தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிரஞ்சீவி!

தமிழில், விஜய் நடித்த, கத்தி படத்தின், தெலுங்கு ரீ - மேக்கில் நடித்த சிரஞ்சீவி, தற்போது, உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகும் இப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார், சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான, ராம் சரண்.

— சினிமா பொன்னையா

இருமொழி பட்டியலில் இடம் பிடிக்கும் நடிகைகள்!

சமீபகாலமாக, முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள், எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால், தெலுங்கு சினிமாவையும், குறி வைத்து படம் எடுக்கின்றனர். அதனால், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளுக்கும், பரிட்சயமான நடிகைகளுக்கே, மவுசு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இப்பட்டியலில், அனுஷ்கா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் இருக்கும் நிலையில், தற்போது, ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷும் அப்பட்டியலில் தங்களை இணைத்து, முன்னணி கதாநாயகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆடிக் கறக்கற மாட்டை ஆடி கறக்க வேண்டும்; பாடி கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்!

— எலீசா

மதுரை பெண்ணாக மாறும் ஹன்சிகா!

போகன் படத்திற்கு பின், சசிகுமாருடன், கொடிவீரன் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. ஏற்கனவே, விஜயுடன், வேலாயுதம் படத்தில், கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், இப்படத்தில், மதுரை வட்டார கிராமத்து பெண்ணாக, பாவாடை - தாவணி, 'கெட்டப்'பில் நடிக்கிறார். இக்கதா பாத்திரத்திற்காக, 10 கிலோ எடை குறைந் திருப்பதோடு, கிராமத்து பெண்களின், 'மேனரிசத்தை' உள்வாங்கி, பக்கா மதுரை பெண்ணாகவே மாறி, நடிக்கிறார். காற்றுக்குத் தகுத்தாற் போல் பாயை மாற்றி கட்டு!

— எலீசா

அதிரடி வில்லனாகும் பிரசன்னா!

மிஷ்கின் இயக்கிய, அஞ்சாதே படத்தில், வில்லனாக நடித்தவர், பிரசன்னா. தற்போது, துப்பறிவாளன் மற்றும் திருட்டுப் பயலே - 2 உள்ளிட்ட சில படங்களில், 'கேரக்டர்' கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கில், ராம் சரண் தேஜா நடிக்கும், ஜவான் என்ற படத்தில், மீண்டும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கயிருப்பவர், தன், 'பாடி லாங்குவேஜை' அதிரடியாக மாற்றும் பணியில், தற்போது ஈடுபட்டுள்ளார்.

— சி.பொ.,

சி.பி.ஐ., அதிகாரியாக தெலுங்கு நடிகர் ராணா!

பாகுபலி படத்தில் நடித்த பின், அப்பட நாயகன் பிரபாஸ் எப்படி இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டாரோ, அதேபோல், அப்பட வில்லன் ராணாவும், பிரபலமாகி விட்டார். தற்போது, ராஜிவ் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகும் படத்தில், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார், ராணா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தில், ராஜிவ் கொலை வழக்கை விசாரணை செய்த, சி.பி.ஐ., அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் நடிக்கிறார், ராணா.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

'கன்னித்தீவு...' பாடலில், குத்தாட்டம் போட்ட நடிகையை, தன் இயக்கத்தில் நடிக்க வைத்த மதுரைக்கார இயக்குனர், அம்மணி, எப்போது சென்னை வந்தாலும், விமான நிலையத்துக்கே சென்று, அவரை, 'பிக்கப்' செய்கிறார்; அத்துடன், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம், காரோட்டி சென்று, சேவை செய்கிறார். இதைப் பார்த்து, 'பிக்கப் நடிகரின், அடுத்த வாரிசு, இந்த இயக்குனர் தான்...' என்று, அவரை கேலி செய்கின்றனர், கோலிவுட் இயக்குனர்கள்.

நடன  சூறாவளி பாலிவுட்டில் இயக்கிய சில படங்கள் படுதோல்வியை சந்தித்ததால், இப்போது, படம் இயக்க வேண்டும் என்று சொன்னாலே, அலறியடித்து ஓடுகிறார். அத்துடன், இரண்டெழுத்து படத்தில், தன்னுடன் நடித்த, நான்கெழுத்து நடிகையுடன் ஐக்கியமாகி விட்ட நடிகர், தாரா நடிகையின் இடத்தை, இப்போது, அந்த நடிகைக்கு கொடுத்துள்ளார்.

சினி துளிகள்!

* தேவி படத்தை அடுத்து, யங் மங் சங் என்ற படத்தில், நாயகனாக நடித்து வருகிறார், பிரபுதேவா.

* சிவகார்த்திகேயனின், வேலைக்காரன் படத்தில், வில்லனாக நடித்து வருகிறார், பிரகாஷ்ராஜ்.

* தான் இயக்கி வரும், சந்தனத்தேவன் படத்தில், தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அமீர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us