தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பறந்தேனே பாங்காக்கிற்கு! (1)

பறந்தேனே பாங்காக்கிற்கு! (1)

பறந்தேனே பாங்காக்கிற்கு! (1)


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த வாகனமும், 'ஹாரன்' சத்தம் எழுப்பவில்லை; எந்த இடத்திலும் யாரும் சாலை விதிகளை மீறவில்லை; எங்குமே, 'ஸ்பீடு பிரேக்'கரை பார்க்க முடியவில்லை.இதெல்லாம் எங்கே என்கிறீர்களா...

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் தான் இத்தனை ஆச்சரியங்களும்!

'தாய்லாந்து பற்றி நாங்கள் இப்படியெல்லாம் கேள்விப்பட்டது இல்லயே... அங்கு, 'மசாஜ்' கிளப்புகள் தானே நிறைய இருக்கிறது...' என்று இழுப்பவர்களுக்கு, உண்மையில் பாங்காக்கில் இருந்து கற்று வர நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று சொல்வதற்காகவே இந்த மினி தொடர் கட்டுரை.

'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் தான், பாங்காக்கில் இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தின், 'கம்பெனி விசிட்'டிற்காக என்னை தேர்வு செய்து, மனம் நிறைந்த வாழ்த்துகளுடனும், செலவிற்கு பை நிறைய பணமும் கொடுத்து அனுப்பினார்.

அவர் வழிகாட்டுதலின்படி, தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ விமானமான, 'தாய்' சர்வதேச விமானத்தில் பயணித்ததே தனி அனுபவம். பாங்காக் நகருக்கு செல்வதாக இருந்தால், உங்கள் தேர்வு, 'தாய் ஏர்வேஸாக' இருக்கட்டும். எங்காவது ஓரிடத்தில் சின்ன, 'ஜெர்க்' இருக்க வேண்டுமே... ம்ஹூம்... வெண்ணெயில் வழுக்கிக்கொண்டு செல்லும் கத்தி போல ஏறும்போதும், பறக்கும்போதும், இறங்கும்போதும் ஒரே சீராக இருந்தது.

கனிவான உபசரிப்பு, சாப்பாடு மற்றும் ரம்யமான சூழல் இவற்றுடன் எல்லாவித பானங்களும் அணிவகுத்து வருகின்றன. சாப்பிட்டு முடித்து துாங்குபவர்களுக்கு மெல்லிய கம்பளி போர்வை, தலையணை தந்து, தட்டிக்கொடுத்து துாங்க வைக்காத குறையாக, 'குட் ஸ்லீப்' சொல்லி, மொத்த விளக்கையும் அணைத்து விடுகின்றனர். துாக்கம் வராதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சீட்டுடன் இணைந்த, 'டிவி!' ரிமோட்டால், ஆங்கில - இந்தி சினிமா படங்களை பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம்; இல்லாவிட்டால், குழந்தையை போல, 'வீடியோ கேம்' விளையாடி மகிழலாம்.

இதையெல்லாம் ரசித்து முடிப்பதற்குள், சென்னையிலிருந்து டில்லிக்கு பறந்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ, அவ்வளவு நேரத்தில், பாங்காக் வந்துவிட்டதற்கான அறிகுறியாக விளக்குகள் எரிய துவங்கின. கடிகாரத்தை பார்த்தால், விமானம் நான்கரை மணி நேரம் பறந்திருக்க வேண்டும் என்று காட்டியது. முறைப்படி மூன்று மணி நேரம் தானே பறந்திருக்க வேண்டும்; ஏன் இந்த ஒன்றரை மணி நேர தாமதம் என்ற சந்தேகத்தை விமான பணிப்பெண்ணிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் வெட்கப்பட வைத்தது.

புத்தர் சிலையின் விலை ரூபாய், 1,500 கோடி!

தாய்லாந்து நாட்டின் மக்கள் தொகையில், 94 சதவீதம் பேர், புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அதனால், யோக நிலை, நின்ற, படுத்த நிலையில் என்று, பார்க்கும் இடமெல்லாம்  எல்லாம் புத்தர் சிலைகள்.

இதில், பாங்காக்கில் உள்ள தங்க புத்தர் சிலை மிகவும் பிரசித்தம்.

