தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் படத்தில், '3டி விஎப்எக்ஸ்' தொழில்நுட்பம்!

தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கிய, லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும், விஜய், அடுத்தபடியாக, வெங்கட் பிரபு இயக்கும், தன், 68வது படத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த படத்தில், விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ள நிலையில், அவரின் தோற்றத்தை, '3டி விஎப்எக்ஸ் ஸ்கேன்' என்ற, நவீன தொழில்நுட்பத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அது குறித்த, 'டெஸ்ட்' தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பணிகளுக்காக, விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவும், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தற்போது முகாமிட்டுள்ளனர்.

சினிமா பொன்னையா

அதிதி ஷங்கர் போடும், 'கண்டிஷன்'!

இயக்குனர் ஷங்கரின் மகளான, அதிதி ஷங்கர், விருமன், மாவீரன் படங்களை அடுத்து, அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, செல்வராகவன் இயக்கும், 7 ஜி ரெயின்போ காலனி படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்தது.

சில நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு தடை போட்டதோடு, 'நான் அப்படி நடித்தால், பிரபல இயக்குனரான என் தந்தையின், 'இமேஜு'க்கு களங்கம் ஏற்படும்...' என்று சொல்லி, அதை மாற்றுமாறு கூறியிருக்கிறார்.

ஆனால், கதையிலும், காட்சிகளிலும் எந்த திருத்தம் செய்ய விரும்பாத இயக்குனர் செல்வராகவன், அவருக்கு பதிலாக, மலையாள நடிகை, அனஸ்வரா ராஜனை ஒப்பந்தம் செய்து விட்டார்.

எலீசா

மீண்டும் விருது கனவில், கீர்த்தி சுரேஷ்!

மகாநடி படத்தில், மறைந்த நடிகை, சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், கீர்த்தி சுரேஷ். அதன்பின், அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

'தற்போது, தெலுங்கில், நாக சைதன்யா உடன் இணைந்து நடிக்கும் படத்தில், அதற்கு இணையான ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அந்த படத்தில், மீனவ பெண்களின் வாழ்வியல் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிப்பதால், மீண்டும் எனக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

'எனவே, அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்ப்பதற்காக, ஒரு வாரம், மீனவ பெண்களுடன் தங்கி, அவர்களின் வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்த்து, பிரதிபலிக்க போகிறேன்...' என்கிறார், கீர்த்தி சுரேஷ்.

சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

காதலித்து திருமணம் செய்து, ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது வரை, ஒழுக்கமாக இருந்தார், நான் கடவுள் நடிகரின் மனைவியான அந்த பாலிவுட் நடிகை. சமீபத்தில், வம்பு நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதை அடுத்து, தொடர்ந்து சினிமாவில் வரிந்து கட்டுவதற்கு தீவிரம் காட்டி வருகிறார்.

அதன் காரணமாக, தன் அபிமான, 'ஹீரோ'களுடன் மீண்டும் ஒட்டி உறவாடத் துவங்கி இருக்கிறார். இப்படி தன் மனைவி மீண்டும் நடிகர்களை நெருங்குவதை விரும்பாத நான் கடவுள் நடிகர், சினிமா துறை பக்கமே வரக் கூடாது என்று தடை போட்டு வருகிறார்.

இதையடுத்து, இருவருக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல் நடைபெறுவதால், அவ்வப்போது கோபித்து, தன் சொந்த ஊரான மும்பைக்கு பறந்து விடுகிறார், அம்மணி.

'இப்படியே போனால், கூடிய சீக்கிரமே இவர்கள் இருவரும் அறுத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கமாக ஓட்டம் பிடித்து விடுவர்...' என்று, கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

சினி துளிகள்!

* இளவட்ட ரசிகர்களை ஈர்க்கும் வகையில், நான் நடிக்கும் படங்களில், கண்டிப்பாக, ஒரு 'ஐட்டம்' பாடலாவது எனக்கு தர வேண்டும் என்று, வேண்டுகோள் வைத்துள்ளார், தமன்னா.

* காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து, தற்போது, மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா.

* சுமார், 34 கோடி மதிப்புள்ள, 'லம்போர்கினி' கார் வைத்திரக்கும், அஜித்குமார், சமீபத்தில், 24 கோடியில், ஒரு ஜெட் விமானம் வாங்கியுள்ளார்.

* 'மாஜி ஹீரோயினி' கிரண், விஜயின், லியோ படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us