sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் சேதுபதியை துரத்தும், வில்லன் வேடம்!

விஜய் சேதுபதியின், 'ஹீரோ' மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, ரஜினியுடன், பேட்டை, விஜயுடன், மாஸ்டர், கமலுடன், விக்ரம் போன்ற படங்களில், வில்லனாக நடித்தார். இதனால் அவரது, 'ஹீரோ' மார்க்கெட் சரிவடைந்தது.

தற்போது, மகாராஜா என்ற தன், 50வது படத்தில், 'ஹீரோ'வாக நடித்து வருகிறார். இருப்பினும், அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் அவரை, 'ஹீரோ' ஆக நடிக்க வைக்க முன் வராததால், உச்சத்தில் இருக்கும் தன் வில்லன் மார்க்கெட்டையும் விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார்.

இதையடுத்து, கார்த்தி நடிக்கும் ஒரு படத்திலும், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சில இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களிலும், வில்லனாக நடிக்க வைக்க, அவரை துரத்த துவங்கி விட்டனர்.

இதுவரை, தன்னை விட சீனியர் நடிகர்களுடன் மட்டுமே வில்லனாக நடித்து வந்த, விஜய் சேதுபதி, இப்போது, தன் சம கால நடிகர்களின் படங்களிலும் வில்லனாக அரிதாரம் பூச துவங்கி விட்டார்.

சினிமா பொன்னையா

மலையாள படங்களில், த்ரிஷா!

மலையாள சினிமாவில் நடித்து வந்த, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றோர், தற்போது தமிழ், தெலுங்கு என, கவனத்தை திருப்பி விட்டனர். இந்த இடைவெளியில், ஏற்கனவே மலையாளத்தில், ஹே ஜூட் என்ற படத்தில் நடித்த, த்ரிஷா தற்போது, மோகன்லாலுடன், ராம் படத்தில் நடிக்கும் போதே, டொமினோ தாமசுடன், ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையடுத்து அங்குள்ள, 'மெகா ஹீரோ'களுடன் இணைவதற்கு, தீவிரமாக கதை கேட்டு வரும், த்ரிஷா, தமிழ், -மலையாள படங்களில், 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்க, இலக்கு நிர்ணயித்து, இறங்கியடித்து வருகிறார்.

— எலீசா

தண்ணீர் மனிதனாகும், யோகி பாபு!

தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும், யோகி பாபு, கதையின் நாயகனாகவும் நடித்து, தன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது, இயக்குனர் சிம்புதேவன் இயக்கும், போட் என்ற படத்தில் நடித்து வருகிறார், யோகிபாபு. இந்த படம் முழுக்க முழுக்க, கடலுக்குள் ஒரு படகில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகிறது. கிட்டத்தட்ட தண்ணீருக்குள் வாழும் ஒரு தண்ணீர் மனிதனாகவே நடிக்கிறார், யோகிபாபு.

'இந்த கதை, இதுவரை நான் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

தமன்னாவுக்கு, 'கிரீன் சிக்னல்' கொடுத்த, காதலர்!

'ஐட்டம்' பாடலுக்கு ஆடுவதையும் வரவேற்பதாக கூறும் தமன்னா, 'வெப் சீரியல்களில், படுக்கையறை காட்சிகளில் நடிக்க, எந்த தடையும் விதிக்கவில்லை; என் காதலர், விஜய் வர்மா, சினிமா துறையைச் சார்ந்தவர் என்பதால், புரிந்து கொள்கிறார்.

'அதன் காரணமாகவே, தொடர்ந்து கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எந்த தயக்கமும் இன்றி தாராளமாக நடிக்கிறேன்...' என்று, விளக்கம் அளித்துள்ளார், தமன்னா.

கறுப்புப்பூனை!

பாணா காத்தாடி நடிகையை தொடர்ந்து, பையா நடிகைக்கும், உச்ச நடிகரின் நான்கெழுத்து படத்தில் நடித்துள்ள, 'ஐட்டம்' பாடலால் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த ரவுண்டை படு கவர்ச்சியாக அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ள பையா நடிகை. சில நடிகையரை போன்று, 'ஐட்டம்' பாடலுக்கு, ஆட்டம் போட, பேரம் பேசாமல், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட, 10 கோடி என்று சொல்லி அடிக்க துவங்கி இருக்கிறார். அதோடு, அம்மணியின் குத்தாட்டத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால், 'மாஜி ஹீரோ'களும் அவருக்கு, சிபாரிசு செய்ய துவங்கியுள்ளனர். இதனால், கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, தன் கவர்ச்சி கொடியை ஏற்றுவதற்கு வரிந்து கட்டி இருக்கிறார், பையா நடிகை.

சினி துளிகள்!

* கடந்த, 2002ல், விஜய் நடித்த, பகவதி படத்தில், அவருக்கு தம்பியாக நடித்தார், ஜெய்; 21 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது, விஜய் நடிக்கும், 68வது படத்திலும், அவருக்கு தம்பியாக நடிக்கப் போகிறார்.

* வெற்றி மாறன் இயக்கிய, விடுதலை படத்தில், கதையின் நாயகனாக நடித்த, சூரி அதையடுத்து, கொட்டுக்காளி படத்தில் நடித்து வந்தார். தற்போது, விடுதலை இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்காக, மீண்டும் போலீஸ், 'கெட் - அப்'புக்கு மாறி உள்ளார்.

* சிவகார்த்திகேயன் நடித்த, பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவரது நடிப்பில் திரைக்கு வந்திருக்கும், மாவீரன் படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ளது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us