தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உதவ மனம் இருந்தால் போதும்!

உதவ மனம் இருந்தால் போதும்!

உதவ மனம் இருந்தால் போதும்!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன்னலமின்றி பிறருக்கு உதவி செய்து, அவர்கள் சந்தோஷத்தில் இறைவனை காண்கின்றனர், சிலர். அந்த வகையில், கூலி வேலை செய்யும் விஜி என்ற, 43 வயது பெண், தன் வருமானத்தில், பலருக்கும் உதவி செய்து வருகிறார். கேரள மாநிலம், திருச்சூர் அருகே, செறு துருத்தியில் வசிக்கும் இவர், 'சாலையில் அலைந்து திரிவோர் மற்றும் மன நலமில்லாதோர், குப்பை தொட்டியிலிருந்து உணவுப் பொருட்களை அள்ளி தின்பதை கண்டபோது தான், அவர்களுக்கு உணவு அளிக்கும் எண்ணமே வந்தது...' என்கிறார்.

தன் வங்கி சேமிப்பிலிருந்து, முவாயிரம் ரூபாயை எடுத்து, உணவுப் பொருட்கள் வாங்கி, சாலை ஓரம் அடுப்பை வைத்து, சமையல் செய்து, ஒரு சிலருக்கு உணவளிக்க துவங்கி, இன்று ஏராளமானவர்களில் பசிப் பிணியை தீர்த்து வருகிறார்.

நல்ல உள்ளங்கள், ஜாதி, மத வேற்றுமை பாராமல், விஜிக்கு உதவுகின்றனர். உதவ நினைப்போர், 'K.Viji, A/C No.67231237677, IFSC.SBIN0070971, SBI Cheruthuruthy, Trissur' என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்!

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us