PUBLISHED ON : செப் 08, 2019

அ நிறம் | அளவு
நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், 'பசு தெரபி' சிகிச்சை முறை, சில இடங்களில் பின்பற்றப்படுகிறது. அதாவது, பசுக்களை கட்டி தழுவினால், மன அழுத்தம் குறைந்து விடும் என்பது தான், இதன் சிறப்பம்சம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், சுஜானெ என்ற பெண்ணும், அவரது கணவரும், பசு தெரபி திட்டத்தை துவக்கியுள்ளனர்.
இதன்படி, மன அழுத்தம் உள்ளவர்கள், பசுக்களை கட்டி தழுவி, கொஞ்சி குலாவ அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு மணி நேரத்துக்கு, 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பசுக்களை கட்டித் தழுவினால், சில மணி நேரங்களில், தங்கள் மன அழுத்தம் குறைந்து விடுவதாக கூறுகின்றனர், இந்த சிகிச்சையை பெற்றவர்கள்.
—ஜோல்னாபையன்.
