தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'ஹாலிவுட்'டும் நமக்கு அண்ணன் தான்!

'ஹாலிவுட்'டும் நமக்கு அண்ணன் தான்!

'ஹாலிவுட்'டும் நமக்கு அண்ணன் தான்!


PUBLISHED ON : ஜூன் 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏதாவது ஒரு பரபரப்பு நிகழ்ச்சி நடந்தால் போதும். உடனே, அதை வைத்து, படமாக எடுக்க, பல பிரபல திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் துடிப்பது, நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இந்த விஷயத்தில், 'ஹாலிவுட்'டும் நமக்கு அண்ணன் தான். அதே சமயம், பழைய படங்களும் ஒரு, 'ரவுண்ட்' வரும்.

உலகை உலுக்கிய வைரஸ் மற்றும் நோய்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட சில திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்...

கன்டேஜியான் - 2011



கடந்த, 2002ல், 'சார்ஸ்' நோய், 2009ல், 'ஸ்வைன் ப்ளூ!' இந்த இரண்டையும் வைத்து, இவற்றின் தாயகம் சீனா என்ற அடிப்படையில், 20௧1ல், ஸ்டீபன் சோடர்பெர்க் என்பவரால், கன்டேஜியான் என்ற பெயரில், ஒரு படம் தயாரிக்கப்பட்டு வெளியானது.

இதை சொல்வதற்கு காரணம், 'கொரோனா'வும், சீனாவிலிருந்து கிளம்பி, உலகம் முழுவதும் இன்று பீதியை பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த நேரத்தில், பழைய படத்தை, திரையிட்டால், இன்னொரு முறை, வலம் வருமே என, மார்ச் 31ல் 'நெட்பிளிக்ஸ்'ல் வெளியானது. இப்படி மீண்டும், 'ரென்ட்'க்கு எடுத்து ஓடும் பிரபல படங்களில், இதற்கு, 11வது இடம் கிடைத்துள்ளது.

அவுட் பிரேக் - 1995



கடந்த, 1995ல், உல்ப் காங்க் பீட்டர்சன் தயாரித்த, அவுட் பிரேக் என்ற படம், 'மொடாபா' என்ற நோய், மத்திய ஆப்ரிக்க நாடான, காங்கோவின் சைரி நகரிலிருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஒரு நகருக்கு பரவுவது போன்ற கதை அமைப்பு கொண்டது.

ரிச்சர்ட் பிரிஸ்டன் என்ற எழுத்தாளர், 'தி ஹாட் ஷோன்' என்ற பெயரில், ஆப்ரிக்கா நாடான காங்கோவிலிருந்து, 'எபோலா' பரவியதை வைத்து, ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதை பின்புலமாக வைத்து, அவுட் பிரேக், 1995ல் வெளிவந்து ஓடியது.

இப்போது, 'கொரோனா' உலகையே ஆட்டி வைப்பதால், இந்த படம், மறு வலம் வந்துள்ளது.

வைரஸ் 2019



கேரளாவில், 'நிபா' வைரஸ், 2018ல், பாடாய் படுத்தியது. இதை வைத்து, மலையாளத்தில், மருத்துவ, 'த்ரில்'லரான படம் எடுத்து, 2019ல் வெளியிடப்பட்டது. வீட்டில் தனித்திரு, விழித்திரு சமயத்தில், நிச்சயம் பார்க்க வேண்டிய, 10 படங்களில், இதுவும் ஒன்று என, அமெரிக்கன் பாப்.கல்சர் சைட், வல்சர்.காம் வலியுறுத்தியது.

12 குரங்குகள் - 1995



ஒரு ஆட்கொல்லி வைரசால், உலகமே பாதிக்கப்படுகிறது. அதை எப்படி ஒழிக்கலாம் என தீர்மானிக்க, பழமையான உலகிற்கு சென்று கண்டுபிடித்து, அதை வைத்து, ஆட்கொல்லி வைரசை முடிவுக்கு கொண்டு வருவதாக, 12 குரங்குகள் கதையும், படமும் கூறும். இது, இப்போது, 'கொரோனா' வைரசால், மீண்டும் வலம் வருகிறது.

சில்டரன் ஆப் மென் (மனிதர்களின் குழந்தைகள்) - 2006



கடந்த, 1992ல், பி.டி.ஜேம்ஸ் என்பவர், எதிர்பாராத பேராபத்து அல்லது பெரும் துன்பம் வந்தபின், அதை எப்படி எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவது என, எழுதியிருந்தார். இதை மையமாக வைத்து, அல்போன்சா குவாரென் என்பவர், சில்டரன் ஆப் மென் என்ற பெயரில் படம் எடுத்து, 2006ல் வெளியிட்டார்.

இப்போது இந்த படமும் உலகம் முழுவதும், 'கொரோனா' வைரஸ் தாக்குதலால், மற்றொரு முறை வலம் வந்து, மிரட்டுகிறது.

ஆர். ராதாகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us