கூலியை உயர்த்தி வருகிறார், உலக நடிகர்.

அது மட்டுமின்றி, தற்போது தான் நடித்து வரும் இரண்டாம் பாகம் படம், 'சூப்பர் ஹிட்' ஆனால், உச்ச நடிகர் அளவுக்கு, தன் படக்கூலியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக, புதிதாக ஒப்பந்தமான படங்களை நிலுவையில் வைத்திருக்கும், உலக நடிகர்,'என் அடுத்த பிரமாண்ட படம், திரைக்கு வந்ததும், சம்பளத்தை பற்றி பேச்சு வார்த்தை நடத்தலாம்...' என்று, கூறியுள்ளார்.

சினி துளிகள்!

* இந்தியன் 2 படத்தில் 90 வயது சேனாபதி கதாபாத்திரத்தில் நடிக்கும், கமலஹாசன், அதிரடி சண்டை காட்சி ஒன்றில் துாள் கிளப்பியுள்ளாராம்.

* விஜய் நடித்து வரும், லியோ படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது, சென்னையில் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

* மாதவன், சித்தார்த்த இணைந்து நடிக்கும், தி டெஸ்ட் படத்தில் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us