PUBLISHED ON : நவ 26, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம் கண்ணுார், தில்லாங்கேரியை சேர்ந்தவர், ராஜகோபாலன்; காந்திஜியின் பக்தரான இவர், 21 வயதில், சம்பல் காடுகளுக்கு போனார். அக்காலத்தில், சம்பல் கொள்ளையர் என்றாலே, பயந்து நடுங்குவர், மக்கள். அங்கு சென்ற ராஜகோபாலனை, மரத்தில் கட்டி வைத்து அடித்தும், பல்வேறு கொடுமைகளும் புரிந்தனர், கொள்ளையர். அக்கொடுமைகளை எல்லாம் சகித்து, பூலான்தேவி உட்பட நுாற்றுக்கணக்கான கொள்ளையர்கள் மனதில் சாத்வீகத்தை ஏற்படுத்தி, சரணடைய வைத்தார், ராஜகோபாலன்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் பரவி இருப்பது, சம்பல் காடுகள். இங்கு, 1970ல், காந்தி ஆசிரமம் செயல்படத் துவங்கியது. இந்த ஆசிரமத்தை மையமாக வைத்து, காந்திஜியின் பெயரால் கொள்ளையர்களை திருத்தும் பணியை செய்தார், ராஜகோபாலன்.
— ஜோல்னாபையன்.

