தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகமகா கோடீஸ்வரர்!

உலகமகா கோடீஸ்வரர்!

உலகமகா கோடீஸ்வரர்!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கினாலே, பக்கத்து வீட்டுக்காரர்களை, ஏதோ, வேற்றுக் கிரகவாசிகளைப் போல் பார்த்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செல்லும் மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். இவர்களெல்லாம், புருனே சுல்தானை போன்ற உலகப் பெரும் பணக்காரர்களாகி விட்டால், எப்படி நடந்து கொள்வர் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நடுக்கமாக இருக்கிறது.

அதை விடுங்கள். புருனே சுல்தான் அவ்வளவு பெரிய கோடீஸ்வரரா என, படிக்கும்போதே உங்கள் புருவம் உயர்வது தெரிகிறது. கோடீஸ்வரர் என்ற ஒற்றை வார்த்தையில் அவரை அடக்கி விட முடியாது. அவருக்குள்ள சொத்தை கணக்கிட்டால், மயக்கமே வந்து விடும்.

இந்தோனேசியா அருகே உள்ள, செல்வச் செழிப்பு மிகுந்த குட்டி நாடு புருனே. இங்கு மன்னராட்சி நடக்கிறது. தற்போது, மன்னராக இருப்பவர், சுல்தான் ஹசனல் போல்க்கையா. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர். இவருக்குள்ள சொத்து விவரங்கள் பற்றி கூறும்போது, ஒவ்வொரு நொடியும், 5,878 ரூபாய் அதிகரிப்பதாக கூறுவது உண்டு. அதாவது, ஒவ்வொரு நாளும், அவரது சொத்து மதிப்பு, 2.11 கோடி ரூபாய் அதிகரிக்கிறது. அப்படியானால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

சாதாரண மனிதர்களுக்கு, எட்டாக் கனியாக இருக்கும் தங்கம், புருனே சுல்தானின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருக்கிறது. இவர் வசிக்கும் அரண்மனையை, ஒரு மினி சொர்க்கம் எனலாம். இந்த அரண்மனையில், 1,788 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும், தங்கம் மற்றும் வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அந்த அரண்மனையில், 257 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. இந்த அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள், இங்குள்ள ஒவ்வொரு அறையையும், 30 நொடிகள் சுற்றிப் பார்த்தாலே, அனைத்து அறைகளையும் பார்த்து முடிப்பதற்கு, 24 மணி நேரம் ஆகும்.

தங்க மூலாம் பூசப்பட்ட, சொகுசு வசதியுடன் கூடிய விமானம் ஒன்றும், புருனே சுல்தானுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், ஆறு சிறிய விமானங்களும், ஹெலிகாப்டரும், இவரது அரண்மனையில் உள்ளன. புருனே சுல்தான், லண்டன் சென்றால், அவர் பயணம் செய்வதற்காகவே, லண்டனில் எப்போதும் ஒரு சொகுசு காரை ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறது, பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று.

சுல்தானின் மகளின் திருமண கொண்டாட்டங்கள்,

14 நாட்கள் நடந்தன. இதற்காக, கணக்கு வழக்கு இல்லாமல், பணம் வாரி இறைக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், வி.வி.ஐ.பி.,க்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

திருமணத்தின்போது, வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை இளவரசி அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த மலர்க் கொத்து, மணமக்கள் அமர்வதற்காக வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனம் ஆகியவற்றிலும் வைரங்கள் டாலடித்தன. பல கோடி மதிப்புள்ள காதணியையும் அவர் அணிந்திருந்தார். புருனே மன்னரிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மட்டும், 531 உள்ளன.

இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். படித்து முடிப்பதற்குள், நாம் தான் களைப்படைந்து விடுவோம்.

***

சி. சண்முகநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us