தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இரு கால்களையும் இழந்த ஹரி, எவரெஸ்ட் சிகரமேறி சாதனை!

இரு கால்களையும் இழந்த ஹரி, எவரெஸ்ட் சிகரமேறி சாதனை!

இரு கால்களையும் இழந்த ஹரி, எவரெஸ்ட் சிகரமேறி சாதனை!


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு கால்களை இழந்த, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியிருக்கிறார். இதுவரை, இரண்டு கால்களும் இழந்த யாரும் எவரெஸ்ட் சிகரம் ஏறியதில்லை என்பதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நேபாளத்தைச் சேர்ந்தவர், ஹரி புதா மகார், வயது: 44. இவர், ராணுவத்தில் பணியாற்றும்போது, கண்ணிவெடியில் சிக்கி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். இருப்பினும், நம்பிக்கையை இழக்காமல் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார்.

கோல்ப், பனிச்சறுக்கு, ஸ்கை டைவிங், ராக் க்ளைம்பிங், சக்கர நாற்காலி ரக்பி மற்றும் சக்கர நாற்காலி கூடைப் பந்தாட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் விளையாடி, தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

விளையாட்டில் மட்டுமின்றி, சாகச நிகழ்விலும் பங்கேற்க முடிவு செய்து, ஹெலிகாப்டரில் இருந்து டைவிங் செய்வது, மலையேற்றம் என, ஈடுபட்டு வருகிறார்.

உலகின் பிரபலமான, ஸ்காட்லாந்து, பென் நெவிஸ் (1,345 மீட்டர்), ஐரோப்பா, மவுண்ட் பிளாங்க் (4,808.72 மீட்டர்), ஆப்ரிக்கா, கிளிமஞ்சாரோ (5,895 மீட்டர்), நேபாளம், மேரா பீக் (6,476 மீட்டர்) மற்றும் ஆப்ரிக்கா, மவுண்ட் டூப்கல் (4,167 மீட்டர்) ஆகிய மலைகளின் மீது வெற்றிகரமாக ஏறி, சாதனை புரிந்துள்ளார்.

இரண்டு முழங்கால்களுக்கும் கீழே, துண்டிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்ட செயற்கை கால்களுடன், சாதாரணமானவர்கள் போல, மலை ஏறுகிறார். இந்த நிலையில் தான், மிக உயரமான, 29 ஆயிரத்து, 32 அடி உயரமான, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என, முடிவு செய்தார்.

திடீரென ஏற்படும் பனிப்பொழிவு, பனிச்சறுக்கு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளைக் கொண்ட இந்த பயணம், அவ்வளவு எளிதானதல்ல. திடகாத்திரமானவர்களே, பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உடல் ஊனமுற்றவர்கள், எவரெஸ்ட் சிகரம் ஏற தடையே உள்ளது.

ஆனால், கோர்ட்டில், மலையேறிய முந்தைய சாதனைகளை சொல்லி, எவரெஸ்ட் சிகரம் ஏற அனுமதி பெற்றார், ஹரி புதா மகார். அதன்படி சமீபத்தில், எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி, இறங்கியுள்ளார்.

'உடல் ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் ஊக்கமும், உற்சாகமும் தரும் என்பதால், இந்த சாதனையில் இறங்கினேன். மக்கள் தரும் வரவேற்பும், பாராட்டுக்களும் அடுத்தடுத்து உள்ள சிகரங்களுக்கு செல்லும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது...' என்கிறார், ஹரி.

ரோஹன் ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us