இந்த தங்க சிலை ஒன்பது பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மூலம் ஒன்பது பாகங்களையும் பிரிக்கலாம்; பின் இணைக்கலாம். இது, சிற்ப கலையின் உச்ச அதிசயம்!

தங்க புத்தரின் சிலை, 9 அடி, 9 அங்குல உயரமுள்ளது. எடையோ ஐந்தரை டன்; அவ்வளவும் சுத்தத் தங்கம். தங்க புத்தரின் இன்றைய மதிப்பு, இந்திய ரூபாயில் 1,500 கோடி!

130 நாடுகளில் விற்கப்படும் அஜினோமோட்டா!

உணவு சந்தையில், 108 ஆண்டுகளாக புழங்கி வரும் ஜப்பானிய உப்பு தான், அஜினோமோட்டா. இது, சுவையூக்கி. அதாவது, எந்த உணவுப் பொருளானாலும், அதன் சுவையை கூட்டுவது தான் இந்த உப்பின் குணாதிசயம். உலகில், 130 நாடுகளில் இது விற்கப்படுகிறது.

உலகின் உணவுப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவின், எப்.டி.ஐ., உணவு பரிசோதனை கூடத்தின் ஆய்வுக்கு உட்பட்டே வெளிவருகின்றன.

எப்.டி.ஐ.,க்கு பின், அந்தந்த நாடுகள், தங்களின் அதிகாரப்பூர்வ அறிவியல் கூடங்களில் உணவுப் பொருட்களை சோதனையிடுகின்றன.

அமெரிக்காவின், எப்.டி.ஐ., மற்றும் இந்தியாவின், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆகிய அதிகாரப்பூர்வ உணவுப் பொருட்களின் ஆராய்ச்சி கூடத்தில், ஆராய்ச்சி செய்யப்பட்ட பின், ஒவ்வொரு ஆண்டும் சந்தைக்கு பொருட்கள் வரும். அஜினோமோட்டாவும் அப்படி தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், போட்டி நிறுவனங்களின் தரக்குறைவான தயாரிப்பு காரணமாக, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு, அஜினோமோட்டா பழி சுமக்கிறது. இதன் காரணமாக, எதிர்மறையான பார்வையையும், ஊடகங்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இதற்கு தீர்வு காண வேண்டும். அஜினோமோட்டாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரின், இந்தியாவிற்கான அஜினோமோட்டாவை தயாரிக்கும் கம்பெனிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கரும்பு மற்றும் மரவள்ளி கிழங்கு போன்ற மூலப்பொருட்களை கொண்டு, பால் தயிராகும் இயற்கையான நொதித்தல் முறையில், 'மோனோசோடியம் க்ளூடமேட் ' தயாராவதை காண்பித்தனர். பின், பாங்காக்கில் உள்ள பிரபலமான பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில், தனி அரங்குகளில் அஜினோமோட்டா அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், அதை, மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதையும் காண முடிந்தது.

திருநெல்வேலி அல்வா என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், திருநெல்வேலியில் உள்ள ஒன்றிரண்டு கடைகளில் வாங்கப்படும் அல்வாக்களை தவிர, மற்ற கடைகளின் அல்வாக்கள் ருசிக்காது. மோசமான கடைகளில் அல்வா சாப்பிட்டோர், இதை தான் பெரிதாக திருநெல்வேலி அல்வா என்று பெருமை அடித்துக் கொண்டார்களோ என்று சலித்துக் கொள்வர். அதுபோல, அஜினோமோட்டா என்ற பெயரில் விற்கப்படும், எல்லாமே அஜினோமோட்டா கிடையாது. தரம் குறைந்தவை அதிகளவில் கிடைக்கிறது. ஒரு பாக்கெட் வாங்கும் விலையில், தரம் குறைந்தவை நான்கு பாக்கெட்கள் கிடைக்கும்.

ஆகவே, அஜினோமோட்டாவின் தரத்தை, குணத்தை அறிய வேண்டும் என்றால், அது ஒரிஜினல்தானா என்று பார்த்து வாங்க வேண்டும். ஒரிஜினல் அஜினோமோட்டா, சிவப்பு கிண்ண முத்திரை கொண்ட பாக்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

— தொடரும்.

எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us