தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இளம் சிவப்பு நிறத்தின் மீது காதல்!

இளம் சிவப்பு நிறத்தின் மீது காதல்!

இளம் சிவப்பு நிறத்தின் மீது காதல்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்தவர், நோன்தாபுரி, 26. 'பிங்க்' எனப்படும் இளம் சிவப்பு நிறத்தின் மீது இவருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே, ஒருவித மயக்கம் உண்டு.

காலங்கள் உருண்டோடினாலும், அந்த நிறத்தின் மீதான காதல் மட்டும் இவருக்கு குறையவில்லை. தன்னைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் இடங்களையும் இளம் சிவப்பு நிறமாக மாற்றியுள்ளார்.

இவரது வீட்டிற்கு இளம் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசியுள்ளார். குளியல் அறை, படுக்கை அறை, சோபா என, அனைத்துமே இளம் சிவப்பு நிறம் தான். இவர் வைத்துள்ள ஸ்கூட்டருக்கும் அதே நிறம் தான்.

'இந்த நிறத்தின் மீது ஏன் இப்படி ஒரு காதல்...' என கேட்டால், 'தெரியலைங்க... இளம் சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சொக்கிப் போய் விடுகிறேன்...' என்கிறார்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us