தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...

இதப் படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!

இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் பெங்காலி என, பல மொழிப் படங்களில் நடித்துள்ள ரஜினி, தன் தாய்மொழியான மராத்தியில் இதுவரை நடிக்கவில்லை. இந்நிலையில், பஷாயதன் என்ற படத்தில், முதன் முறையாக மராத்தியில் அறிமுகமாகிறார். மேலும், 26 ஆண்டுகளுக்கு முன், மணிரத்னம் இயக்கிய, தளபதி படத்தில், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த ரஜினி, இந்த மராத்தி படத்திலும், மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கயிருக்கிறார்.

சினிமா பொன்னையா

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!

மனுநீதி மற்றும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர், தம்பி ராமைய்யா. அதன்பின், காமெடி மற்றும் குணசித்ர நடிகராகி விட்ட அவர், தன் மகன் உமாபதி ராமைய்யாவை, அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் ஓடவில்லை. அதனால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தன் மகன் விஜய்யை வைத்து படம் இயக்கி, அவரை பெரிய நடிகராக்கியது போன்று, தன் மகனையும் பெரிய நடிகராக்கப் போவதாக சொல்லி, தன் மகனை வைத்து, உலகம் விலைக்கு வருது என்ற பெயரில் ஒரு படத்தை, இயக்கி வருகிறார்.

— சி.பொ.,

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா!

கிளாமர் விஷயத்தில், கோடு போட்டு நடித்து வந்தவர், ரெஜினா. இதன் காரணமாக, முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை இழந்து வந்தார். ஆனால், ஜெமினிகணேசனும், சுருளிராஜனும் படத்திற்கு பின், 'இனிமேல் கிளாமராக நடிப்பேன்...' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் காரணமாக, இதற்கு முன், கவர்ச்சியை காரணம் காட்டி எந்தெந்த முன்னணி இயக்குனர்களின் படங்களையெல்லாம் தவிர்த்தாரோ அவர்களுக்கெல்லாம் தன் கவர்ச்சி ஆல்பத்தை அனுப்பி வருகிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!

— எலீசா

சன்னி லியோனின் புதிய பிசினஸ்!

கனடா நாட்டில் இருந்து வந்து இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர், சன்னி லியோன். தென்னிந்திய மொழிப் படங்களிலும் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடி வரும் இவர், தன் கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து, அழகு சாதனப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஒரு சீன நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில், புதிய மொபைல் போன் நிறுவனம் ஒன்றை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார், சன்னி லியோன்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சில படங்களில் வில்லனாக நடிக்க தன்னை அழைத்தபோது மறுத்து விட்டார், ஆக் ஷன் கிங் நடிகர். அதையடுத்து, தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவரை, யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், இப்போது, சில படங்களில் வில்லனாக நடிக்க தயாராகி விட்டார். அத்துடன், தடாலடியாக சம்பளம் கேட்டு வந்தவர், தற்போது, கம்பெனியைப் பொறுத்து சம்பளத்தை அனுசரித்து பேசி வருகிறார்.

சூப்பர் நடிகர் அரசியல் கோதாவில் இறங்க தயாரான நேரத்தில், உலக நாயகன் அரசியலில் பிரவேசித்து விட்டதால், தன் அரசியல் ஆலோசனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார், சூப்பர் நடிகர். அத்துடன், உலக நாயகன் கட்சி துவங்கி, ஒரு தேர்தலை சந்தித்து, அவரது மக்கள் பலம் என்னவென்பதை தெரிந்து, அதற்கடுத்த தேர்தலில், தான் அரசியல் களத்தில் இறங்கலாம் என்று முடிவெடுத்துள்ளார், சூப்பர் நடிகர்.

சினி துளிகள்!

* அஜித் நடிக்கும், விஸ்வாசம் படப்பிடிப்பு, ஜனவரியில் ஐதராபாத்தில் துவங்குகிறது.

* அறம் படத்திற்கு பின், இனிமேல் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போதும், பாடல் காட்சிகளிலும் கிளாமர் காட்டப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார், நயன்தாரா.

* விஷால் நடிக்கும், இரும்புத்திரை படத்தில், வில்லனாக நடிக்கிறார், அர்ஜுன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us