தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரசிகர்களிடம் கருத்து கேட்ட, சிம்பு!

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், விஜய் போன்றோர், தங்களது ரசிகர்களை அடிக்கடி சந்திப்பர். அப்போது, தாங்கள் நடித்த படங்கள் குறித்து, கருத்து கேட்டு, அவர்கள் விரும்பும் வகையிலான கதைகளை அதிகமாக தேர்வு செய்து, நடித்து வருகின்றனர். அதே பாணியில், இப்போது, சிம்புவும், தன் பாதையை திருப்பி இருக்கிறார்.

அதன் காரணமாக, அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடும் சிம்பு, 'எந்த மாதிரியான கதைகளில் எல்லாம் என்னை திரையில் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்.

'தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக, ஒரு முக்கிய நடிகராக நானும் உருவெடுக்க வேண்டும். அதனால், என் படங்கள் திரைக்கு வரும்போது, பெரிய அளவில், பேனர், 'கட் - அவுட்' வைத்து வரவேற்பளித்து, பரபரப்பை ஏற்படுத்துங்கள்...' என, 'ஆர்டர்' போட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

'சைடு பிசினசில்' கல்லா கட்டும், சமந்தா!

ஒரு படத்தில் நடிப்பதற்கு, நான்கு முதல் ஐந்து கோடி சம்பளம் வாங்கி வரும், சமந்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு, 100 கோடி என்று கூறப்படுகிறது. அதோடு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் சொந்தமாக வீடு வைத்திருக்கும், சமந்தா, ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார்.

மேலும், 'சூப்பர் புட்' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவருக்கு, ஆண்டுதோறும், கணிசமாக வருமானம் வருகிறது. 'ஷாக்கி' என்ற பேஷன் பிராண்டையும் சொந்தமாக வைத்து, அதன் மூலமும் கல்லா கட்டி வருகிறார்.

இது தவிர, பல குளிர்பான நிறுவனங்களின், 'பிராண்ட் அம்பாசிடர்' ஆகவும் திகழ்ந்து வருகிறார். அந்த வகையில், சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை விட, 'சைடு பிசினசில்' சமந்தாவுக்கு, எக்கச்சக்க வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

எலீசா

மீண்டும் கவர்ச்சி அலப்பறையில், யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து, பிரபலமான, யாஷிகா ஆனந்த், சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த நேரத்தில், கார் விபத்தில் சிக்கியதால், அவரது மார்க்கெட் சரிந்து போனது. இருப்பினும், மீண்டும் தன் உடற்கட்டை சீரமைத்து, தற்போது முழு வேகத்தில் களத்தில் இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில், முதல் ரவுண்டை விட, இரண்டாவது ரவுண்டில் மிகப்பெரிய அளவில் கவர்ச்சி அலப்பறைகளை அவிழ்த்து விடப் போவதாகச் சொல்லி, தாறுமாறாக எடுத்த புகைப்படங்களை கோலிவுட்டில் சுற்றலில் விட்டிருக்கிறார், யாஷிகா. மேலும், 'ஹீரோயினி' ஆக தான் நடிப்பேன் என்று, 'கெத்து' காட்டாமல், குத்து பாட்டுக்கு ஆடுவதற்கும், 'டபுள் ஓ.கே.,' என்று, கமர்ஷியல் இயக்குனர்களுக்கு, கொக்கி போட்டுள்ளார்.

— எலீசா

விஜய், 'ரூட்'டுக்கு திரும்பிய விஷால்!

அருவா, கம்பு என்று, அதிரடி, 'ஆக் ஷன்' கதைகளாக நடித்து வந்த, விஷால், தற்போது, விஜய் பாணியில், 'ஆக் ஷன்' கலந்த ஜனரஞ்சகமான கதைகளில் நடிப்பதில் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

அதோடு, 'சமீப காலமாக, விஷால் சரியாக படப்பிடிப்பு தளங்களுக்கு வருவதில்லை. அடிக்கடி, 'டேக்கா' கொடுக்கிறார்...' என்று, கோலிவுட்டில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, தன்னை சரியாக வழி நடத்துவதற்கு, விஜயிடம், முன்பு மேனேஜராக இருந்தவரை, தன் மேனேஜராக நியமித்திருக்கிறார், விஷால்.

'ஒரு மேனேஜர், என்னை சரியாக கையாண்டால், நான் செல்லும் பாதை சரியாக இருக்கும். விஜயை போலவே, விஷாலும் சரியாக படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடியவர். இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் எடுப்பேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

* கடந்த தீபாவளிக்கு வெளியான, தன், நான்கெழுத்து படம், படு தோல்வி ஆனதோடு, தனக்கு போட்டியாக களம் இறங்கிய, பருத்திவீரன் நடிகரின் படம், 'சூப்பர் ஹிட்' ஆனதால், பலத்த அதிர்ச்சியடைந்தார், மெரினா நடிகர்.

இருப்பினும், வரும் தீபாவளிக்கு, பருத்திவீரன் நடிகரின் படம், திரைக்கு வருவதால், அப்போது, தன்னுடைய இன்னொரு நான்கு எழுத்து படத்தையும் வெளியிட்டு, பலப்பரீட்சைக்கு தயாராகி வருகிறார்.

அந்த அளவுக்கு, முன்பெல்லாம், சுள்ளான் நடிகரை தன் போட்டியாளராக நினைத்து செயல்பட்டு வந்த, மெரினா நடிகர், இப்போது, பருத்திவீரன் பக்கமும் திரும்பி இருக்கிறார்.

சினி துளிகள்!

* ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம், ஏலியன் கதையில் உருவாகி இருக்கிறது.

* சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் மூலம், தமிழில் அறிமுகமாகும், பாலிவுட் நடிகை, திஷா பதானி, அப்படத்தில், 'ஆக் ஷன்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

* தமிழில், அஜித் நடித்த, வேதாளம் படத்தின் தெலுங்கு, 'ரீ-மேக்'கில், சிரஞ்சீவி நடித்து வருகிறார். அப்படத்தில், அவருக்கு ஜோடியாக, தமன்னாவும், கீர்த்தி சுரேசும் நடித்து வருகின்றனர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us