PUBLISHED ON : ஜூலை 08, 2018

அ நிறம் | அளவு
கடந்த, 2017ல், சீனாவில், 67வது உலக அழகிப் போட்டி நடைபெற்றதும், நம் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்த விஷயம் தான்!
மனுஷி சில்லர் ஏற்கனவே, 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்றவர் என்றாலும், உலக அழகி பட்டம் இவருக்கு கிடைத்ததற்கு, இறுதிச் சுற்றில், இவர் கூறிய பதில் தான் காரணமாம்.
'உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது...' என்ற நடுவர்களின் கேள்விக்கு, 'தாய்மை தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி; இந்த பணிக்கு சம்பளமாக பணம் தரப்படா விட்டாலும், அன்பும், பாசமும், மரியாதையும் அதிகமாக கிடைக்கும். எனவே, உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி தாய்மையே...' என்று கூறியுள்ளார்.
இந்த பதில் நடுவர்களை கவர்ந்ததால், அவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்தது.
- ஜோல்னாபையன்.
